கீர்த்தி சுரேஷ் பாவாடை ஏன் தூக்கவில்லை ? சினிமா விழாவில் பார்த்திபன் பேச்சு

Parthibanrமாவீரன் கிட்டு திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா  நடைபெற்றது.

விழாவில் இயக்குநர்- நடிகர் பார்த்திபன் பேசியபோது, ” இக்காலத்தில் சினிமா ரசிகர்கள் அனைவரும் சினிமாவை மிகவும் கவனமாக பார்க்கிறார்கள். நாம் சின்ன தவறு செய்தால் கூட அதை கண்டுபிடித்துவிடுகிறார்கள். உதாரணத்துக்கு இதை எடுத்துகொள்ளலாம் “ நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருந்தாலும் தொடரி திரைப்படத்தில் 150km வேகத்தில் செல்லும் இரயிலில் கீர்த்தி சுரேஷ் பாவாடை ஏன் தூக்கவில்லை “ என்ற ஓர் விஷயம் ரசிகர்களால் வாட்ஸ்அப்பில் பகிரப்படுகிறது.

யுகபாரதி நான் நன்றாக வசனம் பேசியுள்ளேன் என்று கூறினார். ஆனால் அந்த வசனம் நன்றாக இருந்ததனால் தான் என்னால் அந்த வசனத்தை நன்றாக கூற முடிந்தது. இயக்குநர் சுசீந்திரன் எப்போதும் Perfect ஆக படத்தை இயக்கும் ஓர் இயக்குநர். இயக்குநர் பிரபுதேவா ஒரு நாயகிக்கு நடனம் கற்று கொடுக்க இரண்டு நாள் , Perfectionனுக்கு 8  நாள் ஆகும் என்று கூறினார். அதே போல் Perfectionனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர் சுசீந்திரன். இப்படத்தில் நடித்திருக்கும் ஸ்ரீ திவ்யா மிகச்சிறந்த நடிகை எனலாம் ஏனென்றால் நான் அழவேண்டிய காட்சியில் இயக்குநர் சுசீந்திரன் ஸ்ரீ திவ்யாவை கிளிசரின் போடுமாறு கூறியதும் அவர் மறுப்பேதும் கூறாமல் அக்காட்சி நன்றாக வரவேண்டும் என்ற எண்ணத்தில் அவர் முகம் பிரேமில் வராது என்று தெரிந்தும் நடித்தார். இவ்வாறு படத்தில் நாயகன் விஷ்ணு விஷால் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்தார்கள். இப்படத்துக்கு பின்னர் விஷ்ணு மகா விஷ்ணுவாக மாறிவிடுவார் ”என்றார்.
விழாவில் கவிஞர் யுகபாரதி பேசியபோது , ” ‘மாவீரன் கிட்டு ‘ திரைப்படம் எனக்கு மனதுக்கு மிகவும் நெருக்கமான படம் , இப்படத்தில் நான் முதன் முறையாக வசனம் எழுதியுள்ளேன். இப்படம் தமிழ் சினிமாவில் எனக்கு  மிக முக்கியமான திரைப்படம். இப்படம் தமிழில் வெளிவந்த மிகச்சிறந்த அரசியல் படங்களில் ஒன்றாக இருக்கும். நான் இசையமைப்பாளர் டி. இமான் அவர்களுடன் தினமும் பேசிவிடுவேன். அவரோட இணைந்து பணியாற்றுவது  மகிழ்ச்சியான விஷயமாகும். நான் எதிர்காலத்தில் வாய்ப்பு வந்தால் திரைக்கதை எழுத்தாளராகவும் மாறவுள்ளேன். நான் திரைக்கதை எழுதினால் தயாரிப்பாளர் சந்திரசாமி அவர்களின் படத்துக்கு தான் முதலில் எழுத வேண்டும் என்று தயாரிப்பாளர் சந்திரசாமி கேட்டுள்ளார். வருங்காலத்தில் எனக்கு பாடல் , வசனம் , திரைக்கதை எழுத வாய்ப்பு ஒன்றாக வந்தால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன் ” என்றார்.

img_9613இயக்குநர் பா.ரஞ்சித் பேசியபோது  ” இப்படத்தின் ட்ரைலர் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கும் என்பதில் மாற்றுகருத்தில்லை. இப்படம் சமூகத்தில் நடக்கும் மிகமுக்கியமான கதையை பேசும் திரைப்படமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இயக்குநர் சுசீந்திரன் மீது எனக்கு பெரிய மரியாதை உண்டு அவர் இயக்கிய “ வெண்ணிலா கபடி குழு “ திரைப்படம் எனக்கு பிடித்த திரைப்படம்.

பொதுவாக  தமிழ் சினிமாவில்  கிராமங்கள்  என்னவாக  இருக்கிறது , கிராமங்களின் தெருக்கள்  என்னவாக  இருக்கிறது  கிராமங்களில் வாழும்  மக்கள் , எப்படிப்பட்ட  அடையாளமாக  இருக்கிறார்கள்  என்பதைப்பற்றி எனக்குள்  ஒரு கேள்வி    இருந்து வந்தது .  முதன் முதலாக  வெண்ணிலா கபடிக்குழு   படம் பார்த்தபோது  கிராமங்களில்  இருக்க கூடிய  அரசியல் , அதுவும் விளையாட்டில்  இருக்கும் அரசியலை மிக  அழகாக ஒரு வணிகசினிமாவில் காட்சி படுத்தியிருந்தார் சுசீந்திரன் ,

அதே போல இன்றைய கிராமங்களில் பொதுப்பயன்பாட்டிற்குள்  இருக்கிற அரசு  பொதுவுடைமை என்னவாயிருக்கிறது , யாருடைய  சொந்தமாயிருக்கிறது என்கிற  ஒரு கேள்வியிருக்கிறது , அந்தக்கேள்விக்கு  இந்தப்படம்  நிச்சயமாக  ஒரு பதிலாக இருக்கும் என்று நம்புகிறேன் .

இந்தப்படத்தில்  வரும் டிரெயிலரும்  , பாடல்களும்  அதை தான்  திருப்பி  திருப்பி  சொல்ல வருகிறது .   இந்த “காதல்” இருக்கிறதே அது சும்மாயிருக்காது . “மாவீரன் கிட்டு ” படத்தில் வரும் இந்த வசனம் கண்டிப்பாக சலசலப்பை உண்டுபண்ணும் .”காதல்” இந்த  சமூகத்தை  மாற்றியே  தீரும் . சமூகத்தில்  காதலால்  மட்டுமே  புரட்சியை  உண்டுபண்ண  முடியும் . என்கிற  நம்பிக்கையை உண்டு . இப்படத்தில் “ காதலை “ பற்றி ஒரு வசனம் இடம்பெற்றுள்ளது , காதல் நிச்சயம் இச்சமூகத்தை மாற்றும். மாவீரன் கிட்டு கமர்ஷியல் ரீதியாகவும் நிச்சயம் வெற்றி படமாக அமையும் ”என்றார் இயக்குநர் பா.ரஞ்சித்.

விழாவில் இயக்குநர் பாண்டிராஜ் பேசியபோது , ”  இப்படம் தென்னகத்தில் நடந்த மிக முக்கியமான சம்பவத்தை பற்றி பேசும் படமாக இருக்கும். இயக்குநர் சுசீந்திரனை எல்லோரையும் போல் எனக்கும் மிகவும் பிடிக்கும். நாங்கள் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றால் கூட அவர்தான் எங்களுக்கு ஆர்டர் செய்வார். அந்த அளவுக்கு எங்கள் மேல் அவருக்கு உரிமை அதிகம் உண்டு. இயக்குநர் சுசீந்திரன் தான் தமிழ் சினிமாவில் எனக்கு தெரிந்து மிகவும் வேகமாக படத்தை இயக்கி முடிக்கும் இயக்குநர் எனக்கு அவருடைய வேகம் மிகவும் பிடிக்கும். மாவீரன் கிட்டு சமூகத்துக்கு மிக முக்கியமான திரைப்படம் அது நிச்சயம் வெற்றி பெறும் என்றார் இயக்குநர் பாண்டிராஜ்.

விழாவில் இயக்குநர் சுசீந்திரன் பேசியது ,  இப்படத்துக்காக இசையமைப்பாளர் இமான் மிகச்சிறப்பான பாடல்களை வழங்கியுள்ளார். அவர் கூறியது போலவே இப்படத்துக்கு இதயத்தில் இருந்து பாடல்களை தந்துள்ளார். எனக்கு நடிகர் பார்த்திபனை விட இயக்குநர் பார்த்திபனை மிகவும் பிடிக்கும் ஏன்னென்றால் அவர் உலக நாயகன் கமல் ஹாசனை போல் சம்பாதித்த பணத்தை எல்லாம் சினிமாவில் முதலீடு செய்பவர். விஷ்ணு விஷால் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். வெண்ணிலா கபடி குழு படத்துக்கு பின்னர் இப்படத்துக்காக நான் விஷ்ணு விஷாலுடன் எட்டு வருடத்துக்கு பிறகு அதே கணக்கம்பட்டி சென்றிருந்தேன். அங்கு மக்கள் எங்களை நன்றாக நியாபகம் வைத்து எங்களுடன் பேசி படபிடிப்பு நன்றாக நடக்க ஒத்துழைத்தனர். விஷ்ணு விஷாலுடன் நான் இது வரை மூன்று திரைப்படங்கள் இணைந்து பணியாற்றிவிட்டேன். நான்காவது திரைப்படத்தில் அவருடன் இணைய பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. iஇப்படத்தின் படபிடிப்பு நன்றாக நடக்க மிகமுக்கிய காரணமாக இருந்த என் தம்பி தாய் சரவனன்னுக்கு நன்றி அவர் தான் அனைவரையும் ஒருங்கிணைத்து படபிடிப்பு நன்றாக நடக்க உதவினார். மாவீரன் கிட்டு நான் எடுத்த படங்களில் மிகச்சிறந்த படமாகவும் கமர்ஷியலாக வெற்றிபெறும் படைப்பாகவும் இருக்கும் என்றார் இயக்குநர் சுசீந்திரன்.