சத்யராஜின் பாராட்டு : நெகிழும் வில்லன் நடிகர்!

jenish.சென்ற வாரம் திரைக்கு வரவிருக்கும் “ஆத்யன்” திரைப்படத்தின் வில்லன் “ஜெனீஷ்” தான் அந்த வில்லன்.

ஆத்யன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வில்லன் ஜெனீஷை பாராட்டி பேசியிருந்தார் நடிகர் சத்யராஜ்,

“ஒரு படத்தில் வில்லனை எந்த அளவிற்கு பவர்ஃபுல்லாக காட்டுகிறார்களோ அந்த அளவிற்கு படம் பலம் பெறும். இந்த படத்தை பார்த்து விட்டேன். வில்லன் பெயர் தெரியவில்லை ஒரு புதுமுகம் நடித்துள்ளார் , (பெயரை விசாரித்து, ஆம் “ஜெனீஷ்” என சொல்லிவிட்டு)  அவங்கெல்லாம் நம்ம இனம் (வில்லன் இனம்) பிரமாதமாக நடித்திருக்கிறார் ” என்று வாழ்த்தி பேசினார். இந்த பாராட்டை தனக்கு கிடைத்த முதல் பெரும் விருதாக கருதி மகிழ்வதாக நெகிழ்கிறார் நடிகர் ஜெனீஷ் .

ஜெனீஷ் இதற்கு முன் கயல், மதயானைக்கூட்டம் , நாய்கள் ஜாக்கிரதை, மீகாமன் மற்றும் சில திரைப்படங்களில் அந்தந்த திரைப்படங்களின் “திருப்புமுனை” பாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர். “கயல்” படத்தில் கதாநாயகியை இவர் “கிடைக்க மாட்டான் அவன் கிடைக்கவே மாட்டான்” என்று மிரட்டும் காட்சி இன்னும் ரசிகர்களிடம் பிரபலம்.

படங்களின் எண்ணிக்கையில் கவனம் செலுத்தாமல் ,சிறிதோ பெரிதோ தான் ஏற்கும் வேடங்கள் ரசிகர்களின் மனதில் பதிந்து, பயணிப்பதாக அமைய வேண்டுமென விரும்புகிறார் இந்த புது வில்லன்.

நாய்கள் ஜாக்கிரதை வெற்றிப் படைப்பில் பணிபுரியும் வேளையில் கிடைத்த நட்பில் உருவான ஒரு புதிய கூட்டணியின் படம் “ஆத்யன்”அழகான் காதல்,திகில் கலந்த ஆக்‌ஷன் படமாக உருவாகியிருக்கிறது. படத்தில் இவரது கதாபாத்திரம் நிதானமாக செயல்படும் ஒரு ஸ்டைலிஷ் வில்லனாக அமைந்திருப்பதில் மகிழ்ச்சி .

பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனிடன் பணியாற்றிய சசிகுமரன் இயக்கத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்திருக்கும் “பப்பரப்பாம்” விரைவில் வெளியாகிறது.jenish2

அடுத்ததாக அகமத் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினின் அடுத்த படம்,

இயக்குநர் சந்திரா இயக்கத்தில் கரு.பழனியப்பன், சமுத்திரக்கனியுடன் “கள்ளன்”,

மதயானைக்கூட்டம் இயக்குநர் ,ஆடுகளம் படத்தின் வசனகர்த்தா விக்ரம் சுகுமாரன் இயக்கும் படம்

தடையறத் தாக்க, மீகாமன் இயக்குநர் மகிழ் திருமேனியின் அடுத்த படம் ,

மதயானைக்கூட்டம் நண்பர் இளவரசு இயக்கத்தில் ,வேந்தர் மூவீஸ் தயாரிப்பில்,”மெட்றாஸ்”கலையரசனுடன் “ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்”,

வெற்றிச் செல்வன் இயக்குநர் ருத்ரனின் அடுத்த படம்,

மன்னார் வளைகுடா இயக்குநர் தனசேகரனின் தமிழ் ,கன்னடம் என இரண்டு மொழி திரைப்படம் ,

ஆத்யன் தயாரிப்பாளரின் அடுத்த படம் என நடித்து வருகிற படங்கள் அணி வகுக்கின்றன.

இவரது டப்பிங் அனுபவங்கள்:-

பின்னணி குரல் கலைஞனாக  200+ படங்கள், 70 குறும் படங்கள், 65விளம்பரப் படங்கள் ,

ஜெயம்ரவி,விஷால்,விக்ரம்,தனுஷ்,ஜெய்,அருண் விஜய்,அட்டகத்தி தினேஷ், போன்ற நடிகர்களுக்கு “டிராக் வாய்ஸ்” மற்றும் “சண்டை குரல்”

தெலுங்கு திரைப்பட இயக்குநர் ,நகைச்சுவை நடிகர் “வெண்ணிலா கிஷோர்” தான் நடிக்கும் அனைத்து படங்களின் தமிழ் பதிப்பிற்கும் ( சமீபத்தில் வெளியான “மகேஷ்பாபு தயாரித்து நடித்த “ஸ்ரீமந்த்துடு”தமிழில் “செல்வந்தன்”, இப்போது திரையங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் ராம்சரன் நடித்த “புரூஸ்லீ-2” நாகார்ஜூனா-அமலா தம்பதியரின் “சுட்டிக்குழந்தை” – “அகில்” கதாநாயகனாக தமிழ், தெலுங்கில் ஒரே நாளில் அறிமுகமாகவிருக்கும் படம், விரைவில் வெளியாகவிருக்கும் அல்லு அர்ஜூன், ராம்சரண், ஸ்ருதிஹாசன், காஜல் அகர்வால், எமி ஜாக்சன், நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற “எவடு” திரைப்பட தமிழ் பதிப்பு “மகதீரா”).

இந்த படங்களுக்கும் மேலும் வரவிருக்கும் அனைத்து படங்களுக்கும் பின்னணி குரல் வழங்க கேட்டுள்ளார். மேற்கண்ட அனைத்து படங்களிலுமே பேசிய நகைச்சுவை வசனங்களில் இன்றைய டிரெண்ட்டிற்கு ஏற்றவாறு இளம் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் “வேதாளம்” மாதிரியான வார்த்தைகளுடனான வசனங்கள் தியேட்டர்களில் கைதட்டல் வாங்குவது  பற்றி மகிழ்ச்சி தெரிவிக்கிறார்.