ஒரு டீ கடைக்கும், ஓர் ஊருக்கும் உள்ள உறவைச் சொல்லும் படம் ‘அஞ்சல’

anjala4 தமிழ்த் திரை உலகில் வளர்ந்து வரும் விநியோக நிறுவனமான ஆரா pictures நிறுவனத்தினர், விமல் , நந்திதா, பசுபதி ஆகியோர் நடிக்க , புதிய இயக்குநர் தங்கம் சரவணன்  இயக்கத்தில்,பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்புராயன் தயாரிப்பில் உருவாகி உள்ள ‘அஞ்சல’  திரைப் படத்தின் வெளியீட்டு உரிமையை first copy pictures என்னும் நிறுவனத்தாருடன் இணைந்து  பெற்று உள்ளனர். சமீபமாக தயாராகி வரும் படங்களில் முக்கியமான படமாக கருதப்படும்  ‘அஞ்சல’  ,இந்த வருடம் இறுதியில் வெளி வரும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.

‘ டீ  கடைகள் நமது வாழ்வில் இன்றியமையாததாக இருக்கிறது, நமது சமுதாய, பொருளாதாரம் , அரசியல் எல்லாவற்றிலும் டீக் கடைகள் பிரதான அங்கம் வகிப்பவை.அப்பேற்பட்ட ஒரு டீ  கடைக்கும், ஒரு ஊருக்கும் உள்ள உறவை ஜனரஞ்சகமாக , மிகவும் யதார்த்தத்துடன் சொல்லும் படம்தான்  ‘அஞ்சல’.
இந்த  வித்தியாசமான சிந்தனையே இந்த படத்தின் மேல் எங்களது ஆர்வத்தை தூண்டி உள்ளது. எல்லா தரப்பு மக்களையும் எளிதில் சென்றடையும் படமாக ‘அஞ்சல’ இருக்கும். எங்களது நிறுவனமான ” ஆரா சினிமா’  நிறுவனம் மூலமாக  நாங்கள் பல்வேறு தரப்பட்ட படங்களையும் மக்களுக்கு வழங்க விழைகிறோம்.  தரமான படங்கள் எங்கள் நிறுவனத்தின் முகவரியாக இருக்கும் , ‘அஞ்சல’ அத்தகைய  ஒரு படமாக இருக்கும் என்பதில் என்பதில் இரண்டாவது கருத்தே இல்லை’ என்று உறுதியோடு  கூறினார் ‘ஆரா சினிமா’ நிறுவனர் மகேஷ் கோவிந்த ராஜ்.