அனிரூத்துக்கு விவேக் பாராட்டு : இளையராஜா என்னும் இசைக் கடலில் கண்டெடுத்த முத்து!

img-83‘ஆல் இன் பிச்சர்ஸ்’ விஜயராகவேந்திரா தயாரித்து, அறிமுக இயக்குநர் சாய்பரத் இயக்கி இருக்கும் ‘ரம்’ திரைப்படம்…’வி ஐ பி’ புகழ் ஹ்ரிஷிகேஷ், ‘சூது கவ்வும்’ புகழ் சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ், நரேன் மற்றும் விவேக் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘ரம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா  சென்னையில் உள்ள ‘ஹயாட்’ ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த  இசை வெளியீட்டு விழாவில்  பேசிய விவேக் , “ரம் திரைப்பட குழுவினரை போன்ற இளம் கூட்டணியோடு பணியாற்றியது, எனக்கு புது உற்சாகத்தை அளித்ததோடு மட்டுமில்லாமல், என்னை மீண்டும் இளமையாகவும் மாற்றி இருக்கின்றது. நம்முடைய இளைஞர்களின் மனதை இசையால் கவருவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஆனால் அதை தன்னுடைய மனதை வருடும் இசையால் செய்திருக்கிறார் அனிரூத். இளையராஜா என்னும் இசைக் கடலில் கண்டெடுத்த முத்து தான் அனிரூத்…” என்று கூறினார்.

“பொதுவாகவே பேய் படங்கள் என்றால் எனக்கு அவ்வளவு பயம்…. அதுமட்டுமன்றி, 13 ஆம் நம்பர் என்பது பேய்களை குறிக்கும் எண் என்பதால், அந்த எண்ணின் மீதும் எனக்கு பயம் தான்….. ஆனால் தற்போது நான் இசையமைத்திருக்கும் இந்த ‘ரம்’, என்னுடைய 13 ஆவது படம்…. அதுவும் பேய் படம்….” என்று கூறுகிறார் இசையமைப்பாளர் அனிரூத்.

“ஒரு திரைப்படத்தை தயாரித்துவிட்டு, அதை வியாபாரம் செய்வது தான் மிகவும் கடினமான காரியம்….ஆனால் அந்த வியாபாரத்தை, தன்னுடைய கடின உழைப்பால் சிறப்பான விதத்தில் செய்து முடித்திருக்கும்  இளம் தயாரிப்பாளர்  ‘ஆல் இன் பிச்சர்ஸ்’ விஜயராகவேந்திராவை பார்க்கும்பொழுது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது….இந்த ரம் திரைப்படம் அமோக வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் .” என்று கூறினார் ‘ஸ்டுடியோ கிரீன்’ ஞானவேல் ராஜா.

இந்த இசை வெளியீட்டு விழாவில் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா, நடன இயக்குநர் காயத்ரி ரகுராம், நடிகர் ஆதவ் கண்ணதாசன், சென்னை 2 சிங்கப்பூர் படத்தின் கதாநாயகன் கோகுல் ஆனந்த் ஆகியோரும், ரம் திரைப்படத்தின் படக்குழுவினர்களான தயாரிப்பாளர்   ‘ஆல் இன் பிச்சர்ஸ்’ விஜயராகவேந்திரா, இயக்குநர் சாய் பரத்,  ஹ்ரிஷிகேஷ், சஞ்சிதா ஷெட்டி, நரேன்,  அம்ஜத், அருண் சிதம்பரம், பாடகர் சிட் ஸ்ரீராம்,  பாடலாசிரியர்கள் மதன் கார்க்கி, விவேக் வேல்முருகன் மற்றும் ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசு ஆகியோரும்  பங்கேற்றனர்.