‘காட்டேரி’ விமர்சனம்

முதல் படம் யாமிருக்கே பயமே படத்திற்குப் பிறகு இயக்குநர் டிகே இயக்கத்தில் உருவான திகில் திரைப்படம் ‘காட்டேரி’. ஞானவேல் ராஜா தயாரிப்பில் வைபவ் நடித்துள்ள படமிது.

படத்தின் கதை என்ன?

ஒரு தாதாவிடம் தன்னையும் தனது நண்பர்களையும் சிக்கவிட்டு, தங்கப் புதையலைத் தேடிச் சென்ற சகா ஒருவனைத் தேடி, நண்பர்கள், மனைவியுடன் செல்கிறார் கதாநாயகன் வைபவ்.

பயணத்தில் ஒரு கிராமத்தை அடையும் வைபவ், தனது கூட்டாளியின் புகைப்படத்தைக் காட்டி விசாரிக்கும்போது, அங்கு தான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அக் கிராமத்தில் அனைவருமே மரணமடைந்து பேயாக அலைந்து கொண்டு இருக்கிறார்கள். எப்படியாவது அங்கிருந்து வெளியேறவேண்டும் என்று என்னும் வைபவுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சிகள். அங்கிருந்து தப்பிச் செல்ல நினைத்தால் மீண்டும் அதே இடத்திற்கு வந்கு சிக்கிக் கொள்ளும்படியான அமானுஷ்யமான சூழல். இதிலிருந்து வைபவ் தனது நண்பர்கள் மற்றும் மனைவியுடன் தப்பித்தாரா? இல்லையா? இறுதியில் புதையல் கிடைத்ததா? என்பதே படத்தின் மீதிக் கதை..

நாயகன் வைபவ்
நகைச்சுவை, பயம் என ஓரளவு சிறப்பாக நடித்துள்ளார். கதாநாயகிகளாக வரும் சோனம் பாஜ்வா மற்றும் ஆத்மீகா இருவரின் நடிப்பும் பெரிதாக எடுபடவில்லை. தமிழ் நடிகர்கள் கருணாகரன், ரவி மரியா, குட்டி கோபியின் நகைச்சுவைக்குச் சிரிப்பு வரவில்லை. பேயாக வரும் வரலட்சுமிமி சரத்குமாரின் நடிப்பு அலுப்பைத் தருகிறது.

ஜான் விஜய், மைம் கோபி, பொன்னம்பலம் என அனைவரின் கதாபாத்திரங்களும் பெயரளவுக்கு உள்ளன. அலுப்பும் சலிப்பும் ஊட்டும் காட்சிகள் படத்திற்குப் பலவீனம்.
முதல் படத்தில் வெற்றி பெற்ற இயக்குநர் டிகே, காட்டேரியில் சற்றே சறுக்கலைச் சந்தித்துள்ளார்.

நகைச்சுவை, திகில் என இரண்டும் படத்தில் எடுபடவில்லை என்பதுதான் சோகம்.