ஒழுக்கமான ஒரு காதல் கதையைக் கூறும் ‘அகத்திணை ‘ படம்!

agathinai1ஸ்ரீஹரிணி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு அகத்திணை என்று பெயரிட்டுள்ளனர்.  கதாநாயகனாக வர்மா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.

கதாநாயகியாக மகிமா நடிக்கிறார்.   மற்றும் ஆடுகளம் நரேன்,ஜி.எம்.குமார், ஜார்ஜ், லொள்ளுசபா.மனோகர், சுவாமிநாதன், நளினி, கருத்தம்மா ராஜஸ்ரீ, ராமச்சந்திரன்,பிளாக்பாண்டி, பக்கோடா பாண்டி, சிவாநாராயணமூர்த்தி, அல்வாவாசு, மாஸ்டர்அதித்யா, செந்தில்குமார், பூவிதா, ரேவதி பாட்டி, செல்வி, ஹரிணி ஆகியோர் நடிக்கிறார்கள்.   தயாரிப்பாளர்  T.R.ஸ்ரீகாந்த் அவர்கள் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஒளிப்பதிவு    –   அகிலன் (இவர் நீ வருவாய் என, விண்ணுக்கும் மண்ணுக்கும் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர்)

பாடல்கள்   –  வைரமுத்து  ,   இசை   –  மரியா மனோகர்

எடிட்டிங்     –  ஜி. சசிகுமார்,  ஸ்டன்ட்     –  மிராக்கில் மைக்கேல்

நடனம்    –   எஸ்.எல்.பாலாஜி,   தயாரிப்பு    –   ஸ்ரீஹரிணி பிக்சர்ஸ்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் –  யூபி..மருது.

இவர் சின்னத்திரையில் சன் டிவியில் ஒலிபரப்பாகி பெண்களின் ஆதரவைப்பெற்ற “அத்திப்பூகள்” என்ற வெற்றி தொடரை இயக்கியவர்.    படம் பற்றி இயக்குநர் கூறும் போது,

”காதலுக்காக எதையும் இழக்கலாம். காதலை தவிர என்பதை உணர்வுபூர்வமாக சொல்லக்கூடிய ஒழுக்கமான ஒரு காதல் கதையே இந்த அகத்திணை. பழந்தமிழ் இலக்கியத்தில் காதல் பற்றி அகத்திணையில் பாடப்படுள்ளதால் கதைக்கு பொருத்தமாக இருக்குமென்று அகத்திணை என்று பெயர் வைத்தோம்.

படம் பார்த்த தணிக்கைகுழு அதிகாரிகள் குடும்பத்தோடு பார்க்ககூடிய மனதை தொட்ட உணர்வு பூர்வமான காதல் கதை என்று பாராட்டி படத்திற்கு “ யு “ சான்றிதழ் கொடுத்தனர். படத்தில் பாடல்கள் அனைத்தையும் கவிபேரரசு வைரமுத்து எழுதி இருக்கிறார். அதில் தந்தைக்கும் மகளுக்குமான உறவை, அன்பை, பாசத்தை மிக அழகாக சொல்லும் ஒரு பாடல் அனைத்து அப்பா, மகள்களுக்கும் பிடிக்கும் பாடலாக இருக்கும். படப்பிடிப்பு சென்னை, புதுக்கோட்டை, காரைக்குடி, கேரளா ஆகிய இடங்களில் நடைபெற்றது ” என்றார் இயக்குநர்   யூபி.மருது .