சரத்குமார் கலந்து கொண்டு வழங்கிய விருதுவிழா !

sarath21ரோட்ராக்ட் (ரோட்டரி அமைப்பின் இளைஞர் பிரிவு) அமைப்பு நடத்திய விருது விழாவில்சிறப்பு விருந்தினராக நடிகர் சரத்குமார் பங்கேற்று வழங்கினார்.

நாம் கனவு காணும் சமூகம் தானே உருவாகி விடுவதில்லை. அந்த மாபெரும் சிகரத்தின் உச்சியை தொட ஒருசிலர் முதல் அடியை எடுத்து வைக்கிறார்கள். அந்த வகையில் ரோட்ராக்ட்ஸ் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் பல்வேறு கனவுகளுடன் தங்களை சமூகசேவை பணிகளில் ஈடுபடுத்தி வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் விதமாக நடைபெற்றது தான் இந்த விருது விழா.
சென்னை எம்ஆர்சி நகரில் செயல்பட்டு வரும் செட்டிநாடு வித்யாஸ்ரமம் பள்ளியின் குமாரராஜா முத்தையா அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (21/06015) பிற்பகல் 3 மணியளவில் வெகுசிறப்பாக நடந்தேறியது இந்த அற்புதவிழா.. சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சரத்குமாரும், ரோட்டேரியன் ஐசக் நாசரும் இதில் கலந்து கொண்டனர். கௌரவ விருந்தினராக செயிண்ட் பிரிட்டோ கல்லூரி குழுமத்தின் தலைவர் திருமதி.விமலா பிரிட்டோ கலந்து கொண்டு சிறப்பித்தார்.
விழாவின் போது, கடந்த ஆண்டு சிறப்பாக செயலாற்றிய பல்வேறு  கல்லூரிகளைச் சேர்ந்த ரோட்ராக்ட்ஸ் அமைப்புக்கு நடிகர் சரத்குமார் பரிசு வழங்கி கௌரவித்தார்.
விருது பெற்ற ஒருசில திட்டங்கள்…
பி.எம்.ஆர். பொறியியல் கல்லூரி
ரோட்டரி கிளப் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் ஸ்டெம் செல் தானம் ஆகிய முகாம்கள் நடத்தப்பட்டன. ஏறத்தாழ 150 பேர் கலந்து கொண்டு தங்கள் கண்களை பரிசோதனை செய்து கொண்டதோடு, ஒருசிலர் இலவச மூக்கு கண்ணாடிகளையும் பெற்றனர். 125 மாணவர்கள் தங்களின் ஸ்டெம்செல் மாதிரிகளை
தானமாக வழங்கினர். அடையாளம்பட்டு கிராமத்தில் நடைபெற்ற இவ்விரண்டு முகாம்கள் எளிய மனிதர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது..
பெண்கள் கிறித்துவ கல்லூரி
பெண்கள் கிறித்துவ கல்லூரியின் ரோட்டரி கிளப் அமைப்பின் முயற்சியால் முன்னெடுக்கப்பட்டது எச்.ஐ.வி.நோய் தொற்று குறித்த முகாம்.. இந்த தொற்றால் நோய்எதிர்ப்பு சக்தி பாதிக்கப்பட்டு சமூக தளத்திலும் சமத்துவத்தை இழக்கும் குழந்தைகளின் வாழ்வில் ஒரு வசந்தததை ஏற்படுத்துவதே இந்த முகாமின் நோக்கம்… இதன்படி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9-ந் தேதி 8 இந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை உள்ளடக்கி சித்ரகலா என்ற ஓவியப் போட்டி நடைபெற்றது..
பிரத்யஷா சென்னை
ஹோப் சென்னை
ரியல் சாரிட்டபிள் டிரஸ்ட் சென்னை
சி.எச்.இ.எஸ். ஆனந்த இல்லம், திருவள்ளுர்
புனித சேவியர், நாமக்கல்
ஹோப் திருநெல்வேலி
யூத் வித் எ மிஷன் சில்ட்ரன்ஸ் ஹோம், குரோம்பேட்டை
வார்டு – கிராமப்புற பெண்கள் மேம்பாடு அமைப்பு, நாமக்கல்
சென்னை, திருவள்ளுர், திருநெல்வேலி மற்றும் நாமக்கல் ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கி நடைபெற்ற இந்த போட்டியில் 188 குழந்தைகள் பங்கேற்று என் கனவு உலகம் என்ற தலைப்பில் ஓவியங்களை வரைந்தனர். 7-9, 10-12, 13-16 ஆகிய 3 வயது பிரிவில் நடைபெற்ற இப்போட்டியில் 55 பேர் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். பெண்கள் கிறித்துவ கல்லூரியின் ரோட்டரி கிளப் சார்பில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இந்த விழா பெருமகிழ்வுடன் அரங்கேறியது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள் வாகனங்களில்
அழைத்து வரப்பட்டனர். காலை சிற்றுண்டியோடு பசுமைசூழ் கல்லூரி வளாகத்தில் நடைபயணம் என அந்த நாள் மறக்க முடியாத ஓர் அனுபவம். கல்லூரி வளாகத்தில் உள்ள பெருமைமிகு டவ்டன் இல்லத்தில் கல்லூரி முதல்வர் திருமதி.ரிட்லிங் மார்க்ரெட் வாலர், சிறப்பு விருந்தினர் திருமதி. ருக்மணி ஐபிஎஸ் பங்கேற்க இசைநிகழ்வுடன் குழந்தைகள் மகிழ்விக்கப்பட்டனர். செவித்திறன் குறைவு மற்றும் பார்வை குறைபாடு உடைய மான்போர்ட் சிறகுகள் அமைப்பின் சிறார்கள் இடையே விளையாட்டுத்தன்மையை அதிகரிப்பதே இதன் மையநோக்கம்.
award-sarathஎத்திராஜ் கல்லூரி
கல்லூரி ரோட்ராக்டர்ஸ் சார்பாக நடைபெற்ற ஒருசில திட்டங்கள் பின்வருமாறு…
குழு உறுப்பினர்களால் ரெட்ஹில்ஸ் பகுதியில் நடத்தப்பட்ட இலவச மருத்துவ முகாமில் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தேவையான நபர்களுக்கு இலவசமாக மருந்துகளும் வழங்கப்பட்டன. மேதா மருத்துவமனை சார்பில் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு நலத்துறை சார்பில் நடத்தப்படும் அங்கன்வாடி பள்ளிக்கு சென்ற அமைப்பினர் 25 கிலோ அரிசி, பருப்பு மற்றும் தேவையான உணவு பொருட்களை அங்குள்ள குழந்தைகளுக்கு வழங்கினர்.
எழும்பூரில் இயங்கிவரும் சேவாசமாஜத்திற்கு சென்ற குழு உறுப்பினர்கள் அந்த தொண்டு நிறுவன குழந்தைகளின் மேம்பாட்டிற்காக 3000 ரூபாய் நிதியுதிவி அளித்தனர்.
இதேபோன்று சேவா சமாஜத்தின் மகளிர் அமைப்பிற்கு சென்ற குழுவினர், அங்குள்ள சிறுமிகளுக்கு மதிய உணவு மற்றும் தேவையான எழுதுபொருள் கருவிகளை வழங்கினர்.
உதவும் கரங்கள் அமைப்பிற்கு சென்ற இவர்கள், ஒருநாள் முழுவதும் செலவிட்டு அங்குள்ள குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் பணியில் தங்கள் ஈடுபடுத்திக் கொண்டனர்.
இவற்றுக்கு எல்லாம் சிகரம் வைத்தார்போல் கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற வண்ணமிகு விழாவில் சிறப்பாக செயல்பட்ட இரண்டு திட்டங்களுக்கு பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது.
லொயோலா கம்யூனிட்டி
சென்னை கீழ்பாக்கத்தில் இயங்கி வரும் மித்ரா ஹோம்ஸ் என்ற மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளியில் 130 அடி நீள நடைபாதை கட்டித்தரப்பட்டது. இந்த நடைபாதையானது அங்குள்ள வகுப்பறைக்கும், உணவுக்கூடத்திற்கும் இடையில் அமைந்தது. 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் இந்த நடைபாதை கட்டப்பட்டது. இதற்கு சன்சிட்டி ரோட்டரி கிளப் அமைப்பினர் மற்றும் நண்பர்கள் உதவியுடன் ரோட்ராக்டர்சால் இந்த நிதி திரட்டப்பட்டது. 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி இந்த நடைபாதை திறப்பு விழா கண்டது.
ஆர்.கே.எம்.விவேகானந்தா
பசி தீர்ப்போம் என்ற உன்னத நோக்கத்தோடு 4873 கிலோ அரிசி மற்றும் உணவுப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு சென்னை மற்றும் புறநகர்களில் அமைந்துள்ள 36 அநாதை விடுதிகளுக்கு வழங்கப்பட்டது.
உயர்ந்த நோக்கதோடு செயல்படுகிறோம் என்ற உணர்வை ரோட்ராக்டர்சுக்கு இந்த செயல் உணரவைத்தது. கிரீம்ஸ் சாலையின் பழக்கடை என்ற பெருமைமிகு நிறுவனம் தங்கள் தளத்தில் இந்த நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.
டிஜி வைஷ்ணவா கல்லூரி
கல்லூரி மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் பங்களிப்போடு திரட்டப்பட்ட 700 கிலோ அரிசியானது, சென்னையில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இருளர் பழங்குடியினர் குடியிருப்புக்கு வழங்கப்பட்டது. அங்குள்ள 14 குடும்பத்தினருக்கு நபர் ஒருவருக்கு 5 செட் உடைகள் என வழங்கப்பட்டது.  இனிப்பு பிஸ்கெட்டுகள் தரப்பட்டன. மேலும் பள்ளி செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி கேள்வி -பதில் நிகழ்ச்சி ஒன்றும் நடத்தப்பட்டது…