ஒரு குண்டூஸ் பெண்ணின் கதை இஞ்சி இடுப்பழகி!

inji-kduபி வி பி நிறுவனம் தயாரிக்கும் ‘இஞ்சி இடுப்பழகி’  சமூக வலைதளங்களில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.இன்றைக்கு வெளியான டீசர் கூட எல்லோராலும் பெரிதாக பாராட்ட படுகிறது.  நகைச்சுவையும், குறும்பும் ,கலவையான இந்த டீசர் ஆர்யாவின் கதாபாத்திரத்தையும் அனுஷ்காவின் கதாபாத்திரத்தையும்  ரசிகர்களுக்கு அவர்களின் கதாப்பாத்திரத்தின் தன்மையை தெளிவாக உணர்த்துகிறது. பார்த்தவர்கள் எல்லோரும் அடுத்தவரிடம் இந்தப் படத்தைப் பற்றியே பேசுவது படத்தின் வெற்றியை பறைசாற்றுகிறது.டீசரின் மூலம் இது ஒரு நகைச்சுவை கலந்த கதை என்றும் குண்டான ஒரு பெண்ணுக்கும் , உடற் தகுதியில் 100 மதிப்பெண் பெறும் வாலிபனைப் பற்றிய கதை என்பது தெளிவாகிறது. ஆர்யாவுடன் அனுஷ்கா  இணையாக நடிக்க அவர்களுடன் சோனல் சௌஹான், ஊர்வசி,பிரகாஷ் ராஜ் , பரத் மற்றும் பலர் நடிக்கும் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தை பி வி பி சினிமா தயாரிக்க பிரகாஷ் கொவிலமுடி இயக்கத்தில்,கனிஷ்கா  தில்லான் கதை எழுத,மரகத மணியின்  இனிமையான இசையில், ஆர் எஸ் பிரச்சனாவின் வசனத்தில், மதன் கார்க்கியின் பாடல் வரிகளில்,நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில் தயாரான இப்படத்தின்  இசை செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி வெளியாகிறது.