உதவி இயக்குநர்களைப் பெருமைப் படுத்திய பிந்து மாதவி!

bindumadavi12சினிமாவில் உதவி இயக்குநர்களின் உழைப்பு அளவிட முடியாதது. ஆனால் அதற்கேற்ற சம்பளம் என்ன அங்கீகாரம் கூட பெரும்பாலும் சிடைப்பதில்லை.  எடுக்கும் ஒரு படத்தின் கதை விவாதத்திலிருந்து படம் வெளியாகி விமர்சனம், விளம்பரம் வரும் வரை அவர்களின் பணி தொடரும். ஆனால் படம் சம்பந்தப்பட்ட விழாக்களில் அவர்கள் பற்றி யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள் .விழாவில் அமரக்கூட இடமின்றி கூச்சப் பட்டு எங்கோ மூலையில் நின்று கொண்டிருப்பார்கள்.

சில இயக்குநர்கள் ஒப்புக்காக ‘உதவி இயக்குநர்கள் இல்லை யென்றால் படம் வந்திருக்காது’ என்பார்கள். ஆனால் அவர்கள் பெயரைக் கூட சொல்ல மாட்டார்கள்.

இந்நிலையில் ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’
படத்தில் நடித்த நடிகை பிந்துமாதவி படத்தில் பணியாற்றிய உதவி இயக்குநர்கள் அனைவரையும் படத்தின் ஊடக சந்திப்பின் போது பெயர் சொல்லி அழைத்து மேடையில் நிற்க வைத்து பாராட்டினார். அரங்கமே கரவொலியில் அதிர்ந்தது.

பிந்துமாதவியின் பெருந்தன்மையிலும் நன்றியுணர்விலும் அரங்கம் ஆச்சரியப் பட்டது.

‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ படம் செல் போன் சம்பந்தப்பட்ட கதையாம்.மூன்று வேறு வித பாத்திரங்கள் மூன்று வித பாதையில் பயணித்து திரிவேணி சங்கமமாய் ஒன்று சேரும் கதையாம்.

விழாவில் வி.எல். எஸ்.ராக் சினிமா சார்பில் ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’  படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பாளர் வி.சந்திரன், இயக்குநர் ராம் பிரகாஷ் ராயப்பா, நாயகன் நகுல், சதிஷ், ஐஸ்வர்யா தத்தா, ஷாலு ஷம்மு, ஒளிப்பதிவாளர் தீபக்குமார்பதி, மதன் கார்க்கி, கலை இயக்குநர் வனராஜ், எடிட்டர் சாபுஜோசப் ஆகியோரும் பேசினார்கள்.