‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’ விமர்சனம்

barath5mmபார்க்கும்படியான பரத், நடிககத் தெரிந்த நந்திதா, காமடி தர்பாரே நடத்தும் படி எம்.எஸ். பாஸ்கார், மனோபாலா  போன்ற 18 நகைச்சுவை நடிகர்கள்   இருந்தும் என்ன இப்படம் எக்ஸ்பரி டேட் மருந்து போல எந்த பலனும் இல்லாமல் இருக்கிறது.

பரத் ஒரு சித்தா டாக்டர். படிக்காதவர். அவரை எம்பிபிஎஸ் டாக்டர் என்று நம்பி நந்திதாவுக்கு நிச்சயம் செய்து விடுகிறார்கள். படிக்காத நம்மை டாக்டர் என்று பொய் சொல்லி விட்டார்களே என வருந்திய பரத், உண்மையை தன் மனைவியிடம் சொல்லத் தவிக்கிறார். படிக்காத நம்மை படித்த பெண்ணென்று நம்பி விட்டார்களே உண்மையை சொல்லி விட வேண்டும் என்று நந்திதாவும் தவிக்கிறார். இருவரது புளுகும் அவிழ்கிறது. இதுதான் கதை.
barath5m
இப்படி ஒரு சொத்தைக் கதையை வைத்துக் கொண்டு கவிதாலயா நிறுவனத்தில் ஓகே வாங்கிய விதத்தில் இயக்குநரின் கெட்டிக்காரத் தனம் புரிகிறது. ஆனால் படமாக்கிய விதத்தில்? போலி வைத்தியர் விஷயத்தை வைத்துக் கொண்டு எப்படி எல்லாம் சிரிக்க வைத்திருக்கலாம். அத்தனை வாய்ப்பையும் கோட்டை விட்டிருக்கிறார். பரத்தை வைத்து சிரிப்பு மூட்ட முயன்று தோற்றிருக்கிறார். 18 காமெடியன்களையும் விழலுக்கு நீராய் பயன்படுத்தி வீணடித்து இருக்கிறார். இசை சைமன் மட்டும் தேறுகிறார்.

மொத்தத்தில்  சித்த வைத்திய சிகாமணியின் இந்த லேகியம் எடுபடவில்லை. படம் பார்த்து முடித்ததும் ராஜம் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் மீது மரியாதை வந்தது இயக்குநரிடம் குறுக்கீடு செய்யாமல் இந்தப் படத்தை எடுக்க வீட்டிருக்கிறார்களே என்று ஆனால் இயக்குநர் மீது மரியாதை வருமா?