கப்பல் துறை சார்ந்த வேலைவாய்ப்பு விழிப்புணர்வு சந்திப்பு 2015

marine

குட் ஓஷன் மெரிடைம் என்பது இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் லாஜிஸ்டிக்ஸின் அனுமதி பெற்றுள்ள கடல் சார் நிறுவனமாகும்.

இது துபாயில் கப்பல், தளவாடங்கள்  துறையில் தொழில்சார் பயிற்சியளித்து வரும் முன்னோடி நிறுவனமாகும். இது ஆர்வமுள்ள பொறியியல் பட்டதாரிகளுக்கு வழங்கிவரும் பயிற்சி உலகளாவிய வேலைவாய்ப்புகளுக்குரிய தளமாக  இருந்து வருகிறது.. இதற்குரிய அங்கீகாரத்தை  KHDA அதாவது துபாயின் அறிவுசார் ,மனிதவள மேம்பாட்டுத் துறையிடம் பெற்றுள்ளது.

இந்நிறுவனம் வழக்கமான தொழில் வேலை வாய்ப்புகளுக்கு அப்பால்  புதிய வாய்ப்புகளை தேட முயல்வதில்  முன்னோடியாக இருக்கிறது. குறிப்பாக கப்பல் மற்றும் தளவாடங்கள் சார்ந்த கல்வி அளிப்பதில், கண்டறியப்படாத வாய்ப்புகளை தேடுவதில் ,அறிமுகம் செய்வதில் முனைப்புடன் இருக்கிறது. இந்நிறுவனத்தின் லட்சியம் வரும் ஆண்டுகளில் மாணவ சமுதாயத்திற்கு ஏராளமான சர்வதேச  வேலைவாய்ப்புகளை, தொழில்களை கண்டுபிடித்து  அறிமுகப்படுத்தி உரிய காலத்தில் உரிய வாய்ப்பை வழங்கி அவர்களின் வாழ்க்கையை மாற்ற முயல்வதாகும்.

கேப்டன் வி.ஜே. புஷ்பகுமார் என்கிற தகுதியுள்ள தலைமையில் ‘குட் ஓஷன் மெரிடைம் ‘ உலகெங்கும் பலநாடுகளிடையே சிறகை விரித்து வருகிறது . கேப்டன் புஷ்பகுமார் கடலோடிகளில் ஓய்வும் சோர்வும் அறியாதவர்.நான்கைந்து மாதங்களிலேயே. அவர் தகுதியுள்ள பணியாளர்களை தயாரிப்பதில் வல்லுநர்.

கப்பல் தளவாடங்கள் சார்ந்த துறையில் விழிப்புணர்வு  அளிக்கும் வகையில் ஒரு  சந்திப்பு சென்னை ரெயின்ட்ரீ ஓட்டலில் 31–10–15ல் நடைபெற்றது.

குட் ஓஷன் மெரிடைம் நிறுவனத்தைச் சேர்ந்த கேப்டன் கணேஷ்யாம் வரவேற்றார்.அந்நிறுவன  நிறுவனரும் இயக்குநருமான கேப்டன் வி.ஜே.புஷ்பகுமார் தாங்கள் அளிக்கும் பயிற்சி,பணி, வேலை வாய்ப்புகள் பற்றி  அறிமுகவுரை நிகழ்த்தினார்.

அவர்  பேசும்போது,

” நாம் படித்து முடித்தவுடன் வேலை தேடுவதாகச் சொல்கிறோம். அது வேலையல்ல வாழ்க்கை என்பதை மறந்து விடுகிறோம். நமது வேலைதான்  நம் எதிர்கால வாழ்க்கை.

இந்தியாவில் ஆண்டு தோறும் 30 லட்சம் பட்டதாரிகள் உருவாகிறார்கள். இதில் பொறியியல் பட்டதாரிகள் 7 லட்சம் பேர். தமிழ்நாட்டில் மட்டும் 2லட்சம் பொறியியல் பட்டதாரிகள் உருவாகிறார்கள். இப்படியே போனால் இவர்களுக்கான வேலைவாய்ப்புகள் எப்படி அமையும்?

நமது பிரதமர் நரேந்திர மோடி ஸ்கில் இந்தியா உருவாக வேண்டும் என்கிறார். நமக்கான திறமையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

நாங்கள் எங்கள் நிறுவனத்தின் முலம் கப்பல் , தளவாடங்கள் சார்ந்து பயிற்சியளிக்கிறோம்.

இதில் பயிற்சி பெற்றபின் அது பெரிய ஊதியம் தரும் வேலைவாய்ப்பாக மாறுகிறது.அவர் நாங்கள் நடத்தும் 4–5 மாதம் பட்டயப் படிப்பு , பயிற்சி பொறியியல் பட்டதாரிகளுக்கும் நிர்வாகத்துறை பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பில்  வாழ்வில் உலக உயரத்தை  எட்ட வைக்கும் படிக்கல்லாக இருக்கும்

இப்போது துபாய் உலகத்தின் கோயம்பேடு பஸ்ஸ்டாண்ட் போல ஆகியுள்ளது.இங்கிருந்து 8 மணி நேரப் பயணம்தான். துபாயில் 50 சதவிகிதம் பேர் இந்தியர்கள் அந்த 50 சதவிகிதம் பேரில் 33 சதவிகிதம் பேர் மலையாளிகள். இதை எல்லாரும் புரிந்து கொள்ளலாம். தமிழ்நாட்டிலிருந்தும் இந்த விழிப்புணர்வு வர வேண்டும். தொட்டுவிடும் தூரத்தில் தான் துபாய் உள்ளது. வாருங்கள் பயிற்சி பெறுங்கள்  பணம் சம்பாதியுங்கள் ” என்றார்.

மேலும் டாக்டர் ஜெயஸ்ரீ ,  நிர்வாகத் துறைத் தலைவர், செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி, ராம் குமார் நாயர், மூத்த துணைத்தலைவர், அப்போலோ லாஜிஸ்டிக் சொல்யூஷன்ஸ் , டாக்டர் சுஜாதா ஆனந்த், முதல்வர் லயோலா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, டாக்டர் டி தியாகராஜன், ப்ளேஸ்மெண்ட் டைரக்டர், அண்ணா பல்கலைக்கழகம், டாக்டர் எஸ். ராமச்சந்திரன், துணைவேந்தர், இந்துஸ்தான் பல்கலைக் கழகம் ஆகியோரும் பல்வேறு தலைப்புகளில் கருத்துரை வழங்கினர்.