இளைஞர்களுக்கான இசை சார்ந்த படம் ‘வானவில் வாழ்க்கை’

IMG_1989இதுவரை  இசையமைப்பாளராக  இயங்கி வந்த ஜேம்ஸ் வசந்தன் இயக்குநராக அறிமுகமாகும் ‘வானவில் வாழ்க்கை’ .இப்படத்தின் ஊடக சந்திப்பு இன்று மாலை ஆர்.கே.வி ஸ்டுடியோவில் நடந்தது.

இதை இளைஞர்கள் சார்ந்த இசை சார்ந்த படமாக உருவாக்கியுள்ளதாக தொடங்கிய ஜேம்ஸ்வசந்தன், மேடையில் படத்தில் நடித்தவர்களை ஒவ்வொருவராக அழைத்து அறிமுகம் செய்தார். மொத்தம் பதினொரு இளைஞர்கள். பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள்.

அவர் பேசும் போது”இப்படி ஒரு படம் எடுக்க வேண்டும் என்பது கல்லூரி நாட்களிலிருந்து என் கனவு இந்த எண்ணத்தை வெளியிட்ட போது என் கல்லூரிக்கால நண்பர் ஜோசப் செல்வராஜ் அவரது நண்பர் ஜோசப்பை அறிமுகம் செய்தார். அவர் தானே தயாரிப்பதாகக் கூறி இறங்கிவிட்டார். படத்தில் 17 பாடல்கள். எனவே பாடத் தெரிந்தவர்களையே நடிக்கவைக்க வேண்டும் என்று தேடினேன். சுமார் இரண்டு ஆண்டுகள் போனது. அப்படி தேர்வானவர்கள்தான் இவர்கள். இவர்கள் பாடகர்கள், இசைக்கருவி வாசிப்பவர்கள் என்று திறமை பெற்றவர்கள். இதில்  17பாடல்களில் 9 பாடல்களை நானே எழுதினேன். மற்றவற்றை யுகபாரதி, மோகன்ராஜன், சுமதிஸ்ரீ எழுதியுள்ளார்கள். பாப். ராப் என மேற்கத்திய இசை பின்னணியில் காட்சிகள் வரும் கல்லூரி மாணவர் பற்றிய கதை. ” என்றவர் படத்தில் நடித்த ஜனனி, கெசன்ராய், ஜித்தின், செல்வராஜ், சாய் சங்கர், ஜான், கானாசிவா, சரவணன் போன்றோரை அறிமுகம் செய்தார்.

IMG_2041படத்துக்கு ஒளிப்பதிவு ஆர்.கே பிரதாப், எடிட்டிங் சாபுஜோசப், உடைகள் சந்தீப்ரவி, நடனம்  ஜான்பிரிட்டோ. ‘வானவில் வாழ்க்கை ‘பிப்ரவரி 14ல் வெளியாகும்.