காதலின் 4 நிலைகளை அலசும் குறும்படம் ‘மேஜிக்’

magic1குறும்பட உலகத்திலிருந்து பெரும்பட உலகத்தில்,அதாவது திரையுலகத்தில் கலக்கிக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம் .எனவே குறும்படங்களை இப்போதெல்லாம் வெறும் படங்கள் என்று ஒதுக்கி விடமுடியாது .அவை மீதும் இப்போது கவனம் குவிந்து வருகிறது. அவ்வப் போது வெளியாகும் சிலகுறும்படங்கள் ஆச்சரியப்பட வைக்கின்றன; கவன ஈர்ப்பைப்பெறுகின்றன.அப்படி ஒரு குறும்படமாக உருவாகியுள்ளதுதான் ‘மேஜிக்’ இது முழுக்க ஒரு காதல் கதைதான். மேஜிக் என்பதில் “M A G I C”என்கிற  தலைப்பில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் “My Angelic Gorgeous Irreplaceable Celina” என விளக்கம் உண்டு.

magic11carஇயக்கியிருப்பவர் து.விஜயசுந்தர் . இவர் ஏற்கெனவே  ‘யூ /ஏ.’ ,’ஒபாமா’ போன்ற குறும்படங்களை இயக்கியவர் .விஜே சினிமாஸ் நிறுவனம் ‘மேஜிக்’கைத் தயாரித்துள்ளது. பி.ஹேமந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். விக்னேஷ் ,ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்துள்ளனர். ஷரன் சூர்யா இசையமைத்துள்ளார். ஸ்பெஷல் சவுண்ட் எபெக்ட்ஸ் மோசஸ்.

பாலாஹாசன் நாயகனாக நடித்துள்ளார். திவ்யா பானுச்சந்திரன் நாயகி. இவர் ‘ஜி’ தமிழ் டிவியில் ‘கொஞ்சம் காபி நிறைய சினிமா’ நிகழ்ச்சித் தொகுப்பாளர். இவர்கள் தவிர வேறு 5 முக்கிய பாத்திரங்களையும் சுற்றிச் சுழல்கிறது கதை.

காதலை இப்படத்தில் மாறுபட்ட கோணத்தில் கையாண்டுள்ளார் இயக்குநர். காதலின் 4 நிலைகளை இதில் காட்டியுள்ளார்.

இது சென்னையில் நடக்கும் கதை. இதற்காக நாயகனும் நாயகியும் 4விதமான தோற்றங்களில் வருகிறார்கள்.

விறுவிறுப்பான திரைக்கதையில் விழும் எல்லா முடிச்சுகளும் க்ளைமாக்ஸில்தான் அவிழும் .ஒரு முழுநீள சினிமாவின் வீரியத்தோடு  50 நிமிடத்தில் குறும் படமாக்கியுள்ளனர்.  ‘யாரோ இவள்? யாரோ இவள்?’ என்கிற ஒரு பாடலும் உள்ளது. எழுதியுள்ளவர் கார்த்திக்.

இயக்குநர், உதவியாளர்கள் என்று இந்த படக்குழுவில் பலரும் பொறியியல் பட்டதாரிகள்.

சினிமா படித்தவர்கள் கையிலும் போய்க்கொண்டிருப்பதன் அறிகுறி இது.

திரைப்படம் என்பதே லட்சியம் குறும்பட வெற்றி நிச்சயம் என்கிற முனைப்புடன் இருக்கிறது இக்குழு.

Please find the teaser link below