‘எங்க அம்மா ராணி’ விமர்சனம்

engamma-rani_149379588040அம்மா பாசத்தை வெளிப்படுததியுள்ள அண்மைக்காலப்படம் இது எனலாம். மலேசியாவில் இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார் தன்ஷிகா. அவரது கணவர் அலுவலக வேலையாக கம்போடியாவுக்கு சென்றவர்  காணாமல் போகவே அது குறித்து விசாரித்து வருகிறார். இதற்கிடையில், அவரது இரட்டை க்குழந்தைகளில் ஒன்று திடீரென்று மரணமடைய அதிர்கிறார். அதற்கு காரணமாக புதிய வினோதமான நோயின் பெயரைச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். எந்தவித அறிகுறியும் காட்டாமல் உயிரை காவு வாங்கும் அந்த நோய், தன்ஷிகாவின் மற்றொரு மகளுக்கும் இருக்குமோ என மருத்துவர்கள் சந்தேகப்படுகிறார்கள். பரிசோதனை நடத்தியபோது அவர்களது சந்தேகம் உண்மையாகிவிடுகிறது.

மருந்தே இல்லாத அந்த நோயைக் குணப்படுத்த முடியயாது  என்றாலும் கட்டுப்படுத்த முடியும், என்கிறார்கள். அதன்படி, மலைப்பிரதேசம் ஒன்றில் தனது மகளுடன் தன்ஷிகா வசிக்கிறார். அந்த இடத்தில் அவரது மகள் மீது ஆவி ஒன்று புகுந்துவிடுகிறது. ஆவி வந்த நேரம் அந்த நோய் காணாமல் போகிறது.  மேலும், அந்த ஆவி உடலை விட்டு சென்றுவிட்டால் மீண்டும் அந்த நோய் அந்த பெண்ணுக்கு வந்துவிடுமோ எனப் பயந்து தன் குழந்தை உயிரோடு இருக்க வேண்டும், என்ற முடிவுக்கு வருகிறார் தன்ஷிகா. வேறு  பிரச்சினைகள் அவருக்கு  வரவே,  தனது மகளை காப்பாற்ற என்ன செய்கிறார், என்பது தான் இப்படத்தின் க்ளைமாக்ஸ்.

படக்கதையின் நம்பகம் பற்றிய  கேள்விககு அம்மா பாசம் கேள்வி கேட்காது எல்லாவற்றை விடவும் மேலாக யோசிக்கும் என்பது தான் படம் சொல்லும் உண்மை.

engamma-rani_149379588070படம் முழுவதுமே மலேசியாவில் நடப்பதால் மலேசியாவில் நாம் இருப்பதைப் போன்ற உணர்வு வருகிறது. இப்படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ள தன்ஷிகா, முழு படத்தையும் தன் தோளில் தூக்கி சுமந்திருக்கிறார். ஏகப்பட்ட புதுமுகங்கள் இருந்தாலும் அனைவரும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாகவே உள்ளனர்.

இளையராஜாவின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் படி “வாவா மகளே இன்னோரு பயணம்…”   பாடல்  அமைந்துள்ளது.

குமரன், சந்தோஷ் குமார் ஆகியோரது ஓளிப்பதிவில் இதுவரை சினிமாவில் பார்த்திராத மலேசியாவாவைப் பார்க்க முடிகிறது.அதைப் போல  பல காட்சிகளில் கிராபிக்ஸ் இல்லாமலே பயமுறுத்தவும் செய்திருக்கிறார்கள்.

காணாமல் போன கணவரைத் தன்ஷிகா தேடும் போது, அவருக்கு என்ன நடந்திருக்கும் என்ற பரபரப்போடு தொடங்கும் படம், அவரது மகளின் திடீர் மரணத்தின் மூலம், அடுத்தது என்ன? என்ற ஆர்வம் ரசிகர்களை படத்தோடு  ஒன்றச் செய்துவிடுகிறது. திடீர் திருப்பமாக திகில் சம்பவங்கள் ஆரம்பமானதும், திரைக்கதை வேகம் எடுக்க தொடங்கி, மீண்டும் அம்மா செண்டிமெண்ட்டில் பயணித்து, இறுதியில் ஒரு நல்ல படத்தை பார்த்த அனுபவத்தை கொடுக்கிறது.

அம்மா பாசத்தைச் சொல்லும் படம் தான் என்றாலும், அதற்கேற்றபடி இயக்குநர் எஸ்.பாணி திரைக்கதை அமைத்த விதம், அதில் திகில் விஷயத்தை நுழைத்தது அதை கையாண்டது போன்றவை நன்று.