ஏழு கதாநாயகிகளுடன் பிரஜின் நடிக்கும் ”மிரண்டவன்”

pirajin1ஏழு கதாநாயகிகளுடன் பிரஜின் நடிக்கும் படம் ‘மிரண்டவன்’.ஸ்ரீ விஷ்ணு புரொடக்சன்ஸ் மற்றும் ஜெ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது.

‘பார்வை ஒன்றே போதுமே’, ‘பேசாத கண்ணும் பேசுமே’, ‘திருடிய இதயத்தை’, ‘பலம்’ ஆகிய வெற்றிப்படங்களின் இயக்குநர் முரளி கிருஷ்ணாவின் இயக்கத்தில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் தான் மிரண்டவன்.

படத்தை ஸ்ரீ விஷ்ணு புரொடக்சன்ஸ் மற்றும் ஜெ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.  நாயகனாக  பிரஜின் நடிக்கிறார். முக்கிய கதாநாயகியாக அவள் பெயர் தமிழரசி, வீரம் படங்களில் நடித்துள்ள மனோசித்ரா நடிக்கிறார். இவருடன் சருணா, அஞ்சு கௌடா, சுவாதி, சவேரா, ஐஸ்வர்யா, ஜெஸ்சி ஆகிய ஆறு கதாநாயகிகளும் படத்தின் மையப் புள்ளிகளாக சுழலும் வகையில் கதை பயணிக்கிறது.

மிக முக்கியமான கதாபாத்திரத்தில் ஜின்னா மற்றும் மகேந்திரன் நடித்துள்ளனர்.

கலர்ஃபுல்லான இப்படத்தில்  காதல் த்ரில் சேசிங்  என பரபரப்புக்கும் பஞ்சமிருக்காது. எப்போதுமே அந்தந்த சமயங்களில் பரபரப்பாகப் பேசப்படும் நிகழ்வை படமாக்குவார் முரளிகிருஷ்ணா. இப்படத்தில் சமீப  காலமாக  நடைபெறும் பிளாக் மெயில் என்ற  க்ரைமை கையிலெடுத்துள்ளார்.

பிளாக் மெயில் படத்தில் ஏழு பெண்களா? ஏழு பேருமே கதாநாயகிகளாகவா வருகிறார்கள் என இயக்குநர் முரளி கிருஷ்ணாவிடம் பீதியுடன் கேட்டால்..” ஒருவருக்கொருவர் போட்டிபோட்டு நடித்துள்ளனர். யாருக்கும் ஒரு சீன் முன்ன பின்ன இருக்காது. எல்லோருமே முக்கியத்துவம் கொண்ட கதையில் ட்விஸ்ட்களாக பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

‘மிரண்டவன்’ சமூகத்தின்  கைவிலங்காக இருக்கும் ஒரு சம்பவத்தை படம் போட்டுக் காட்டும். தெளிவாகவும் நேர்மையாகவும் புட்டுப் புட்டு வைக்கும். நிச்சயமாக மக்களை  ஜாக்கிரதையாக இருக்கச் சொல்லித்தரும். என் படங்களில் எப்போது பாட்டுக்கள் காதுகளை இனிக்கச் செய்துவிடும். மிரண்டவன் படத்திலும்  அந்த ஜாலம் இருக்கும்” என்கிறார் இயக்குநர் முரளி.

ஒளிப்பதிவை ஜெகதீஷ் கையாள்கிறார். எடிட்டிங்- வில்சி. கலை இயக்குநர் குமார். நடனம் ரவிதேவ் செய்திருக்கிறார். கதை திரைக்கதை வசனமெழுதி இயக்கியுள்ளார் முரளி கிருஷ்ணா.

சென்னை, பாண்டிச்சேரி, திருச்சி, மற்றும் கேரளா காடுகளிலும் படமாக்கப்பட்டுள்ளது.