எம்.ஜி.ஆர் விரும்பியபடி மதுவை ஒழியுங்கள் : கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்

Set 2 (11)லீ ராயல் மெரிடியன் ஹோட்டல் அதிபர் டாக்டர் பழனி ஜி.பெரியசாமி எழுதிய ‘இதய ஒலி’ வாழ்க்கை அனுபவங்கள் நூல் வெளியீட்டு விழா சென்னை ஹோட்டல் லீ ராயல் மெரிடியனில் நேற்று நடந்தது. இந்த நூலின் தமிழ்ப் பதிப்பை முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் வெளியிட கவிஞர் வைரமுத்து முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். ஆங்கில நூலின் முதல் பிர தியை  ‘இந்து’ என்.ராம் பெற்றுக்கொண்டார்.

விழாவுக்கு தலைமை வகித்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் பேசும்போது, “எம்.ஜி. ஆருடன் மூன்று ஆண்டுகள் பழகிய பழனி ஜி.பெரியசாமி, அவரை பிழைக்க வைத்து 3-வது முறையாக முதல்வராக நமக்கு தந்தார். மக்களுக்காக வாழ்ந்து மறைந்த பாரத ரத்னா எம்.ஜி.ஆர் பெயரில் சென்னையில் ஒரு தொகுதியை ஏற்படுத்த வேண்டும் என்று அனைவரின் சார்பில் தமிழக முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

விழாவில் ‘மது அறவே கூடாது என்ற எம்.ஜி.ஆரின் கொள்கையை தமிழ் நாட்டில் அமல்படுத்த வேண்டும் ‘என்று கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்தார். அவர் பேசும் போது,
“இந்த நூல் தனிமனித வரலாறு அல்ல. சரித்திர ஆவணம். மது கூடவே கூடாது என வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர். மது கூடாது என்ற அவரது உயிர்க் கொள்கையை தமிழ்நாட்டில் அமல்படுத்த வேண்டும்” என்றார்.

Set 2 (7)ஆங்கில நூலின் முதல் பிர தியை பெற்றுக்கொண்ட ‘இந்து’ என்.ராம் பேசும்போது, “இந்த புத்தகத்தில் தனது வாழ்க்கையில் எப்படி கஷ்டப்பட்டு உழைத்து முன்னுக்கு வந்தார் என்பதை பழனி ஜி.பெரியசாமி விவரமாக எழுதியிருக்கிறார். அவரது பெற் றோர் கல்விக்கு முன்னுரிமை கொடுத்ததால் அவர் இந்த உன்னத நிலையை அடைந்திருக்கிறார். ” என்றார்.

‘இதய ஒலி’ வாழ்க்கை அனுபவங்கள் நூலாசிரியர் பழனி ஜி.பெரியசாமி பேசும் போது, “ கடின உழைப்பும், அசைக்க முடியாத நம்பிக்கையும் இருந் தால் சாதிக்க முடியும் என இளை ஞர்கள் அறிந்து கொள்ளவே இப்புத் தகத்தை எழுதினேன். நான் எம்.ஜி.ஆரிடம் ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை. எனது உழைப் பில் கிடைத்த பணத்திலும், வெளிநாடு வாழ் நண்பர்கள் உதவி யாலும்தான் நான் இந்த நிலையை அடைந்துள்ளேன்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பன், நடிகை பி.சரோஜாதேவி, முன்னாள் அமைச்சர்கள் எச்.வி.ஹண்டே, அரங்கநாயகம், காங்கிரஸ் அகில இந்திய செயலாளர் திருநாவுக் கரசர், முன்னாள் மத்திய இணை அமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன், இயக்குநர் தங்கர்பச்சான் உட்பட பலர் கலந்துகொண்டனர்.