‘கத்திசண்டை ‘ படத்தில் மீண்டும் வடிவேலு!

kathi1ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து  வெற்றிப்படமான ‘ரோமியோ ஜூலியட்’டைத் தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது விக்ரம்பிரபு நடிக்கும் “ வீரசிவாஜி “ படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து கத்திசண்டை படத்தையும் தயாரித்து வருகிறார்.

இந்த படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் வடிவேலு, சூரி இருவரும் நடிக்கிறார்கள். மேலும் முக்கிய வேடத்தில் ஜெகபதிபாபு, தருண் அரோரா, சரண் தீப், ஜெயபிரகாஷ், நிரோஷா, தாடி பாலாஜி, ஆர்த்தி, பாவா லட்சுமணன் ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்கள்  நடிக்கிறார்கள்.

kathisanda1

தயாரிப்பு    –        எஸ்.நந்தகோபால்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்          –    சுராஜ்.

படம் பற்றி இயக்குநர் கூறியதாவது….

”விஷால் நடித்த படங்களிலேயே இந்த படம்  அதிக பொருட் செலவில் தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் பாடல் காட்சிகளுக்காகவும், சண்டைக் காட்சிகளுக்காகவும், இதர காட்சிகளுக்காகவும் கலை இயக்குநர் உமேஷ் குமார்  கைவண்ணத்தில் பிரமாண்டமாய் ஏராளமான அரங்குகள் அமைக்கப் பட்டு படமாக்கப் பட்டு வருகிறது. முதல் பாதியில் சூரியும் , இரண்டாம் பாதியில் வடிவேலுவும் காமெடியில் கலக்கி இருக்கிறார்கள். பக்கா கமர்ஷியல், ஆக்ஷன், காமெடி படமாக உருவாகி தீபாவளி அன்று  வெளியாக உள்ளது.”