‘ஊமைச்செந்நாய்’ கண்டெய்னருக்குள் படமாக்கப்பட்ட சண்டைக்காட்சி !

சனம் ஷெட்டி நடிப்பில் உருவாகி வரும் ‘ஊமைச்செந்நாய்’ படத்திற்காக கண்டெய்னருக்குள் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் அர்ஜுன் ஏகலைவன் இயக்கும் படம் ‘ஊமைச் செந்நாய்’. இப்படத்தில் கதாநாயகனாக மைக்கேல் தங்கதுரை நடிக்கிறார். இவருடன் ‘காணும் காலங்கள்’ தொடர் புகழ் பர்மா, சனம் ஷெட்டி கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

இவர்களுடன் சாய் ராஜ்குமார், கஜராஜ், ஜெயக்குமார், அருள் டி சங்கர் உள்ளிட்டோர் முக்கிய காதபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஆக்சனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உருவாகியுள்ள இந்தப்படத்தில், ஒரு கன்டெய்னருக்குள் நடக்கும் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு 35 நாட்கள் நடைபெற்றுள்ளது.