கேப்டன் மகனுக்கு சிம்பு பாடியபாடல்!

விஜயகாந்தின் வல்லரசு, நரசிம்மா, தென்னவன், சுதேசி, அரசாங்கம், விருதகிரி போன்ற வெற்றிப் shanmugapandi6படங்களைத் தயாரித்த  எல்.கே.சுதீஷ் இப்போது கேப்டனின் இளைய மகன் சண்முகப்பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் சகாப்தம் திரைப்படத்தை மிகுந்த பொருட்செலவில் மிக பிரமாண்டமாக தயாரிக்கிறார்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களான ஆளியார் டேம், வால்பாறை, ஆனைமலை போன்ற பகுதிகளில் 25 நாட்கள் நடைபெற்றது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு கும்பகோணத்தில் 20 நாட்கள் நடைபெற்றது. அங்கே சுமார் ஒருகோடி செலவில் ஆயிரம் துணை நடிகர்கள் முன்னிலையில் இருநூறு நடனகலைஞர்கள் பங்கேற்க ஆறு நாட்கள் ஒருபாடல் மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டது. இப்பாடலுக்கு நடன இயக்குநர் ஷோபி அவர்கள் நடனம் அமைத்தார். இதில் நாயகன் சண்முகப்பாண்டியனும், நாயகி நேகாவும் பங்கேற்று  நடனம் ஆடியிருக்கிறார்கள்.

Silambarasan-STR-1இதில் நாயகிகளாக மிஸ்-இந்தியா பட்டம் வென்ற நேகாவும், மிஸ் பெங்களூர் பட்டம் வென்ற சுப்ரா ஐயப்பாவும் அறிமுகமாகிறார்கள். இவர்களோடு சிங்கம்புலி, ஜெகன், பவர்ஸ்டார் டாக்டர்.சீனிவாசன், தேவயானி, ரஞ்சித், ராஜேந்திரநாத், சண்முகராஜன், பன்னீர் புஷ்பங்கள் சுரேஷ், தலைவாசல் விஜய் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்திற்காக சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளார். இப்பாடலை தயாரிப்பாளர் சுதீஷ் அவர்களின் நட்பிற்காக பாடிக்கொடுத்தார்.

இதில் சிறப்பு தோற்றத்தில் கேப்டன் விஜயகாந்த்  நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்நுட்பக் கலைஞர்கள்  :தயாரிப்பு : கேப்டன் சினி கிரியேஷன்ஸ். எல்.கே.சுதீஷ்.​இயக்கம் : சுரேந்தர்.​
கதை : நவீன் கிருஷ்ணா.​ வசனம் : வேலுமணி,இசை : கார்த்திக்ராஜா,ஒளிப்பதிவு   : பூபதி .கலை : ஜே.கே.

தற்போது இதன் மூன்றாம் கட்ட படப்பிடிப்பிற்காக இப்படக்குழு வெளிநாடு சென்றுள்ளார்கள். மலேசியாவில் உள்ள கோலாலம்பூர், லங்காவி மற்றும் பேங்காக்கிலும் 35 நாட்கள் படமெடுத்து படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.