திரைப் பிரபலங்கள் வெளியிட்ட ‘தக்ஸ்’ ட்ரெய்லர்!

‘தக்ஸ்’ திரைப்பட ட்ரெய்லரை பிரபலங்கள் விஜய் சேதுபதி, துல்கர் சல்மான், ஆர்யா,அனிருத் , கீர்த்தி சுரேஷ் ஆகியோர் வெளியிட்டனர்!

இந்தியத் திரையுலகில் புகழ்பெற்ற நடன இயக்குநர் பிருந்தா ‘ஹே சினாமிகா ‘படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். தற்போது அவரது முந்தைய படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட படைப்பாக ‘தக்ஸ்’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். கன்னியாகுமரி மாவட்ட பின்னணியில் க்ரைம் திரில்லர் படமாக இப்படம் உருவாகியுள்ளது. தமிழின் முன்னணித் தயாரிப்பு நிறுவனமான HR பிக்சர்ஸ் சார்பில் ஷிபு தமீன்ஸ் இப்படத்தை வழங்குகிறார். ரியா ஷிபு இப்படத்தைத் தயாரிக்கிறார்.

இப்படத்தின் ட்ரெய்லரை இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் சேதுபதி, துல்கர் சல்மான், ஆர்யா,அனிருத் , கீர்த்தி சுரேஷ் ஆகியோர் வெளியிட்டனர்.

2 நிமிடங்கள் 23 வினாடிகள் ஓடக்கூடிய ட்ரெய்லர் பார்வையாளர்களை அசத்தும் வகையில் அதிரடியாக அமைந்துள்ளது. படத்தின் முன்னணி நடிகர்களான ஹிருது ஹாரூன், அனஸ்வர ராஜன், சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ் மற்றும் முனிஷ் காந்த் ஆகியோரின் நடிப்பும் கதாப்பாத்திர அமைப்பும் அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. சாம் CS-ன் அற்புதமான பிஜிஎம், ஒளிப்பதிவாளர் பிரியேஷ் குருசாமியின் அட்டகாசமான காட்சிகள் மற்றும் எடிட்டர் பிரவீன் ஆண்டனியின் நேர்த்தியான எடிட்டிங் அனைத்தும் இணைந்து, பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எல்லாவற்றையும் விட இயக்குநர் பிருந்தாவின் மேக்கிங் ஸ்டைல் ஒரு கைதேர்ந்த இயக்குநரின் படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வை தருகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ‘தக்ஸ்’ திரைப்படம் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது