என் குடும்பமே மாதவன் ரசிகர்கள்: சூர்யா யதார்த்த பேச்சு!

Iruthi Suttru Audio Launch (15)சற்றே இடைவெளிக்குப்பின் மாதவன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம். ‘இறுதிச்சுற்று’ .இப்படத்தை மணிரத்னத்திடம் உதவியாளராகப் பணியாற்றி, ‘துரோகி’ என்கிற  படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சுதா இயக்கியுள்ளார்.இப்படத்தை சி.வி.குமார் மற்றும் சசிகாந்த் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

‘இறுதிச் சுற்று’ இருமொழித் திரைப்படமாக  தயாராகி இருக்கிறது.ஹிந்தியில் ‘சாலா காதூஸ்’ (Saala Khadoos) என்று பெயரில்
வருகிறது

ஹிந்திப் பதிப்பை பிரபல பாலிவுட் இயக்குநரான ராஜ்குமார் ஹிரானி தயாரித்துள்ளார்.

இருமொழிகளிலும் யூ.டிவி நிறுவனம் வெளியிடுகிறது.

ஜனவரி 29ம் தேதி வெளியாக உள்ள ‘இறுதிச்சுற்று’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இயக்குநர் பாலா படத்தின் இசையை வெளியிட, நடிகர் சூர்யா பெற்றுக் கொண்டார்.

இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசும்போது,

“ மும்பையில் இருப்பவர்கள் காட்டும் அன்பை விட இன்று சென்னையில் நிறைய அன்பு கிடைத்தது.இங்கு பேசியவர்கள் எனக்காக ஆங்கிலத்தில் பேசினார்கள். எனக்கு தமிழில் 15 வார்த்தைகள்தான் தெரியும்.
இங்கிருப்பவர்கள் அனைவருக்குமே மொழி ஒரு தடையில்லை. அன்பு, பாசம், நட்பு வைத்திருக்கும் இவர்கள் பேசியதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஒரு நாள் இரவு 11. 30 மணிக்கு மாதவன் எனக்கு போன் செய்து, எங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டார். வீட்டில் இருக்கிறேன் என்று சொன்னேன். உங்களை இப்போது சந்திக்க முடியுமா என்று கேட்டார். எதுவும் முக்கியமான பிரச்சனையா என்று மாதவனிடம் கேட்ட போது, இல்லை உங்களிடம் பேச வேண்டும் என்றார். இரவு 12 மணிக்கு வந்து, 20 நிமிடத்தில் இப்படத்தின் கதையை சுருக்கமாகச் சொன்னார்.

இப்படத்தின் உருவாக்கத்தில் மாதவனுக்கு இருந்த அர்ப்பணிப்பு என்னை வியக்க வைத்தது. ” என்றார்.

சூர்யாபேசும்போது,, “. என் வீட்டில் நான் நடித்த படமோ, கார்த்தி படமோ வெளியாகும் போது மாதவன் படம் வெளியானால் முதலில் மாதவன் படத்துக்கு போகலாம் என்றுதான் சொல்லுவார்கள். அந்தளவுக்கு என் வீட்டிலேயே அவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள்.தமிழ்நாட்டின் சொத்து மாதவன் இப்படம் ஆரம்பித்த முதல் நாளில் இருந்து தற்போது வரை எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்” என்றார்.