குருவுக்குக் கடமைப்பட்ட பார்த்திபன்!

dcim-94இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். தன்னுடைய குருநாதர் கே பாக்யராஜை கௌரவிக்கும் வண்ணமாக,  ‘சாதனை சல்யூட்’  விழாவை   சென்னையில் உள்ள ‘இமேஜ் உள் அரங்கத்தில்’ நடத்தினார்  .

dcim-175இவ்விழாவில் பார்த்திபன் பேசும் போது “என் வாழ் நாள் முழுவதும்  என்னுடைய குரு கே பாக்யராஜ் அவர்களுக்கு நான் கடமை பட்டிருக்கிறேன்..அவருடைய மகன் சாந்தனுவிற்கு, தமிழ் திரையுலகில்  வெற்றிகரமான கதாநாயகனாக  வலம் வரக் கூடிய எல்லா சிறப்பம்சங்களும் இருக்கின்றன.  கோடிட்ட இடங்களை நிரப்புக திரைப்படம் அதை உறுதி  செய்யும்.  என்னுடைய குருநாதரின் இயக்கத்தில் நான் ஒரு திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு..அது இப்போது நிறைவேறி இருக்கிறது..நான் தயாரிக்கும் அடுத்த படத்தை இயக்குபவர்  பாக்யராஜ் சார்தான் .கதாநாயகன் அவருடைய மகன் சாந்தனு.” என்று கூறினார் ராதாகிருஷ்ணன் பார்த்திபன்.

“என்னிடம் பணி புரிந்த, பணி புரிந்து கொண்டிருக்கின்ற உதவியாளர்கள் இந்த விழாவில் இருக்கின்றார்கள்…..அதற்கும்  மேலாக, என்னுடைய குருநாதர், எங்க இயக்குநர் திரு பாரதி ராஜா சார் இங்கு என்னோடு இருக்கிறார்கள்…..இதைவிட என்  வாழ்நாளில் மகிழ்ச்சிகரமான நாள் இருக்க முடியாது….” என்று மகிழ்ச்சியோடு கூறினார் கே பாக்  யராஜ்.⁠⁠⁠⁠dcim-183

பிரம்மாண்ட முறையில் நடைபெற்ற இவ்விழாவில் இயக்குநர் பாரதி ராஜா, கே பாக்ய ராஜ் – பூர்ணிமா பாக்யராஜ், எஸ் ஏ சந்திரசேகர், இயக்குநர் ஷங்கர், பிரபு, நாசர், சிவகுமார், எஸ் பி பாலசுப்பிரமணியம், விஷால், கார்த்தி, சாந்தனு, கீர்த்தனா, மன்சூர் அலி கான், இயக்குநர் விஜய், கரு பழனியப்பன், டிரம்ஸ் சிவமணி, டி சிவா, சுகன்யா, டாக்டர் கே கணேஷ், நெப்போலியன், கே எஸ் ரவிக்குமார், விக்ரமன், பி வாசு, லிங்குசாமி, கங்கை அமரன், பாண்டியராஜன், பவர் ஸ்டார் – ஸ்ரீனிவாசன், மயில்சாமி, ஜாகுவார் தங்கம், இசையமைப்பாளர் சி சத்யா, ஆர் கே சுரேஷ், இயக்குநர்  மகிழ் திருமேனி, பாலாஜி, இயக்குநர் சரண், வி சேகர், அருள்பதி, ரோகினி, சுஹாசினி, பிரவீன் காந்த், சேரன், எஸ் எம் குமார், ஆதவ் கண்ணதாசன், மங்கை ஹரி ராஜன், பட்டுக்கோட்டை பிரபாகர், சித்ரா லக்ஷ்மன், எச் முரளி, கலை ஞானம், ஆடை வடிவமைப்பாளர் தக்ஷா, ஆர் கே செல்வமணி, சந்தான பாரதி, லொள்ளு சபா ஜீவா, எஸ் ராமகிருஷ்ணன், மனோபாலா, ஞான ராஜசேகரன் (IAS), பாரதிராஜா, லக்ஷ்மி ராமகிருஷ்ணன், ராம்பாலா, பாஸ்கி, நடன இயக்குநர்கள் ஷெரிப், சாண்டி,  ரமேஷ் கண்ணா, சந்தோஷ் பிரதாப், லலிதா, ஸ்ரீதர், ஜி எம் குமார், ரேகா, லிஸ்ஸி, நந்தா பெரியசாமி, பிருந்தா சாரதி, பைவ் ஸ்டார் கதிரேசன், படத்தொகுப்பாளர் மோகன், மோகன் ராஜா, கார்த்திக் சுப்பாராஜ், நலன் குமரசாமி, சக்தி சரவணன், சுந்தர் சி,  ரம்யா (VJ) எனத் திரளானவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இந்த விழாவில் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கத்தில், சாந்தனு – பார்வதி நாயர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தின் பாடல்களும் வெளியிடப்பட்டன.