‘கத்தி சண்டை’ விமர்சனம்

smt_7197விஷால், சூரி, தமன்னா, சுராஜ் கூட்டணிக்கான எதிர்பார்ப்பைவிட வடிவேலுவின் மறுபிரவேசம்   என்கிற காரணத்திற்காக மட்டுமே  ‘கத்தி சண்டை’ படத்துக்கான எதிர்பார்ப்பு கூடியிருந்தது.

மருதமலை மட்டுமே சுராஜின் அடையாளம். படிக்காதவன் ஒரு சில இடங்களில் கிச்சு கிச்சு மூட்டியது. அதற்குப்பின் மலிவான காமெடிகளையே நம்பி  படங்கள் எடுத்தார் சுராஜ். கத்தி சண்டையில் மிக மலிவாக்கிவாட்டார். சரி என்ன கதை?

250 கோடி ரூபாயை கடத்திக் கொண்டு போகிற கண்டெயினரை தடுத்து நிறுத்தி, கடத்தல்காரனை கைது செய்கிறார் போலீஸ் டிசி ஜெகபதிபாபு.

ஆனால் அவர் ஒப்படைப்பது வெறும் 50 கோடி மட்டும். மீதிப் பணத்தை மீட்க வில்லன் கோஷ்டி ஜெகபதிபாபுவைக் கடத்துகிறது.

ஜெகபதிபாபுவின் தங்கை தமன்னாவை விஷால் முன்ஜென்மக் கதை கூறிக் காதலிக்கிறார்.

கடத்தப்பட்ட ஜெகபதிபாபுவை விஷால் ஓடி வந்து மீட்கிறார்.அதற்கப்புறம் அந்த பணத்தை விஷால் அடித்துக் கொண்டு கிளம்புகிறார் .விஷால் யார்? சிபிஐ அதிகாரியா, அதிகாரி வேடத்தில் வந்த போலியா?

விஷால் காதலிக்கும் ஜெகபதிபாபுவின் தங்கை தமன்னாவின் காதல் நிறைவேறியதா?

விஷாலிடம் போன பணம் கடைசியில் என்னாகிறது? இப்படி ஒரு படத்தில் பலவித கேள்விகளை எழுப்பி மசாலா தடவி  ‘கத்தி சண்டை’ படமாக்கியிருக்கிறார் இயக்குநர் சுராஜ்.

பலகோடி கறுப்பு பணம், ஞாபக மறதி,சுற்றிலும் அடியாட்கள்,ஆஸ்பத்திரி இதையெல்லாம் வருகிற கதையைக் கேட்டவுடன்பார்க்கும் போதே அண்மையில் வந்த ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படம் அப்பட்டமாக நினைவுக்கு வருவதைத் தவிர்க்கமுடியவில்லை.இயக்குநர் சுராஜின்  பலமே நகைச்சுவை என்பதால், அந்த ஏரியாவில் மட்டும் அதிக கவனம் காட்டியுள்ளார்.மற்ற இடங்களில் சறுக்கி விழுந்து படத்தை முழுநீள நாடகமாக்கியிருக்கிறார்.

ஒரே படத்தில் சூரியும் வடிவேலுவும் ஆனால் தனித்தனியாக இருவேறு பகுதிகளில்  ஆவர்த்தனம் செய்துள்ளனர். ஏரியா தாதா தேவாவாக அறிமுகமாகிற சூரியும், விஷாலிடம் சிக்கி சின்னாபின்னமாகிறார்.மெமரி லாஸ் குணப்படுத்தும் டாக்டர் பூத்ரியாக வருகிற  வடிவேலுவும் விஷாலிடம் அடி வாங்கி மிதிபடுகிறார். வடிவேலு 300%  மிகை நடிப்பை காட்டியுள்ளார்..அவர் என்னசெய்வார்? சுராஜின் டிசைன் அப்படி.

.விஷால் கனல் கண்ணன் அமைப்பில்  போட்டிருக்கும் இரண்டு பெரிய சண்டைகளும், ஒரு சேசிங்கும் ஆங்கில படம் தோற்கும்  அதிரிபுதிரி ரகம் . smt_4461  ‘கத்தி சண்டை’ தலைப்புக்கேற்றபடி சில இடங்களில்  கத்தியும்  சண்டை போடுகிறார்கள்

தமன்னா வழக்கம் போலவே காதலிக்கிறார்.பாடல்காட்சிகளில் கவர்ச்சி காட்டுகிறார்.

கதையின் முன் பாதியின் அழுத்தம் பின் பாதியில் இல்லாதது குறைதான். அந்த பள்ளத்தை அவ்வப்போது வடிவேலை நம்பி ஒப்பேற்றுகிறார்கள். கடைசியில் திடீரென விவசாயத்தை பற்றி விஷால் வகுப்பு எடுப்பதும் திசை மாற்றுகிறது. இது நல்லதா, கெட்டதா, ஜனங்களே…? அவ்வளவு பணமும் எங்க பணம்டா… என்று விஷால் அவிழ்க்கும் பிளாஷ்பேக்கும், அந்த கிராமமும், பலமுறை தேய்ந்த பழைய டெம்பளேட்  என்பதால் மனதில் துளி கூட ஒட்ட்டாமல் அலுப்பூட்டுகிறது.

படம் நடப்பு பிரச்சினையான  கறுப்புப் பணம்  பற்றிப்பேசுவதால்  கவலை மறந்து பார்க்க வைக்கிறது.லாஜிக் மறந்து சிரிக்க வைக்கிறது.