இசை வெளியீட்டு விழாவில் ஒலித்த ஏகப்பட்ட குமுறல்கள்!

DCIM (40)ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஏகப்பட்ட குமுறல்கள்  வெடித்தன.’ஒரேஒரு ராஜா மொக்கராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழா  ஆர்.கேவி ஸ்டியோவில் நடந்தது. இயக்குநர் பிரவின் காந்தி பாடல்களை வெளியிட்டார். ஷக்தி சிதம்பரம் பெற்றுக் கொண்டார்.

கவிஞர் ஏகாதசி பேசும்போது, “என்னை பேச அழைத்த போது தொகுப்பாளர்.  ஏகாதசி என்று மட்டும் அழைத்தார் நான் யார் என்று கூட அவருக்குத்தெரியாது. நான்தான் இந்தப் படத்தில் பாடல்கள் எழுதியவன். இது கேரளாக்காரர்கள் உருவாக்கியுள்ள படம். எனவே என்னை பாடல் வரிகளுக்கு பாடாய்ப் படுத்தவில்லை . தமிழ்ச்சினிமாவில் அசிஸ்டெண்ட் முதல் ஆபீஸ் பாய் வரை  ஆளாளுக்கும் கேள்வி கேட்டே  கவிஞரை கொன்னுருவாங்க . இதில் வரும் சின்ன பசங்க பற்றிய பாடல் ‘சூ சூமாரி..’ ‘வெயிலோடு விளையாடு’ வரிசையில் பிரபலமாகும். “என்றார்.

நடிகர் ‘ராஜா ராணி ‘பாண்டியன் பேசும்போது”நான் 24 வயதில் கதாநாயகன் கனவில் வந்தேன் அலைந்தேன் ஒரு நாள் ‘மனதில் உறுதி வேண்டும்’ படப்பிடிப்பில் பாலசந்தர் சார் எப்படி நடிப்பு சொல்லிக் கொடுக்கிறார் என்று பார்க்கப் போனேன். மெல்ல எட்டிப் பார்த்தேன். யார்ரா நீ உன் முகரையை கொண்டு வந்து இங்கு நீட்டுறது என்று ஒரு புரொடக்ஷன் உதவியாளர்  திட்டி துரத்தி விட்டான். வெளியே வந்து அரைமணி நேரம் அழுதேன். அவமானமாக இருந்தது. மதுரைக்கே போய்விடலாமா என்று நினைத்தேன். வலியை வெறியாக மாற்றினேன். இந்தப் பயலை சும்மா விடக் கூடாது. சினிமாவில் ஜெயிச்காமல் விடக் கூடாது என்று உறுதியுடன் தேடினேன். புகைப்படக் காரராக பலபடங்கள். எல்லார் முகத்தையும் எடுக்கிறோம் நம்ம முகத்தை யார் எடுப்பாங்க. . எப்போ.. எடுப்பாங்க.? தேடினேன். 24 வயதில் கதாநாயகன் கனவில் வந்தேன். 54வயதில் கதாநாயகனின் அப்பாவாகி இருக்கிறேன்.எனக்கு இதில் மகிழ்ச்சிதான் விடா முயற்சி வெற்றி தரும். . “என்றார்.

நாயகன் சஞ்சீவ் முரளி,வில்லன் சாகர்,குட்டிநடிகர்கள் விஜய்கணேஷ்,சிசர் மனோகர்மட்டுமல்லஈரமான ரோஜா சிவாவும் ப்ளாஷ் பேக் கதைகள் கூறி குமுறலை வெளியிட்டுப் பேசினார்கள்.அவை  ஒவ்வொன்றும் இசை வெளியீட்டு விழாவில்  குமுறல்களாக இருந்தன!

நிகழ்ச்சியில் பொன் பிரகாஷ் வரவேற்புரை யாற்றினார். பாடகி சித்ரா,.இயக்குநர் எம்.ஜீவன், ஒளிப்பதிவாளர் ஐயப்பன் ஆகியோரும் பேசினார்கள். படத்தின் இயக்குநர் சந்தோஷ் கோபால், தயாரிப்பாளர் உல்லாஷ் கிளி கொல்லுர் நன்றி கூறினார்.

பொதுவாக இசை வெளியீட்டு விழாவில் பலரும் மொக்கராஜாவாக மாறி நீளமாகப் பேசுவார்கள்.’ஆனால் ‘ஒரேஒரு ராஜா மொக்கராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பலரும் உயிர்ப்பான அனுபவங்களைப் பேசினார்கள்.