இயக்குநர் எஸ்.ஆர். பிரபாகரன் எதிர்பார்க்கும் படம்!

இன்று பொங்கல் வெளியீடாக சசிகுமார் நடிப்பில் வெளிவந்துள்ள கொம்பு வச்ச சிங்கம்டா படத்தை எஸ்ஆர் பிரபாகரன் இயக்கியிருக்கிறார்.

அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

”பத்திரிக்கை துறை சார்ந்த நண்பர்கள் மற்றும் தொலைக்காட்சி, வானொலி, பண்பலை, YouTube போன்ற அனைத்து ஊடகங்களை சேர்ந்த நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

இன்று எனது கதை, திரைக்கதை, இயக்கத்தில் வெளிவந்துள்ள, எனது நான்காவது படைப்பான “கொம்பு வச்ச சிங்கம்டா” திரைப்படம் நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இது வரை “சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல், சத்ரியன்” என எனது மூன்று படைப்புகளுக்கும் நீங்கள் அளித்த ஆதரவிற்குப் பெரும் நன்றிகள். அதே ஆதரவை எனது நான்காவது படைப்பிற்கும் தருவீர்கள் என நம்புகிறேன். உங்கள் அனைவரது அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றிகள் பல ” என்று கூறியுள்ளார்.

இயக்குநர் SR பிரபாகரன் இயக்கத்தில் இன்று வெளியாகி இருக்கும்

“கொம்பு வச்ச சிங்கம்டா” திரைப்படத்தின் கதை என்ன? என்ற போது,

“இது மத்திய தமிழகமான கரூர் மாவட்டத்தில் நடக்கும் கதை .ஒரு பெரும் கிராமமான கிருஷ்ணராயபுரம் ஊரின் பெரியவர் தெய்வேந்திரன். அந்த கிராமத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் பிடித்தமானவரான தெய்வேந்திரனின் சொல்லுக்கு ஊரே கட்டுப்படும். அப்படிப்பட்ட தெய்வேந்திரனின் ஒரே மகனுக்கு, ஐந்து நண்பர்கள். “மண்ணு தின்ற வயசுல இருந்து ஒன்னா திரிஞ்ச பயலுக” சாதி மத வேறுபாடின்றி பழகும் இவர்களின் நட்புக்குள், ஊரில் நடக்கும் உள்ளாட்சித் தேர்தல் பிரிவினையை ஏற்படுத்துகிறது. இரண்டு அணிகளாக பிரிந்த இவர்களது நட்புக்குள் என்ன நடந்தது. ஒன்றாய் பிறக்கவில்லை என்றாலும் ஒன்றாய் வளர்ந்த இவர்களின் நட்பின் வாழ்வு தனை சூது கவ்வியது. மீண்டும் நட்பு வென்றதா? என்பதே ‘கொம்பு வச்ச சிங்கம் டா’ படத்தின் கதை”இந்த படத்தின் கதைச் சுருக்கத்தை கூறினார்.