உண்மைக்கதையில் வாழ்ந்தவரையே கதாநாயகனாக நடிக்க வைத்த இயக்குநர்!

இயக்குநர் தினேஷ் பாபு  PNP CINEMAS தயாரிப்பில் இயக்கும் படம் “கிருஷ்ணம் ”
அறிமுக நாயகனாக அக்சய் கிருஷ்ணன் ,ஐஸ்வரியா ,மமிதா பஜ்ஜு நடிக்கிறார்கள் . தமிழ் , தெலுங்கு ,மலையாளம் என்று மூன்று மொழிகளில் வெளியிடப்படுகிறது .

படத்தின் இயக்குநர் தினேஷ் பாபு ஒளிப்பதிவாளராக பல வருடங்கள் மலையாளத்திலும் , கன்னடத்திலும் பணியாற்றியவர் வித்தியாசமான கதைக்கள அமைப்பில் “கிருஷ்ணம் ” படத்தை இயக்கியிருக்கிறார் .

இந்தக் கதை ஒரு ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் . இந்த கதையை படமாக்க முயற்சி செய்து கதாநாயகனாக நடிக்க பல நடிகர்களைத் தேர்வுசெய்து இருக்கிறார் . ஆனால் யாரும் பொருத்தமானவர்களாக அமையவில்லையாம் . கடைசியில் எந்த இளைஞனின் கதையை படமாக்க நினைத்தாரோ அவரையே கதாநாயகனாக்க முடிவு செய்து கடைசியில் அவரையே வைத்து படத்தை இயக்கி முடித்துவிட்டார் .

நாயகனுக்கு உண்மையில் சிரித்த , அழுத நாட்களை சினிமாவுக்காக மீண்டும் ஒருமுறை கேமராவுக்கு முன்னால் நடித்தது பெரும் சவாலாக இருந்ததாம் . இயக்குநர் சொல்லிக்கொடுக்காமலேயே சில காடசிகளில் மிக தத்ருபமாக நடித்தாராம் .

உண்மை சம்பவத்தில் வாழ்ந்தவர்களை சினிமாவுக்காக மீண்டும் ஒருமுறை கேமரா முன்பு நடிக்க வைப்பது என்பது பெரும் சவால் அதை தான் சிறப்பாக செய்திருப்பதாக கூறுகிறார் இயக்குநர் தினேஷ் பாபு.

தமிழ் தெலுங்கு மலையாளத்தில் வெளியாகும் இந்தப்படத்திற்கு ஹரி நாராயணன் இசையமைத்துள்ளார் . ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் தினேஷ் பாபு , பாடல்கள் சந்தியா ,தயாரிப்பாளர் PN பல்ராம் .