இசை முதல் இசை வரை – ‘வானவில் வாழ்க்கை’ ஜனனி ராஜன்

jananai33அனைத்து மக்களுக்கும் புரிகிற மொழி  இசை.இது இன்பத்தில்  முதன்மையானதும் கூட. கலை என்கிற வகையில் எவ்வித கல்வி அறிவும் இல்லாத சாமானியனையும் சென்றடையக் கூடியது இசை.அத்தகைய இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு வரும் படம் தான் ‘வானவில் வாழ்கை’. இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கும் ‘வானவில் வாழ்க்கை’ திரைப்படத்தின் பின்னணி பாடகியாக,நடிகையாக அறிமுகமாகும் ஜனனி ராஜன் தனது முதல் பட அனுபவத்தை வியப்புடன் விவரிக்கிறார்.

“ எனது சிறு வயது முதலே இசை மீது எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு, 13 வருடமாக கர்நாடக இசை கற்று வருகிறேன். பள்ளி, கல்லூரி காலங்களிலிருந்தே பல இசை நிகழ்ச்சிகள் பாடியுள்ளேன். இந்த படத்தில் வாய்ப்பு கிடைத்ததும் இசையால்தான். இங்கு பாடவும், நடிக்கவும் தெரிந்தவர்களே மட்டுமே தேர்ந்தெடுக்க படுவார்கள் என்று ஜேம்ஸ் சார் ஆரம்பத்திலயே கூறிவிட்டார். பாட மட்டும் அனுமதிக் கொடுத்த பெற்றோர் முதலில் நடிக்க அனுமதிக்கவே இல்லை, நிறைய பாட்டு வாங்கி நிறைய ஆட்டம் ஆடி வாங்கிய அனுமதி இது. நிச்சயம் நல்ல பெயர் வாங்காமல் விட மாட்டேன்” என்று ராகத்தோடு கூறினார் ஜனனி.janani3