, இயக்குநர் ஹரியின் உதவியாளர் பிரசாந்த் இயக்கும் ‘யானும் தீயவன்’

yanum1நாளைய இயக்குநர் சீசன் 3ல் பங்கேற்றவரும், இயக்குநர் ஹரியிடம் “சிங்கம் 2” படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவருமான பிரசாந்த் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.

முழுக்க முழுக்க கமர்சியல் ஆக்ஷன் திரில்லராக உருவாகும் இப்படத்திற்கு, “யானும் தீயவன்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

புதுமுகம் அஷ்வின்செநீவ் கதாநாயகனாக அறிமுகமாக, வர்ஷா கதாநாயகியாக நடிக்கின்றார். முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடன கலைஞர் மற்றும் நடிகரான ராஜு சுந்தரம் நடிக்க இவரகளுடன் விடிவி கணேஷ், பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

பிரபல தெலுங்கு திரையுலக இசையமைப்பாளரான அச்சு ராஜாமணி, இப்படத்திற்கு இசையமைக்கிறார். படத்திற்கு ஒளிப்பதிவு ஷ்ரேயாஸ் கிருஷ்ணா, படத்தொகுப்பு பிரசன்னா.G.K. பாடல்களை பாடலாசிரியர்கள் கபிலன் மற்றும் மணி அமுதவன் எழுதியுள்ளனர்.

இப்படத்தின் பாடல்கள் படத்திற்கு பெரிய பலமாக அமையும் என்றும் ஒவ்வொரு பாடலும் புதிய கோணத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இயக்குநர் பிரசாந்த் கூறுகிறார்.

ஸோபியா ஜெரோம் மற்றும் பெப்பிட்டா ஜெரோம் “பெப்பி சினிமாஸ்” சார்பாக இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

துரிதமாக நடைபெற்று வரும் படபிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்குகிறது.