கத்தி எதுக்குதான் தொப்புள்கொடி வெட்டத்தான் : மிஷ்கின்

மிஷ்கின் சொல்கிறார்:

நான் என் வாழ்கையில் பார்த்த இரண்டு பார்பர்ஸ் எனக்கு மிகவும் பிடித்தவர்கள் அவர்களைப்  பற்றி ஓரு கதை எழுத வேண்டுமென்று நினைத்தேன். “சவரக்கத்தி” எனக்கு மிகவும் பிடித்த வார்த்தை. இப்படத்தில் ராம் “பிச்சை” கேரக்டரில் நடித்துள்ளார்.

பொய்யே கட்டிப்பிடித்து கொண்டு வாழ்கின்ற ஓரு பார்பர் கதாபாத்திரம். நான் “மங்கா” என்ற கேரக்டரில் கோவத்தைக் கட்டிப்பிடித்து வாழ்கின்ற ரவுடி கதாபாத்திரம். நாங்கள் இருவரும் சந்தித்து கொள்ளும் காட்சி அதற்கு பின்பு நிகழும் சம்பவங்களின் அடிப்படையில் படத்தின் கதை இருக்கும். ஓரு நாளில் நிகழும் கதை இப்படம். இதற்கிடையில் “சுமத்ரா” என்ற கேரக்டரில் பூர்ணா ராமின் மனைவியாக காது கேட்காத, 2 கைக்குழந்தைகளுடன் 9 மாத கர்ப்பிணிப் பெண்ணாகவும் நடித்துள்ளார். க்ரைம் திரில்லர் போன்று விரைவான கதையம்சம் கொண்ட படம்தான் சவரக்கத்தி. முதல் முதலாக என்னுடைய தம்பி ஆதித்யா இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் கதை முழுக்க முழுக்க சென்னையை அப்படி இல்லாமல் ஓரு நகரத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. இப்படத்தில் ராம் ஹீரோவாக நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். அதனால் நான் மங்கா கேரக்டரில் நடித்துள்ளேன். நான் இப்படத்தில் ரவடியாக நடித்துள்ளேன். இப்படி பொய்யையும், ரவுடிதனத்தையும் கொண்டு வாழும் இருவருக்கும் பாடம் கற்பிக்கும் காது கேட்காத சுமத்ரா கதாபாத்திரம். பிறக்கும் குழந்தையுடன் நாங்களும் எப்படி புது மனிதர்களாக பிறக்கின்றோம் என்ற கதையை கொண்டது தான் சவரக்கத்தி. இப்படத்தில் இரண்டு டைரக்டர்கள் நடித்தாலும் ஆதித்யா மிகவும் சிறப்பாக டைரக்ட் செய்துள்ளார். இப்படத்தின் தலைப்பு சவரக்கத்தி ராம் கையிலும் கத்தி இருக்கும் என் கையிலும் கத்தி இருக்கும் “கத்தி எதுக்குதான் தொப்புள்கொடி வெட்டத்தான்” இதைத்தான் படத்தில் காட்டியுள்ளோம். இப்படத்தில் 2 பாடல்கள் மிகவும் சிறப்பாக வந்துள்ளது. படம் நீண்ட காலம் தள்ளி போய்க்கொண்டே இருந்தாலும் தற்பொழுது வெளியாகி உள்ளது.”

இப்படத்தில் “பார்பர்” கதாபாத்திரத்தில் யார் நடித்தாலும் நன்றாக இருக்கும். அதனால் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். – ராம்

”இப்படத்தில் தங்க மீன்கள் படத்திற்கு பிறகு இப்படம் நடிக்க வேண்டும் என்று என்னை ஆதித்யா அணுகினார். இப்படத்தில் காமெடி அதிகமாக இருக்கும். எனக்கும் காமெடிக்கும் ரொம்ப தொலைவு இருந்தாலும் இப்படத்தில் “பார்பர்” கதாபாத்திரத்தில் யார் நடித்தாலும் நன்றாக இருக்கும். அதனால் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இப்படத்தில் ஹீரோ , வில்லன் என்று என்பது இல்லை. இப்படத்தை அனைவரும் குடும்பத்துடன் வந்து பார்க்கலாம். இப்படத்தில் இசையமைப்பாளர் அருள் கொரலி மிகவும் சிறப்பாக இசையமைத்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது.”

இப்படத்தின் கதை ஓரு நாளில் நடப்பது போன்ற கதை – “சவரக்கத்தி” பட இயக்குநர் G.R. ஆதித்யா

”முதலில் நான் பார்த்திபன் அவர்களிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தேன். மற்றும் பல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகவும் பணி புரிந்துள்ளேன். ஆனால் பார்த்திபன் அவர்களிடம் சிறிய காலம் மட்டுமே ஒரு 6 மாதங்கள் மட்டுமே பணி செய்தேன். நான் இயக்குநராக வேண்டும் என்று தான் சினிமாவிற்கு வந்தேன். சவரக்கத்தி கதை “பார்பர்” கதாபாத்திரத்தை மைய படுத்தி எடுக்கப்பட்டது. “பார்பர்” கதாபத்திரத்தை வைத்து என்ன பண்ணலாம் என்று பேசி பேசி ஓரு சிறிய கதை களம் கிடைத்தது. இப்படத்தில் ஒருமுக்கிய நிகழ்வு ஓன்று நிகழும் அந்த நிகழ்வுக்கு பின்பு தான் படத்தின் கதை நகர தொடங்கும். இப்படத்தின் கதை ஓரு நாளில் நடப்பது போன்ற கதை. ஓரு பார்பர் கதாபாத்திரம் அவன் வாழ்க்கையில் ஓரு நாள் காலையில் 9 மணிமுதல் மாலை 6 மணி வரை நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில் கதை நகரும். அந்த கடை தான் அவனுக்கு உலகம். செவ்வாய்கிழமை மட்டுமே விடுமுறை என்பதால் சரக்கு அடித்து விட்டு நன்றாக தூங்குவான். இது தான் அவனது கதாபாத்திரம். அப்படி ஓரு சமயம் மிக பெரிய பிரச்சினையில் சிக்கிக்கொண்டு விடுகிறான். பின்பு எப்படி அவன் அந்த பிரச்சினையில் இருந்து மீண்டான் என்பது தான் மீதி கதை. இப்படத்தில் முக்கியமான இரண்டு கதாபாத்திரத்தில் யார் நடிக்க வேண்டும் என்று முதலிலே முடிவு பண்ணிட்டேன். படத்தின் கதாநாயகி கதாபாத்திரதிற்காக பல பேரிடம் கதை கூறினேன். படத்தின் கதையில் 3 குழந்தைகளுக்கு தாயாக நடிக்க யாரும் முன்வரவில்லை. கடைசியாக பூர்ணா மிகவும் சவாலான கதாபாத்திரம் என்று உணர்ந்து ஒப்புக்கொண்டார். மிக சிறப்பாக நடித்துள்ளார். படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரமும் சிறப்பாக நடித்துள்ளார்கள். இந்தப்படம் மொத்தமாக 45-48 நாட்களில் எடுக்கப்பட்டது. படத்தில் வரும் அணைத்து காட்சிகளும் சென்னையில் எடுக்கப்பட்டது. மக்களுக்கு இப்படத்தின் கதை ஓரு புதுவிதமான ஓரு அனுபவத்தை கண்டிப்பாக கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ராம், மிஷ்கினின் நடிப்பு படத்திற்கு மிக பெரிய பலம். படத்தின் இறுதிகட்ட காட்சிகளில் ராம் அவர்களுக்கு காலில் அடிப்பட்டுவிட்டது இருந்தாலும் மிக சிறப்பாக நடித்து முடித்தார்” என்றார் சவரக்கத்தி இயக்குநர் G.R. ஆதித்யா.