எல்.ஜி.ரவிச்சந்தர் இயக்கத்தில் “ நான் அவளை சந்தித்த போது “

SANTHINI1சினிமா பிளாட்பார்ம் என்ற பட நிறுவனம் சார்பாக V.T.ரித்தீஷ் குமார், தயாரிக்கும் படத்திற்கு  “ நான் அவளை சந்தித்த போது “ என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் நாயகனாக கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் நடித்த சந்தோஷ் நடிக்கிறார்.

கதாநாயகியாக சித்து +2, வில் அம்பு, நையப்புடை படத்தில் நடித்த சாந்தினி நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மாசாணி, ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி போன்ற படங்களை இயக்கிய  எல்.ஜி.ரவிச்சந்தர் இயக்குகிறார்.

விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.