‘செஞ்சிட்டாளே என் காதல’ விமர்சனம்

senjittaleenkadhala1காதலை உயர்த்துபவர்கள்,காதல் போயின் சாதல் என்பார்கள் . ஆனால் இக்காலத்தில் ஒரு காதல் போயின் இன்னொரு காதல் என்பார்கள். ஒரு காதல் தோல்விக்கு, மற்றொரு காதல் தீர்வாகாது என்பதைச் சொல்கிற படமே ‘செஞ்சிட்டாளே என் காதல’ .

இப்போதெல்லாம்  இளவட்டங்கள்  ’ஐ லவ் யூ’ என்ற வார்த்தையைப்போலவே ’பிரேக்-அப்’ என்ற வார்த்தையையும் பயன்படுத்துவார்கள்.

அப்படிப்பட்ட  பிரேக்-அப்பின் பின்னணி சொல்லும் படமாக வந்துள்ளதுதான் ‘செஞ்சுட்டாளே என் காதல’.

கல்லூரி முடித்துவிட்டு வெற்று வாலிபனாகத்திரியும் நாயகன் எழில் துரைக்கும், கல்லூரி படிப்பைத் தொடரும் நாயகி மதுமிலாவுக்கும் காதல் மலர்கிறது. தனது காதலுக்காக நாயகியின் தோழிகளுக்குக் கூட கைப்பிள்ளை போல ஏவல் எடுபிடிவேலைகள் செய்யும் அளவுக்குப்போகிறான் நாயகன்.

இப்படிக் காதலில் விழுந்து புரண்ட நாயகன் எழில் துரையை மதுமிலா திடீரென்று கழற்றி விட, இவர்களுக்குள் என்ன நடந்தது, எதற்காக இந்த பிரேக்-அப், இருவரும் மீண்டும் சேர்ந்தார்களா இல்லையா, என்பதே ‘செஞ்சிட்டாளே என் காதல’ படத்தின் முடிவு.

இப்படத்தின்  நாயகனாக வரும் எழில் துரைதான் படத்தை இயக்கியிருக்கிறார். குறும்பட பின்னணியில் இருந்து வந்துள்ள இயக்குநர் எழில் துரை, நல்ல கருவை தேர்ந்தெடுத்திருந்தார். ஆனால் அதை சொன்ன விதத்தில் முதல் பாதி முழுவதும் நம்மை வச்சி செஞ்சாலும், இரண்டாம் பாதியில் சில காட்சிகளில் நம்மை கவர்ந்துவிடுகிறார்.

மதுமிலாவின் நடிப்புக்கு சபாஷ்.  பேச்சு, நடை என தனக்கான தனிவழியில் நடித்துள்ள எழில் துரையின் நடிப்பு பல இடங்களில் மிகை., காதல் உடையும் நேரத்தில் கெஞ்சிடும் காட்சிகளிலும், தனது காதலி வேறு நபருடன் தனியாகச் செல்வதை தாங்க முடியாமல் எதிர்க்கும் காட்சியிலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

senjittaleenkadhala.24எப்.ராஜ் பரத்தின் இசையில் பின்னணி இசை சில இடங்களில் வசனங்களைத் தாண்டினாலும் பல இடங்களில் ரொம்ப நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ளது. ஒளிப்பதிவாளர் எம்.மணீஷின் ஒளிப்பதிவில் இரவு நேரக் காட்சிகள் அசத்தல்.

நாயகன் வசனம் பேசும் பாணி சில இடங்களில்தான் ரசிக்க வைக்கிறது. சில இடங்களில் அவர் என்ன பேசுகிறார் என்பதே புரியாமல் போகிறது.

இக்காலஇளசுகளுக்கு ஏற்ற  கதையைகையில் எடுத்துள்ள இயக்குநர் எழில் துரை, திரைக்கதை அமைப்பதில் சற்று தடுமாறியிருக்கிறார். காணாமல் போன நாயகனைத் தேடுவது போல தொடங்கும் படம், முதல் பாதி முழுவதுமே பிளாஷ் பேக், பிளாஷ் பேக் என்று நகர்வது சற்று சலிப்படையச் செய்தாலும், பிளாஷ்பேக் காட்சிகள் குறையும் போது படத்தில் சுவாரஸ்யமும்  வேகமும் கூடுகின்றன.

காதல் தோல்வியை மையப்படுத்தியுள்ள இந்த படத்தில் காட்சிகளைவிட, கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள் பலமவீனமாக உள்ளன. நல்லவேளை   காதல் தோல்வி என்றாலே பெண்களை இழிவுப்படுத்துவர். அப்படி எந்த வசனத்தையும் படத்தில் வைக்காமல், க்ளைமாக்ஸை நாகரிகமாகக் கையாண்டுள்ள இயக்குநருக்கு சபாஷ.

சில குறைபாடுகளோடு ‘செஞ்சிட்டாளே என் காதல’ படம் இருந்தாலும், காதல் தோல்வி என்றதும்  அடுத்தடுத்த ஆண்களைத் தேடி செல்லும் பெண்களுக்கும், அடுத்த காதலை தேடிச் செல்லும் ஆண்களுக்கும் அழகான செய்தி சொல்லி உள்ளது.