‘ஒரு முகத்திரை’ விமர்சனம்

Oru-Mugathirai-Movie-Photos-11பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டருக்கே  பைத்தியம் பிடித்தால் எந்த பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டரிடம் வைத்தியம் பார்ப்பார் என்று கிண்டலாகப் பேசுவதுண்டு. அப்படிப்பட்ட கதைதான் ‘ஒரு முகத்திரை’.

\ஸ்ரீ சாய் விக்னேஷ் ஸ்டுடியோஸ் மற்றும் எஸ் எஸ் கே ரிசோர்சஸ் சார்பில் ஆர். செல்வம் மற்றும் எல்.டி.சிவகுமார் ஆகியோர் தயாரிக்க ,
ரகுமான் , ஆர் .சுரேஷ், அதிதி ஆச்சார்யா , தேவிகா, ஸ்ருதி , டெல்லி கணேஷ் ஆகியோர் நடிக்க,

ஆர் .செந்தில் நாடன்( நிஜப்பெயரே அதுதான் ) எழுதி இயக்கி இருக்கும் படம்தான் இந்த ‘ஒரு முகத்திரை’ .
.
சத்யமூர்த்தி ரத்னவேல் என்கிற ரகுமான் ஒரு மனநல மருத்துவர் . மனநல மருத்துவக்  கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்குப் பாடம் நடத்தும் ரகுமானுக்கு ஒரு மனவியல் சிக்கல் வருகிறது. அவர் ஒரு மாணவியை திட்டமிட்டு வளைத்துக் காதலிக்கிறார் ஒரு தலையாக. அப்படிப்பட்ட காதலி மாணவியான  நாயகி அதிதி  ,தன் குருவையே ஒரு நோயாளியாக்கி எப்படி குணப்படுத்துகிறார் என்பதே கதை.

படம் ஆரம்பித்தவுடன் சாம்ஸ் அண்ட் கோவின் உலக்கநாதன் என்கிற சொறிக் காமெடியுடன் தொடங்குகிறது. ஐயோ என்று பீதி வருகிறது நமக்குள்.

ஆனால் ரகுமான் வந்தபின் சீரியசாகி கதை விரிகிறது.

நாயகியின் வெளிநாட்டு படிப்புக்கு உதவுவதாகக் கூறிய பேஸ்புக் நண்பன் ரோகித்தைத் தேடிச் சென்னை வருகிறார் நாயகி. தேடி வரும் அவருக்கு ரகுமான் தன்வீட்டில் தங்க இடம் கொடுக்கிறார். ஆனால் ரோகித் தொடர்பில் வரவில்லை. ஒரு கட்டத்தில் இது ரகுமானின் திட்டம் என்பது புரிந்து இருவரிடையே நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டமே திரைக்கதையின் போக்கு .

ரகுமான் மனநல டாக்டராக நன்றாக நடித்துள்ளார். உடல் மொழியும் நடிப்பும் பிரமாதம். மருத்துவர் மனநோயாளியாக மாறுவது நல்ல திருப்பம். நாயகி  அதிதி அழகுதான். ஆனால் படம் முழுக்க பேசிக் கொண்டே இருக்கிறார். மருத்துவப் பின்ணனியில் நல்லதொரு கதை சொல்ல முனைந்திருக்கிற இயக்குநர் பாராட்டுக்குரியவர். காமெடி என்கிற பெயரில் மலிவு மசாலாக்களைத் தவிர்த்திருந்தால் நல்ல பெயர் மிஞ்சியிருக்கும்.