சிம்பொனி இசை அமைக்கும் ஜி வி பிரகாஷ்!

gv-prakash1-600இளம் இசை அமைப்பாளர் ஜி வி பிரகாஷ் ,நடிப்பு இசை என பல்வேறு துறைகளில் பிரகாசித்துக் கொண்டு இருக்கிறார். நடிப்புத் துறையில் அவர் சிரத்தையுடன் மேற்கொள்ளும் முயற்சிகள் அவரை தேர்ந்த நடிகராக கரை சேர்க்கும் என்பதில் சந்தேகமே இல்லை.நடிகராக மட்டுமே அவர் பயணம் மேற்கொள்வார் ,இசை துறையில் கவனம் செலுத்த மாட்டார் என போலி ஆரூடங்களும் சொல்ல பட்டு வந்தன.ஆனால் ஜி வி என்று திரை உலகினரால் அன்போடு அழைக்க படும் ஜி வி பிரகாஷ் சிம்போனி இசைக்காக ஜெர்மனி செல்ல இருப்பது அவர் இசை அமைப்பாளராக மென் மேலும் உயர இருப்பதை மெய்ப்பிக்கிறது.

‘ சர்வதேச சந்தையில் மிக முக்கியமான ஒரு நுகர் பொருளின் விளம்பரத்துக்காக நான் இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளேன்.உலக அரங்கில் சோபிக்கும் சில இசை அமைப்பாளர்களுடன் என்னை ஒப்பிட்டு , எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தமைக்கு இறைவனுக்கு நன்றி.ஜெர்மனியில் உள்ள Stuttgart என்னும் நகரத்தில் மேற்கொள்ள இருக்கும் இசைப் பதிவுக்காக நான் விரைவில் செல்ல உள்ளேன்.இசை உலகில் பிரசித்தி பெற்ற பெயர்கள் பல ஜெர்மனியில் தோன்றி உள்ளன. இதில் மிக முதன்மையானவர் எனக் கருதப் படும் கோன்ராத் பௌமன் அவர்களின் இசை காற்றில் மிதக்கும் ஜேர்மனி நாட்டில் என்னுடைய இசையும் கலக்கும் என்பதே எனக்கு பெருமை ‘ என்கிறார் ஜி வி பிரகாஷ்.