இப்படி ஒரு கேவலமான படத்தை உன்னைத்தவிர யாரும் செய்ய முடியாது : மனம்திறந்த பாரதிராஜா

bharathiraja2பிரபலமாக இருப்பதில் உள்ள சங்கடத்தை பாரதிராஜா பகிர்ந்து கொண்டார்.ஏடிஎம் புரொடக்ஷன்ஸ் சார்பில் டி.மதுராஜ் வெளியிடும் படம் மருதுபாண்டியன் இயக்கியுள்ள ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டுவிழாவில்தான் பாரதிராஜா இப்படிக் கூறினார்.

“பிரபலமாக இருப்பதில் ஒரு சங்கடம் உண்டு. எல்லாரும் விழாவுக்கு அழைப்பார்கள் இப்போதெல்லாம் நான் அதிகம் கலந்து கொள்வதில்லை. பொய் சொல்ல வேண்டி இருக்கிறது. உருப்படாத படத்தைப் பார்க்க வேண்டும். என்ன எழவுடா என்றுபார்த்து விட்டு தம்பி நல்லா பண்ணி இருக்கே உன்னைத்தவிர யார் இப்படி செய்யமுடியும் என்று கை குலுக்குவேன். காரில் ஏறும்போது தான் தோன்றும் இப்படி ஒரு கேவலமான படத்தை உன்னைத்தவிர யாரும் செய்ய முடியாது என்று. அதற்கு அதுதான் அர்த்தம்.

ஆனால் மருதுபாண்டியன் இயக்கியுள்ள ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ என்கிற இந்தப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த இயக்குநருக்கும் படத்துக்கும் சம்பந்தமில்லை. அவனுக்கு பேசவே தெரியாது. எப்படி படம் இயக்கினான் என்று சந்தேகப்பட்டேன். மிரட்டி இருக்கிறான். அசந்து போய்விட்டேன். வேண்டா வெறுப்பாகவே படம் பார்க்க தொடங்கினேன். ஆரம்பம் முதல் கடைசிவரை பிரமாதப் படுத்தியிருக்கிறான். நானே இரண்டுமுறை பார்த்தேன். தெரிந்தவர்கள் உதவியாளர்களுக் கும் போட்டுக் காட்டினேன். “என்று இயக்குநரை வாழ்த்தினார். நிகழ்ச்சியில் கே. பாக்யராஜ், பேரரசு, சினேகன் , இயக்குநர் மருதுபாண்டியன்ஆகியோரும் பேசினார்கள்.