எஸ்.பி.பிக்கு நார்வேயிலிருந்து ஒரு தாலாட்டு!

எஸ்.பி.பிக்கு நார்வேயிலிருந்து ஒரு தாலாட்டு!

அன்பின் பாடகர் எஸ்.பி.பாலாவுக்கு, 
இந்தப் பூமியில் எல்லோருமே அன்பினாலும், இசையினாலும்  மட்டுமே ஆளப்படுகின்றோம் என நம்புகின்றோம். எங்கள் எல்லோரையும் இசையாலும், உங்களுடைய  அற்புதமான குரலாலும் கோடிக்  கணக்கான மக்களின் இதயங்களில் குடிகொண்டவர் நீங்கள். 
எத்தனையோ ஆயிரம் பாடல்களை பாடி இன்று வரையும் எங்கள் அனைவரையும் மகிழ்வித்துக் கொண்டிருக்கிறீர்கள் .  எங்கள் நெஞ்சில் நிறைந்த  பாடகராய்,  தமிழீழ மண்ணின் விடிவுக்காகவும் பல சிறப்பான பாடல்களை பாடியிருக்கின்றீர்கள் என்பது எங்களுக்கு பெருமகிழ்ச்சி தருகின்றது. 
நீங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருக்கும் இந்த சூழ்நிலையில், உங்களுடைய நலனில் மிகுந்த அக்கறையோடும் அன்போடும், மிக விரைவாக நலமடைந்து வருவீர்கள் என்று நாங்கள் எல்லோரும் காத்திருக்கிறோம். 


நீங்கள் மிக மிக விரைவாக குணமடைய வேண்டும் என்று  எல்லாம் வல்ல இறைவனை வேண்டி, உங்களுடைய  குடும்பத்தினருக்கும் எங்கள் அன்பையும், ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கின்றோம். 
நீங்களும்,  எஸ்.ஜானகி அம்மா அவர்களும் இணைந்து பாடிய “மலரே மௌனமா” பாடலை எடுத்து, கவிஞர் வைரமுத்து அய்யாவின் வரிகளை கொஞ்சம் உரிமையோடு சற்று மாற்றி,  என்னுடைய வரிகளையும் அன்பின் பால் இணைத்து, தாஸ் பாலா மற்றும் யகதுக்‌ஷா ஜெயக்குமரனின் அவர்களின்  குரல்களில் பாடி மீள வழங்குகின்றோம். 
இந்த தரமான, பல நெஞ்சங்களில் நிறைந்த  பாடலை உருவாக்கிய அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய  இசையமைப்பாளர் வித்யாசாகர், பாடலாசிரியர்,கவிஞர் வைரமுத்து அவர்களுக்கும், இயக்குனர் செல்வா மற்றும் தயாரிப்பாளர் வி.ரமேஷ் மற்றும் அனைவருக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்.   
ஒரே நாளில் இந்தப் பாடலை பாடியது மட்டுமில்லாமல், சிறப்பாகவும்,  பொறுமையாகவும் , பாடலைப் பதிவு செய்து இரவோடு இரவாக ஒலிக்கலவை செய்து, காணொளியாக ஆக்கிய  நோர்வே பாடகர் தாஸ் பாலாவுக்கும், யகதுக்‌ஷா ஜெயக்குமரனுக்கும் இதயம் நிறைந்த நன்றிகள். 
இந்தப் பாடலில் ஏதேனும் பிழைகள் இருந்தால், குறைகள் இருந்தால் பொறுத்துக்கொள்ளவும், நிறைகள் இருந்தால் அவருக்காக எங்களோடு இணைந்து பிராத்தனை செய்யவும். அவரின் மேல் உள்ள அதீத அன்பினால்  அவசரமாய் அவசரமாய் நாங்கள் ஆக்கிய மீள் பாடல் இது. நன்றி.
என்றும் அன்புடன் ,

வசீகரன் சிவலிங்கம் ,

தாஸ் பாலா ,

யகதுக்‌ஷா ஜெயக்குமரன்,

ஒசுலோ, நோர்வே 

Watch Bala Sugama Official song video on Vaseeharan Creations Youtube Channel from Norway.
https://www.youtube.com/watch?v=Y7UCafra94A
Song name: Bala Sugam (inspired by Malare Mounama song)Singer: Thas Bala, Yakathuksha JeyakumaranMusic – VidyasagarLyrics: Vaseeharan (Vairamuthu)Song Recorded and Mixed by : Thas BalaCinemathography: VaseeharanMusic Label: Vaseeharan Creations 
Special thanks to
Music Composer Vidyasagar, Poet Vairamuthu, Singers  S.P.Balasubramanyam, S.Janaki
Director Selva and Producer V.Ramesh.

Orignal Song Name – Malare Mounama
Movie – Karna
Singer – S.P. Balasubrahmanyam, S. Janaki
Music – Vidyasagar
Lyrics – Vairamuthu
Director – Selva
Producer – V. Ramesh
Studio – Vijaya Madhavi Combines