சினிமா வளர்ந்திருக்கிறது ; ஆனால் வியாபாரம் உயரவில்லையே ஏன்? -நடிகர் ஆர்.கே.கேள்வி.

rk7veசினிமா வளர்ந்திருக்கிறது ; ஆனால் வியாபாரம் உயரவில்லையே ஏன்?  என்று  ஒரு சினிமா விழாவில் நடிகர் ஆர்.கே.கேள்வி எழுப்பினார். இது பற்றிய விவரம் வருமாறு:

மக்கள் பாசறை வழங்கும் ஆர் கே.நடிக்கும ஷாஜி கைலாஸ் இயக்கும் படம் ‘வைகை எக்ஸ்பிரஸ்’  .இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று கமலா திரையரங்கில் நடைபெற்றது.

விழாவில் படத்தின் நாயகன் நடிகர் ஆர்.கே.பேசும்போது,

“ஒரு சிறந்த தயாரிப்பு என்றால் மக்களிடம் கொண்டு சேர்க்க மார்க்கெட்டிங் சிறப்பாக இருக்கவேண்டும் எந்த தயாரிப்பு நன்றாக இருந்தாலும் மார்க்கெட்டிங் மூலம் இந்தியா முழுக்க கொண்டு செல்ல முடியும் . உலகம்முழுக்க கொண்டு செல்ல முடியும். உலகத்திலேயே சிறந்த தயாரிப்பு சினிமா. ஆனால் அதை மார்க்கெட்டிங் செய்ய முடியாமல் சினிமா உலகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. .
எல்லாருமே தங்கம் வாங்கினாலும் கூட ஒன்று இலவசம் என்கிறார்கள். ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்கிறார்கள்.இந்திய சினிமா உலகம் எவ்வளவோ வளர்ந்திருக்கிறது உயர்ந்திருக்கிறது .ஆனால் வியாபாரம் உயரவில்லையே ஏன்? எங்கோ பின்தங்கியிருக்கிறது ஏன்?

மார்க்கெட்டிங் மாறினால் எல்லாம் மாறும் .இந்த உலகில் இழந்த உயிரைத் தவிர அனைத்தையும் மீட்டுக் கொண்டுவர முடியும் .அப்படி சினிமா வியாபாரத்தையும் மீட்டுக் கொண்டுவர முடியும். நல்ல வியாபார முறையை நமக்கு கற்றுக் கொடுத்தால் வெற்றி பெற முடியும் .

எல்லா தியேட்டரின் டிக்கெட்டும் ஏன் ஒரிடத்தில் கிடைப்பதில்லை? மார்க்கெட்டிங் மாறினால் எல்லாம் மாறும். இது எனக்குள் ஐந்து ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருந்த சிந்தனை .
100 பேருக்கு 200 பேர் இலவசமாகப் படம் பார்க்கலாம். குடும்பம் குட்டியோட மக்கள்.சந்தோஷமா படம் பார்க்கட்டுமே…டிக்கெட்டுக்கு 100 ரூபாய்க்கு 300 ரூபாய் வாங்குவதைவிட 100ரூபாய்க்கு 3 பேரைப் பார்க்க வைத்தால் வெற்றி பெறலாம் .இன்று எல்லாமே மாறிவிட்டது. ஆன் லைனில் புக் பண்ண 50 ரூபாய் டிக்கெட்டுக்கு 30 ரூபாய் கட்டணம் வாங்குகிறார்கள். 10 டிக்கெட்டுக்கு 300 ரூபாய்  கட்டணம் வாங்கினால் விளங்குமா?

நாங்கள் 5 ரூபாய் கொடு அதை மக்களுக்கு கொடு என்கிறோம். இது தவறா? எங்க ஹிட் பாக்ஸ்ல டிக்கெட் விற்கிறவர்கள் ஒரு டிக்கெட்டுக்கு 5 ரூபாய்தான் வாங்குகிறார்கள். 1 லட்சம் டிக்கெட் விற்றால் 5 லட்சம் ரூபாய் சம்பாதிப்பார்கள்.ஏன் ஏழைத்தமிழனும் லட்சாதிபதி ஆகட்டுமே?  எங்கள் முயற்சி நிச்சயமாக வெற்றி பெறும் ஹிட் பாக்ஸில் பெரிய நடிகர்களின் படங்கள்  வெளிவரும் நிலை வரும்.
ve-gpசினிமா உலகம் வியாபாரத்தை மாற்றினால் 8 கோடி பேர் மக்களும் சினிமா பார்க்க வைக்க முடியும் ஒரு வருடம் கதையைத் தேர்வு செய்கிறோம். படப்பிடிப்பு ஒரு வருடம்செய்கிறோம். ஆனால் மார்க்கெட்டிங் என்ன என்றால் போஸ்டர் ஒட்டுகிறோம் என்கிறார்கள்.

இந்த மார்க்கெட்டிங்கில் நாங்கள் தீவிரமாக இருந்தோம் அதனால்தான் ‘வைகை எக்ஸ்பிரஸ் ‘ படம் தாமதம் போல் தெரிகிறது. படமெடுப்பதைவிட வியாபாரம் தானே முக்கியம்?. எல்லா தியேட்டர்களிலும் 4 வாரங்கள் புக் ஆகும் தகுதி என் ‘வைகை எக்ஸ்பிரஸ் ‘ படத்துக்கு இருக்கிறது. அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.  ” என்றார்.

விழாவில்  படத்தின் ஒளிப்பதிவாளர் ராஜரத்னம், , பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி ,தயாரிப்பாளர்கள்  கேயார்,ஏ.எல்.அழகப்பன் , ஏ.எம்.ரத்னம், பைவ் ஸ்டார் கதிரேசன், நடிகைகள் நீது சந்திரா, கோமல் சர்மா, நடிகர்கள் நாசர், எம்.எஸ். பாஸ்கர் , மதன் பாப் , மனோபாலா ,  ரமேஷ் கண்ணா, இப்படத்தில் நடித்துள்ள  கேரளாவின் மேடைக் கலைஞர் அனுசந்திரன்,ஆர்கேவின் அடுத்த படத்தின் இயக்குநர் சக்திவேல், ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன்  ஆகியோரும் கலந்து கொண்டனர் .

நிகழ்ச்சியில் ஆர்கே வின் புதிய விநியோகத் திட்டமான ஹிட் பாக்ஸ்  அமைப்பின் விநியோகஸ்தர்கள்  ஏராளமானோரும் கலந்து கொண்டனர்.

சினிமா விழாக்களில் வழக்கம் போல படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் படம் பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள். இவ்விழா அப்படி அமையவில்லை.  பார்வையாளர்களுக்கு  பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மூலம் களிப்பூட்டினர். அவ்வகையில் விழாவின் முன்னதாக’ 50 மணி நேரம் ட்ரம் வாசித்து ‘ உலகப் புகழ் பெற்ற குமரன் வழங்கிய ட்ரம் இசை நிகழ்ச்சியும்’ டான்ஸ் கம்பெனி ‘ ஜான் பிரிட்டோ வின் நடன நிகழ்ச்சியும் நடை பெற்றது குறிப்பிடத்தக்கது