’சென்னையில் திருவையாறு’ -டிசம்பர் தோறும் ஓர் இசையாறு : இவ்வாண்டு இசை விழா முழு விவரம்

Chennaiyil Thiruvaiyaru Season 10 Press Meet Stills (20)Chennaiyil Thiruvaiyaru Season 10 Press Meet Stills (20)chennaiyilthiruvaiyaruggrp-rsஒவ்வொரு ஆண்டின் நிறைவிலும் சென்னை மாநகரத்தில் நிகழக்கூடிய
தரமான, அழகான, முழுமையான ’சென்னையில் திருவையாறு’ என்னும் இசை விழா சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த விழாவை, இசைத்துறையில் உங்களுக்காகப் பணியாற்றி வரும் எமது “லஷ்மன் ஸ்ருதி இசையகம்” ( Lakshman Sruthi Musicals ) வருடந்தோறும் டிசம்பர் 18 முதல் 25 வரை சென்னை காமராஜர் அரங்கில் சிறப்பான முறையில்  நடத்தி வருகிறது.

இந்த ஆண்டு எமது இசைவிழாவிற்கு வயது பத்து. இவ்வினிய விழா வருகிற டிசம்பர் 18ஆம் தேதி பிற்பகல் 3.00 மணிக்கு திருவிழா ஜெய்சங்கர் அவர்களின் நாதஸ்வர இசை நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.

சென்னையில் திருவையாறு – ஒரு சிறிய அறிமுகம்
‘சென்னையில் திருவையாறு’ என்கிற பெயர் தற்போது உலகெங்கும் உள்ள
தமிழர்கள் மற்றும் தென்னிந்திய பாரம்பரிய இசை சார்ந்தோர் அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. இந்த இசைவிழா ஏன் இப்பெயரில் நடத்தப்பட்டு வருகின்றது, எப்படி வடிவமைக்கப்பட்டது என்பதற்கான ஒரு சிறு விளக்கம்தான் இந்த அறிமுகம்.

லஷ்மன் ஸ்ருதி இசையகம் ( Lakshman Sruthi Musicals ) சார்பாக கடந்த 2005 ம் ஆண்டு ஒரு கர்நாடக சங்கீத விழாவை நடத்த ஆலோசனை செய்தபோது, தமிழகத்தில் நடைபெறும் இசைவிழாக்களிலிருந்து சற்றே வித்தியாசமாகவும், தனித்துவத்துடனும் நடத்த வேண்டும் என்று திட்டமிட்டோம். அந்த விழாவின் துவக்கமே புதிதாய், நமது கலாசாரத்துடன் ஒட்டியதாய், அனைவர் மனமும் இசையோடு ஒன்றி அமைதி மற்றும் ஆனந்தம் பெறுகின்ற வகையில் அமைய வேண்டும் என்று சிந்தித்தோம்.

திருவையாறு தியாகராஜரின் ஸ்தலத்தில் வருடந்தோறும் இசைக்கலைஞர்கள் ஒன்றுகூடி, அவர் இயற்றிய பஞ்சரத்ன கீர்த்தனைகளை தெய்வீக உணர்வோடு பாடுகிறார்கள். அந்த இனிய உணர்வுமிக்க இசை அலையை ஏன் சென்னைக்குக் கொண்டு வரக்கூடாது என்று எங்களுக்குள் விவாதித்தோம்.

அப்போது திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவைப் போலவே ஒரு விழாவை சென்னை மக்கள் கண்டுகளிக்கும்படி ஏன் உருவாக்கக் கூடாது என்று எண்ணினோம். இதன் விளைவாகவே ஶ்ரீ தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனைகளோடு இசை விழாவைத் துவங்குவதென்றும்,அந்த விழாவுக்கு ’சென்னையில்-திருவையாறு’ என்று பெயர் சூட்டுவதென்றும் முடிவு செய்தோம்.Chennaiyil Thiruvaiyaru Season 10 Press Meet Stills (20)

இப்போது மார்கழி மாதத்துக்கும் இசைக்குமான தொடர்பையும், ‘சென்னையில் திருவையாறு’ விழா எப்படி துவங்கப்படுகிறது என்பதையும் உங்கள் பார்வைக்கு……
சங்கீதம் என்பது இறைவனின் பேச்சு
சங்கீதம் என்பது சாமானியனுக்கும் சர்வேஸ்வரனுக்குமான நேரடித் தொடர்பு
சங்கீதம் என்பது கண்ணுக்குப் புலப்படாத கருணை ஊற்று
சங்கீதம்  என்பது  உடைந்த உள்ளத்திற்கு மருந்து
சங்கீதத்திற்குக் கட்டுப்படாதவரையும்,
தலைவணங்காதவரையும் காண்பது சாத்தியமே இல்லை.
இசை என்ற ஒன்று இல்லாமல் இவ்வுலகில் ஆலயமோ, திருச்சபையோ, பள்ளிவாசலோ, குருத்வாராவோ கிடையாது.

சுருங்கச் சொன்னால் கடவுளைக் காணவும் அடையவும்  இசை ஒன்றுதான் வழி. இசைக்கு திசையில்லை, தேசமில்லை, மொழியில்லை, மதமில்லை, சாதியில்லை, பேதமில்லை, நிறமில்லை. இசை மட்டுமே ஒருமை நிலையை உருவாக்ககூடியது.

எந்த ஒரு நிர்ப்பந்தமுமின்றி இயற்கையாய் எல்லோர் மனதையும் சென்றடைவது இசையே.

இயற்கை என்பது நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவை.இந்த  ஐம்பெரும்  சக்திகளையும் அடக்கி ஆளக்கூடிய வல்லமை படைத்தது இசை என்றால் அது  மிகையாகாது.உலகின் பொது மொழி என்பது மௌனமாகப் பேசப்படும் சைகை மொழி.அதையடுத்து  பொதுவான  மொழியென்றால் அது இசை ஒன்றே.

இயற்கை அமைப்புகளுக்கு இறைவன் ‘பருவம்’ என்ற குறிப்பிட்ட காலத்தை  உருவாக்கினான். அதன்படி சில பருவத்தில் மட்டுமே பூக்கும் மலர், பெய்யும் மழை, வீசும் காற்று, கொட்டும் பனி, விளையும் பயிர்கள் என படைத்துள்ளான். அதுபோல் இறைவன் இசைக்கென்றும் ஒரு பருவத்தைப் படைத்திருக்கின்றான்.அதுவே மார்கழி.மாதங்களில் சிறந்தது மார்கழி  என்பார்கள்.இந்த மாதத்தின் சிறப்புப் பற்றிச்  சொல்ல வேண்டுமென்றால்: –

ஆண்டாள் இயற்றிய திருப்பாவை பாடப்படும் மாதம்பகவத் கீதையில் “மாதங்களில் நான் மார்கழி” என்று கிருஷ்ண பரமாத்மாவே              குறிப்பிடும் மாதம்,தில்லையில் நடராஜர் நடனம் புரிந்த திருவாதிரைத் திருநாள் இடம்பெறும் மாதம்,திருவெம்பாவையை மாணிக்கவாசர் அருளிய மாதம்
மனுக்குலம் தழைக்க இப்பூவுலகில் மாமரிச்செல்வனாம் இயேசுபிரான்அவதரித்த மாதம்
ஹரி நாமசங்கீர்த்தனம் எனும் புனைப்பாடல்களைப் பலர் ஒன்றுகூடிப் பாடும் மாதம்
வாசலில் வண்ண வண்ணக் கோலங்களிடும் மாதம்கோவில் கோபுரங்களில் மணியோசைகள் தொடர்ந்திடும்  மாதம்ஆலயங்களில் அபிஷேக ஆராதனைகள் இடைவிடாது நடக்கும் மாதம்இப்படி எத்தனையோ சிறப்புகள் சேர்ந்ததுதான் மார்கழி.அப்படிப்பட்ட மார்கழி மாதமும், இயற்கையை அரவணைத்து வெற்றி கொள்ளும் இசையும் இணைவதே மார்கழி இசை விழா.அதுவே தியாகராஜர் ஆராதனை விழா.

“எந்தரோ மஹானுபாவுலு அந்தரீகி வந்தனமு” என்ற மிகப்பிரபலமான  தெலுங்கு பாடலுக்குச் சொந்தக்காரரும் இவரே. எத்தனையோ சங்கீத  கர்த்தாக்கள், சங்கீத லக்ஷண கிரந்த கர்த்தாக்கள், சாஸ்திரீய சம்பிரதாயப்படி சங்கீத உருப்படிகளை கர்நாடக சங்கீதத்தில் இயற்றியுள்ளார்கள்.இவர்களில் முதன்மையானவராக “ஸ்ரீ தியாகராஜர்” திகழ்கின்றார். இவர் இயற்றிய சங்கீத உருப்படிகளில் மிகச்சிறந்ததாகக் கருதப்படுவது  “பஞ்ச ரத்ன கீர்த்தனைகள்” ஆகும். கர்நாடக இசையில் கன ராகங்களாகக் கருதப்படும் நாட்டை, கவுளை, ஆரபீ, வராளி மற்றும் ஸ்ரீ ஆகிய ஐந்து  ராகங்களில் தியாகபிரும்மம் அவர்கள், தான் வணங்கிய ஸ்ரீராமபிரானைப்  போற்றி இயற்றிய ஐந்து பாடல்கள் உலகமெங்கும் இசைக்கலைஞர்களால்  இன்றும் பாடப்பட்டு  வருகிறது.

மேலும் வாத்தியக்கலைஞர்கள் தாங்கள் இசைக்கும் கருவிகளான ஹார்மோனியம், வீணை, தவில், கஞ்சிரா, மிருதங்கம், முகர்சிங், தபேலா,  வேய்ங்குழல் (புல்லாங்குழல்), ஸிதார், ஸாரங்கி, ஸரோட், ஜலதரங்கம்,  ஸந்த்தூர்,வயலின், மாண்டலின், ஸாக்ஸபோன், கீபோர்டு மற்றும் பல கருவிகளோடு இந்த ஐந்து கீர்த்தனைகளை இசைத்து வருகின்றனர். நாம் சற்று உற்றுநோக்கினால் தென்னிந்திய இசைக் கருவிகளால் இசைக்கப்பட்ட தியாகராஜரின் கனராக உருப்படிகள் இன்று வடஇந்திய மற்றும் மேற்கத்திய இசைக்கருவிகளாலும் இசைக்கப்பட்டு வருகின்றன. அதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாக்களில் கலந்துகொள்கிற அயல் நாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

இவரது பஞ்சரத்ன கீர்த்தனைகள் எப்படியெல்லாம் மதம், மொழி, நாடு, காலம் கடந்து  சிறப்புற்று விளங்குகிறது என்பதை அறியும் போது, எல்லோரும் குறிப்பாக ஒவ்வொரு இசைக்கலைஞனும் பெருமை கொள்கிறான். இப்படி பெருமை வாய்ந்த பஞ்சரத்ன கீர்த்தனைகளை இசைக்கும் வைபவம் ஒவ்வொரு ஆண்டும் தஞ்சைத்தரணியில் அமைந்திருக்கும் திருவையாறில்  ‘தியாகராஜர் ஆராதனை விழா’ என்ற பெயரில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.அறிந்தோரும் அறியாதோரும், கற்றோரும் கல்லாரும், கனிந்து உருகி களிப்பதுவே ‘தியாகராஜர் ஆராதனை விழா’ என்பது ஆச்சரியம் கலந்த உண்மை.எண் திசையிலிருந்தும் வந்து பண்பாடும் கலைஞர்களின் ‘பஞ்சரத்ன கீர்த்தனைகளை’ செவி மடுத்துக் கேட்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.  உலகெங்கிலும் உள்ள கர்நாடக இசை ஆர்வலர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் உள்ளவர்கள் கூட தியாகராஜரின் கீர்த்தனைகளினால் கவரப்பட்டு “தியாக ப்ரம்ஹ ஆராதனை” விழாவில் கலந்துகொண்டு வருகின்றனர்.

எல்லோரும் திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவில் கலந்து கொள்வது என்பது இயலாத ஒன்று. அப்படியொரு இசைவிழாவினை சென்னையில் உள்ளோரும் கண்டு, கேட்டு, களிக்கும் வகையில் எமது நிறுவனத்தின் சார்பாக ’சென்னையில்-திருவையாறு’ என்ற வடிவத்தில் பத்தாவது முறையாக இவ்வாண்டு அரங்கேற்றுகின்றோம்.

மும்மூர்த்திகளின் ஆசியுடன் தமிழ்த்திருநாட்டின் தலைநகரமாம் சென்னையில் வாழும் இசை உள்ளங்கள் மட்டுமல்லாமல்  மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய  எல்லைகள் கடந்து இசை வேட்கையோடு வருகை தரும்  ரசிகர்களுக்காக  தஞ்சை  மண்ணின் தனிப்பெரும் இசைப் பாரம்பரியத்தை நிலைநாட்டவரும்  நிகழ்வே “சென்னையில் திருவையாறு”.

பாரத தேசத்தின் பாரம்பரிய இசையைப் போற்றிக் காக்கும் வகையிலும்  எதிர்கால சந்ததியினருக்கும் களம் அமைத்துக்கொடுக்கும் வகையிலும் கரை புரண்டுவரும் ஒர் அற்புத சங்கமம்தான் “சென்னையில் திருவையாறு”.

கர்நாடக சங்கீத கலைஞர்களில் மூத்தவரும் பல்வேறு சிறப்புகளும் பெற்றவருமான மரியாதைக்குரிய “பத்மபூஷண்” பி.எஸ். நாராயணசாமி அவர்களின் தலைமையில் ஒரே மேடையில் 500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ’பஞ்சரத்ன கீர்த்தனைகளை’ ஒன்றாகச் சேர்ந்து பாடுகின்றனர்.பெரியவர், சிறியவர் என்ற வயது பேதமின்றி, புகழ் பெற்ற மற்றும் வளர்ந்து வரும் இளைய தலைமுறையினரும், ஆண், பெண் வித்தியாசமின்றி அனைத்துக் கர்நாடக சங்கீத இசைக் கலைஞர்களும் தங்கள் இசைக்கருவிகள் சகிதம் ஒன்றிணைந்து பாடி, தஞ்சை திருவையாறு ஆராதனை விழாவை நம் கண் முன்னே கொண்டுவர உள்ளார்கள்.இந்நிகழ்வில் பங்கேற்கும் கலைஞர்கள், பார்வையாளர்கள் உட்பட அனைவருக்கும் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பார்த்துப் பாடுவதற்காக, தியாகராஜரின் ஐந்து கீர்த்தனைகளும் அடங்கிய புத்தகம்,
விழா துவங்கும் முன் வழங்கப்படும்.

சரியாக மாலை 6.00 மணிக்கு முன்னாள் குடியரசுத்தலைவர் பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி முறைப்படி இசை விழாவைத் தொடங்கி வைக்கின்றார்.

இவ்வாண்டு விழாவில் நம் நாட்டின் தொன்மையான இசைக்கருவிகளில் ஒன்றான நாதஸ்வர இசைக்கருவியின் வாயிலாக இசைத்துறையில் பல்லாண்டுகளாக சேவை செய்து, இருபதாயிரம் நிகழ்ச்சிகளுக்கு மேல் இசைத்து, பல்வேறு சாதனைகளை செய்து நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் நாதஸ்வர இசை மேதை ‘திருவிழா ஜெய்சங்கர்’ அவர்களை அவரது வாழ்நாள் இசைச்சேவவையை பாராட்டும் முகமாக ‘இசை ஆழ்வார்’ என்ற பட்டமும் தங்கப்பதக்கமும் வழங்கி கெளரவம் செய்ய உள்ளோம். இப்பட்டத்தை மதிப்பிற்குரிய முன்னாள் குடியரசுத்தலைவர் பாரத ரத்னா டாக்டர் ‘ஏ.பி.ஜெ. அப்துல்கலாம்’ அவர்கள் அன்னாருக்கு வழங்கி சிறப்பிக்கின்றார்.

இரவு 7.30 மணிக்கு வயலின் கலைஞர்கள் கணேஷ், குமரேஷ் இருவரும் இணைந்து வழங்கும் வயலின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.தொடர்ந்து மறுநாள் 19ம் தேதி முதல் தினமும் ஏழு நிகழ்ச்சிகள் நடைபெறும். காலை 7.00 மணிக்குத் துவங்கி, இரவு 10.00 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

அட்டவணை :
நிகழ்ச்சி நிரல் 2014    
லஷ்மன் ஸ்ருதியின் சென்னையில் திருவையாறு – பருவம் 10     

18 – 25 காமராஜர் அரங்கம் டிசம்பர்
18.12.2014 வியாழக்கிழமை    

நேரம்    கலைஞர்கள்    பிரிவுகள்
மாலை 3.00 மணி    திருவிழா ஜெய்சங்கர்    நாதஸ்வரம்
மாலை 5.00 மணி    பி.எஸ்.நாராயணசாமி    பஞ்சரத்ன கீர்த்தனைகள்
மாலை 6.00 மணி    சென்னையில் திருவையாறு 10 வது ஆண்டு இசைவிழாவை முன்னாள் குடியரசுத்தலைவர் பாரத ரத்னா டாக்டர்.  ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி, துவக்கி வைக்கிறார்.
இரவு 7.30 மணி    கணேஷ் – குமரேஷ்    வயலின்

19.12.2014 வெள்ளிக்கிழமை

நேரம்    கலைஞர்கள்    பிரிவுகள்
காலை 7.00 மணி    உடையாளூர் கல்யாணராமன்    நாம சங்கீர்த்தனம்
காலை 9.00 மணி    நர்மதா    வயலின்
காலை10.30 மணி     ஷோபனா ரமேஷ்    பரதநாட்டியம்
மதியம் 1.00 மணி    சங்கரி கிருஷ்ணன்    வாய்பாட்டு
மதியம் 2.45 மணி    கர்நாட்டிகா சகோதரர்கள் &  துஷ்யந்த் ஸ்ரீதர்    சங்கீத உபன்யாசம் – (சீனிவாச கல்யாணம்)
மாலை 4.45 மணி    ப்ரியா சகோதரிகள்    வாய்பாட்டு
இரவு 7.30 மணி    ராஜேஷ் வைத்யா    வீணை

20.12.2014 சனிக்கிழமை 

நேரம்    கலைஞர்கள்    பிரிவுகள்
காலை 7.00 மணி    செங்கோட்டை ஹரி    நாம சங்கீர்த்தனம்
காலை 9.00 மணி    சுபத்ரா மாரிமுத்து    பரதநாட்டியம்
காலை 10.30 மணி    திருச்சூர் சகோதரர்கள்    வாய்பாட்டு
மதியம் 1.00 மணி    ஜெயஸ்ரீ ஜெயராமகிருஷ்ணன்    வாய்பாட்டு
மதியம் 2.45 மணி    ஷோபனா விக்னேஷ்    வாய்பாட்டு
மாலை 4.45 மணி    பி.உன்னிகிருஷ்ணன்    வாய்பாட்டு
இரவு 7.30 மணி    சுதா ரகுநாதன்    வாய்பாட்டு

21.12.2014 ஞாயிற்றுக்கிழமை  

நேரம்    கலைஞர்கள்    பிரிவுகள்
காலை 7.00 மணி    சுசித்ரா    ஹரிகதா
காலை 9.00 மணி    ஷியாமளி வெங்கட்    புல்லாங்குழல்
காலை 10.30 மணி    கிருஷ்ணகுமாரி நரேந்திரன்    பரதநாட்டியம்
மதியம் 1.00 மணி    மீனாட்சி ராகவன்    பரதநாட்டியம்
மதியம் 2.45 மணி    ஸ்ரீமதுமிதா    வாய்பாட்டு
மாலை 4.45 மணி    ரஞ்ஜனி காயத்ரி    வாய்பாட்டு
இரவு 7.30 மணி     சின்மயி ஸ்ரீபதா    வாய்பாட்டு

22.12.2014 திங்கட்கிழமை 
நேரம்    கலைஞர்கள்    பிரிவுகள்
காலை 7.00 மணி    தாமல் ராமகிருஷ்ணன்    பக்தி பிரசங்கம்
காலை 9.00 மணி    எஸ்.ஐஸ்வர்யா    வாய்பாட்டு
காலை 10.30 மணி    வலையப்பட்டி எஸ்.மலர்வண்ணன்    தவில்
மதியம் 1.00 மணி    அபினவ் & பத்மாஸனி ஸ்ரீதரன்    வாய்பாட்டு
மதியம் 2.45 மணி    ராமகிருஷ்ண மூர்த்தி    வாய்பாட்டு
மாலை 4.45 மணி    மஹதி    வாய்பாட்டு
இரவு 7.30 மணி    நித்யஸ்ரீ மகாதேவன்    வாய்பாட்டு

23.12.2014 செவ்வாய்க்கிழமை  

நேரம்    கலைஞர்கள்    பிரிவுகள்
காலை 7.00 மணி    சட்டநாத பாகவதர்    நாம சங்கீர்த்தனம்
காலை 9.00 மணி    பி.எச்.ரமணி    வாய்பாட்டு
காலை 10.30 மணி    சாஸ்வதி பிரபு    வாய்பாட்டு
மதியம் 1.00 மணி    ஷ்ரவன்    வாய்பாட்டு
மதியம் 2.45 மணி    பத்மா சங்கர்    வயலின்
மாலை 4.45 மணி    ஜெயந்தி குமரேஷ் & அணில் சீனிவாசன்    வீணை & பியானோ
இரவு 7.30 மணி    ஷோபனா    பரதநாட்டியம்

24.12.2014 புதன்கிழமை

நேரம்    கலைஞர்கள்    பிரிவுகள்
காலை 7.00 மணி    மங்கையர்க்கரசி    பக்தி பிரசங்கம்
காலை 9.00 மணி    சரண்யா ஸ்ரீராம்    வாய்பாட்டு
காலை 10.30 மணி    ஸ்ரீகலா பரத்    பரதநாட்டியம்
மதியம் 1.00 மணி    விதிஷா    பரதநாட்டியம்
மதியம் 2.45 மணி    ஹரிசரண்    வாய்பாட்டு
மாலை 4.45 மணி    எஸ்.செளம்யா    வாய்பாட்டு
இரவு 7.30 மணி    கத்ரி கோபால்நாத்    சாக்ஸஃபோன்

25.12.2014 வியாழக்கிழமை  

நேரம்    கலைஞர்கள்    பிரிவுகள்
காலை 7.00 மணி    சிந்துஜா    ஹரிகதா
காலை 9.00 மணி    ராகினிஸ்ரீ    வாய்பாட்டு
காலை 10.30 மணி    ஊர்மிளா சத்யநாராயணன்    பரதநாட்டியம்
மதியம் 1.00 மணி    டாக்டர்.கணேஷ்    வாய்பாட்டு
மதியம் 2.45 மணி    ஷோபா சந்திரசேகர்    வாய்பாட்டு
மாலை 4.45 மணி    அருணா சாய்ராம்    வாய்பாட்டு
இரவு 7.30 மணி    கார்த்திக்    வாய்பாட்டு

கர்நாடக மற்றும் ஹிந்துஸ்தானி இசையுலகின் மூத்த இசைக்கலைஞர்களும், வளர்ந்து வரும் திறமையாளர்களும், நாட்டியக் கலைஞர்களும் சேர்ந்து மொத்தம் ஐம்பத்து இரண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள். மேலே உள்ள பட்டியலில் காணப்படும் ஒவ்வொரு கலைஞரும் ஒவ்வொரு விதமான வகையில் இவ்விழாவிற்காக மிக நுணுக்கமான வகையில் பயிற்சியும் முயற்சியும் செய்து ரசிகர்களை ஈர்க்கும் வகையில் நிகழ்ச்சிகளை வழங்க உள்ளனர்.

காமராஜர் அரங்கத்தில் திருவையாறு தியாகராஜர் ஆராதனை மண்டபத்தை நம் கண்முன்னே கொண்டுவரும் வகையில் பிரமாண்டமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மேடை, பாடுவோர்க்கும், இசைப்போர்க்கும், நடனமாடுவோர்க்கும், நிகழ்ச்சியைக் காண்போர்க்கும் சந்தோஷமளிக்கும் வகையில் இருக்கும்.

ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கலை உலகின் மூத்த கலைஞர் ஒருவர் கலந்துகொண்டு இசைக்கலைஞர்களையும், பாடகர்களையும், நடனமணிகளையும் கௌரவிப்பார்கள்.

அரங்கத்தின் எல்லா இடங்களிலும் சீராகக் கேட்கும் படியான செவிக்கினிய ஒலி அமைப்பும், கண்கவர் ஒளி அமைப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அரங்கின் எல்லா பகுதிகளிலிருந்தும் இசைக்கருவிகளையும் பாடகர்களையும் நடனக்கலைஞர்களையும் அவர்களது திறமைகளை துல்லியமாகக் காணும் வகையில் மேடையின் இருபுறமும் அகன்ற திரைகள் அமைக்கப்படுகின்றன.

ரசிகர்களுக்குக் குவியும் பரிசுகள்:
அரங்கிற்குள் வருகின்ற ரசிகர்கள் நுழைவு வாயிலில் அறிவிப்புப் பலகையில் எழுதி வைக்கப்பட்டிருக்கும் அறிவுத்திறன் கேள்விக்கான பதிலை தங்கள் நுழைவுச் சீட்டில் குறிக்கப்பட்டிருக்கும் பகுதியில் எழுதி, அரங்கில் பணியாளர்கள் கொண்டு வரும் பெட்டிகளில் சேர்க்க வேண்டும்.

மேடை நிகழ்ச்சியில் பங்கேற்கும் கலைஞரின் கரங்களால் நிகழ்ச்சியைக் காணும் ரசிகர்களில் ஐந்து பேரை குலுக்கல் மூலமாக தேர்ந்தெடுத்து சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும். அதுவும் குறிப்பிட்ட அந்தக் கலைஞரே ரசிகர்களுக்குப் பரிசுகள் வழங்குவது சிறப்பம்சமாகும். சக்தி மசாலா, செளபாக்யா, நாயுடு ஹால், ஸ்டர்லிங் ஹாலிடே ரிசார்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பாக இந்தப் பரிசுகள் வழங்கப்படும்.

கோ ப்ரசென்டட் ஸ்பான்சர் செய்யும் சத்யா நிறுவனம் நிகழ்ச்சியைக் காண வரும் ஒவ்வொரு ரசிகருக்கும் 500 ரூபாய் மதிப்பிலான பரிசுக் கூப்பன் வழங்க உள்ளது.

ரசிகர்களை அதிசயிக்க வைக்கும் பம்பர் மற்றும் மெகா பரிசுகள்:
நிகழ்ச்சியின் நிறைவு நாளன்று, எட்டு நாட்களிலும் கலந்து கொண்ட அனைத்து ரசிகர்களிலிருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்கா செல்வதற்கான இரண்டு விமான டிக்கெட்டுகள் கும்பகோணம் அரசு ஜுவல்ஸ் நிறுவனத்தின் சார்பாக பம்பர் பரிசாக வழங்கப்படும். மற்றொரு ரசிகருக்கு 2400 சதுர அடி மனை மெட்ராஸ் சிட்டி ப்ராபர்ட்டீஸ் நிறுவனத்தின் சார்பாக மெகா பரிசாக வழங்கப்பட உள்ளது.

’சென்னையில் திருவையாறு’ நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒளிப்பதிவு செய்யப்பட்டு, கடந்த நான்கு வருடங்களாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது. லட்சக்கணக்கான இசை ரசிகர்கள் கண்டுகளிக்கும் இத்தொடர் இசை நிகழ்ச்சிகள் இவ்வாண்டும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்புச் செய்யப்பட உள்ளது.

நுழைவுச்சீட்டுகள் கண்கவர் விதமாகவும், கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையிலும் புதுமையாகவும் பல வண்ணங்களில் அச்சிடப்பட்டுள்ளது.

அனைத்து நிகழ்ச்சிகளையும் காண்பதற்கென தொடர் அனுமதிச்சீட்டும் (Season Ticket) தனித்தனியாக தேர்ந்தெடுத்து நிகழ்ச்சிகளைக்  காண்பதற்கான தனியாக ஒரு அனுமதிச்சீட்டும் (Individual Show Ticket) ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மொத்தமாக நுழைவுச் சீட்டுகள்  (BulkBooking) வாங்குவோருக்கும், பொது  சேவை நிறுவனங்கள், கலை மன்றங்கள், கல்வி அமைப்புகள் மற்றும் பொழுது போக்கு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கும் கட்டணத்தில் சலுகை அளிக்கப்படும்.

ரசிகர்களின் வசதிக்காக அனுமதி சீட்டுகள் காமராஜர் அரங்கம் – தேனாம்பேட்டை / லஷ்மன் ஸ்ருதி மியூசிகல்ஸ் – வடபழநி / எம் 6 ஈவண்ட்ஸ் – சி.ஐ.டி நகர், நந்தி சிலை அருகில் / நாயுடு ஹால் – அண்ணா நகர், தி நகர், புரசைவாக்கம் / சத்யா – மேற்கு மாம்பலம், திருவான்மியூர் ஆகிய இடங்களில் விற்பனை செய்யப்பட உள்ளது

இணையதளம் மூலமாக (Online Ticket Booking) டிக்கெட் முன்பதிவு செய்யவும் கீழ்க்கண்ட இணையதளங்கள் மூலம் டிக்கெட்டுகளைப் பெறவும் வசதி செய்யப்பட்டுள்ள்து
www.lakshmansruthi.com <http://www.lakshmansruthi.com>, www.vikatan.com <http://www.vikatan.com/>, www.ticketnew.com <http://www.ticketnew.com/>, www.madrasevents.in <http://www.madrasevents.in/>

‘சென்னையில் திருவையாறு’  பற்றிய நிகழ்ச்சிகள் பற்றி விவரங்கள் அறியவும், டிக்கெட்டுகள் வாங்கவும் ஆண்ட்ராட்ய்ட் ஆப்ஸ் மூலமாக பெறும் வசதியை ஏற்படுத்தியுள்ளோம். CT APPS என்ற இந்த ஆண்ட்ராய்ட் ஆப்ஸ் வசதியை டிக்கெட்நியூ.காம் இசை ரசிகர்களுக்காக பிரத்யேகமாக வழங்குகிறது.

மேலும் டிக்கெட் விவரங்களை தொலைபேசி மூலம் தெரிந்து கொள்ள:
044-44412345, 9941922322, 9841907711, 88070 44521

ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு காமராஜர் அரங்கத்தை ஒட்டியிருக்கும் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட காங்கிரஸ் மைதானத்தில் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாள்தோறும் பல ஆயிரம் பேர் கூடுவதால், அரங்கின் வெளி மண்டபத்தில் பல்வேறு விதமான விற்பனையரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் இசைத்துறை பற்றிய கண்காட்சிகள், இசைக்கருவிகள், கலைப் பொருட்கள், பரிசுப் பொருட்கள், அழகு சாதனங்கள், ஆடை அணிகலன்கள், உணவுத் தயாரிப்பு தொடர்பான புத்தகங்கள், டி.வி.டி க்கள், சி.டி க்கள், ஆன்மிக புத்தகங்கள், பூஜை பொருட்கள், இசைக்கருவிகள் குறித்த புத்தகங்கள் கொண்ட அரங்குகளும் இடம் பெறுகின்றன. மேலும் பதிப்பகங்கள், வங்கிகளின் வாடிக்கையாளர் மையங்கள், ஆயுள் காப்பீட்டு நிறுவன மையங்கள், சமூக சேவை மையங்கள், வீடுமனை விற்பனையாளர்கள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களின் அரங்குகளும் அமைக்கப்படுகின்றன.

உணவுத்திருவிழா: 2014

‘சென்னையில் திருவையாறு’ இசை விழாவுடன் உணவுத்திருவிழா எப்படி இணைந்தது

’செவிக்கு உணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்’ என்பர்.’சென்னையில் திருவையாறு’  இசை விழாவில், ரசிகர்களின் செவிகளைத் திகட்டத் திகட்ட நிரப்பும் தேனினும் இனிய இசை விருந்துக்குப் பஞ்சமில்லை.
ஆனால் காலை 7.00 மணிக்குத் துவங்கி இரவு 10.00 மணி வரை நடைபெறும் இடைவிடா இசைவிழாவின் இடையே தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஒரு காபி குடிக்க வேண்டும் என்றால் கூட காமராஜர் அரங்கில் இருந்து வெளியேறி, சாலையைக் கடந்து சிறிது தூரம் நடந்து, கடையைத் தேட வேண்டியிருக்கும். தரமான உணவகம் கண்டுபிடித்து சாப்பிட்டுத் திரும்புவதற்குள், போதும் போதுமென்றாகிவிடும்.

அதேபோல் வழக்கமாக இசைவிழா நடக்கின்ற அரங்கங்களில் ஒரு குறிப்பிட்ட உணவகம் மட்டுமே இடம்பெறும். அதில் என்ன கிடைக்கின்றதோ அதை மட்டுமே சாப்பிட வேண்டும். தொடர்ந்து பல நாட்களுக்கு நடைபெறும் இதுபோன்ற இசை விழாக்களில் தினமும் ஒரே உணவகத்தின் உணவு வகைகளை வேறு வழியின்றி ரசிகர்கள் சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற நிலை உள்ளது. ரசிகர்களின் செவிக்கு பல்வேறு இசை வடிவங்கள் கேட்கக் கிடைப்பது போல், வயிற்றுக்கும் பல்வேறு உணவு வகைகள் கிடைத்தால் ஏராளமான ரசிகர்கள் விழாவுக்கு வருவார்கள் என்ற நோக்கத்தில் உணவுத்திருவிழாவினை வடிவமைத்தோம்.

மற்றும் குறிப்பாக, வெளிநாட்டு ரசிகர்களிடையே இந்த உணவுத்திருவிழா மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. திரைகடலோடியும் திரவியம் தேடும் அந்த அன்பர்கள், அந்தத் தேடலில் தொலைக்க நேரிடும் விஷயங்கள் ஏராளம். அன்னையின் அரவணைப்பு, தந்தையின் அன்பு, சகோதர பாசம், நண்பர்களின் நேசம், மண்வாசம்… என்று அவர்களின் ஏக்கப் பட்டியல் நீண்டு கொண்டே போகும். இதில் முக்கியமானது நம் பாரம்பரிய உணவு.

ஒரு சில நாட்கள் தமிழகம் தாண்டி சுற்றிவிட்டு வந்தாலே, நாக்கு வெறுத்து… வெறும் ரசம் சாதம் கிடைத்தால் கூட போதும், தேவாம்ருதமாக இருக்கும் என்ற நினைப்பு வருவதை யாரும் மறுக்க முடியாது. அப்படி இருக்கும்போது ஆண்டுக் கணக்கில் அயல்நாட்டில் வசித்து பீட்ஸா, பர்கர், கோக்… என்று சாப்பிட்டு சலித்துப் போனவர்கள், சொந்த ஊருக்கு வரும்போது தங்களுக்குப் பிடித்தமான உணவு வகைகளை ஒரு பிடி பிடிக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறேதும் இல்லை.

டிசம்பர் சீசனில் சென்னை வரும் அந்த நண்பர்கள், தங்கள் குடும்பத்தினரோடு இசை நிகழ்ச்சிகளை ரசித்துவிட்டு, இடையில் நல்ல உணவுக்காக அலைய நேர்ந்தால் அது நமக்குதானே இழுக்கு! நமது அன்புக்குரிய ரசிகர்கள் இப்படி அவஸ்தைப்படக் கூடாது என்பதற்காகவும் ‘சென்னையில் திருவையாறு’ இசைவிழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று பல வெளிநாட்டு வாழ் நண்பர்கள் கூறுவதாலும்,உணவுத்திருவிழாவினை திட்டமிட்டு அறிமுகப்படுத்தினோம்.

இருபதாயிரம் சதுர அடியில் அமைக்கப்படும் பிரமாண்டமான அரங்கத்திற்குள் தமிழகத்தின் முன்னணி உணவகங்களின் நாற்பதுக்கும் மேற்பட்ட உணவு
அரங்கங்களும், 300 பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய வகையிலான வசதிகளும் செய்யப்படுகின்றன.

பசியாற்றும் உணவகங்கள் மட்டுமே என்றில்லாமல், உணவுத்திருவிழாவின் ஒரு பகுதியில் தனி மேடை அமைக்கப்பட்டு, தமிழகத்தின் தலைசிறந்த சமையல்கலை வல்லுநர்களின் அனுபவங்கள், பிரபல சமையல் கலைஞர்கள் மற்றும் உணவுக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் செயல் விளக்க நிகழ்ச்சிகள், பார்வையாளர்களும் பங்கேற்று தங்கள் சமையல் திறமையை வெளிப்படுத்தும் வகையில் சமையல் கலைப்போட்டிகள்,
ஒவ்வொரு போட்டியிலும் பார்வையாளர்களுக்குக் கிடைக்கும் பரிசுகள், உடல் ஆரோக்கியம் மற்றும் உணவுக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு சொற்பொழிவுகள்,நாள் முழுக்க நடக்கும் உணவுத் திருவிழாவின் இடையே மேடைக்கும் உணவரங்கங்களுக்கும் வந்து செல்லும் இசையுலக ஜாம்பவான்கள்,திரைப்பட நட்சத்திரங்கள், சின்னத்திரை பிரபலங்கள்,சமூகத்தின் பல்வேறு நிலைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்கள், ஆகியோர் அனைவரையும் அருகில் கண்டு பேசி மகிழும் வாய்ப்பு, சிறுவர்களுக்குண்டான பொழுது போக்கு அம்சங்கள் மற்றும் விளையாடுவதற்கான வசதிகள், குழந்தைகளோடு வரும் ரசிகர்களையும் திருப்திப்படுத்த
சிறுவர்களைக் கவரும் உணவு வகைகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் பனிக்கட்டிகளில் வித்தியாசமான கலைப்படைப்புகளையும், சிற்பங்களையும் செதுக்கும் அரங்குகள்,
நிபுணர்கள் வழங்கும் சமையல் குறிப்புகள் என்று பல வித்தியாசமான ஏற்பாடுகள் இந்த உணவுத் திருவிழாவின் சிறப்பம்சங்களாக அணிவகுக்கின்றன

இந்த வகையில் பிரபல உணவகங்கள் தங்கள் சமையல் கலைஞர்களின் கைவண்ணத்தில் தரமான உணவு வகைகளை, ஒரே இடத்தில் நீங்கள் விரும்பும் வகையில் வழங்குகின்ற பாங்கு இசைப்பிரியர்களை ஈர்த்து திக்கு முக்காட வைக்க இருக்கிறது. தானிய வகை உணவுகளும், காய்கறி உணவுகளும், கீரை மற்றும் பழவகை உணவுகளும் இங்கே மணக்க இருக்கின்றன.இவ்வாறாக பல்வேறு சிறப்பம்சங்களோடு உணவுத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ரசிகர்களுக்கு விருந்து படைத்து,நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றது.

அதேபோல் உணவுத்திருவிழாவினை மட்டுமே காண வருவோர் காமராஜர் அரங்கத்திற்கு உள்ளே என்ன நடக்கின்றதென்று எட்டிப் பார்க்கின்ற வேளையில், சங்கீதத்தில் நீந்துகின்ற வாய்ப்பு ஏற்படும். கர்நாடக இசையில் ஆர்வமில்லாதோரும் சற்று நேரம் அதைக் கேட்கும் தருணத்தில் தங்களை மறந்து அதில் லயிக்க ஆரம்பிப்பர். அதுதான் நம் மண்ணின் இசைக்கான மகத்துவம். இசைவிழாவிற்கு புதுப்புது ரசிகர்கள் வரத்துவங்குவர். இதன் மூலம் நமது பாரம்பரிய இசை பல திசைகளுக்கும் பரவும் வாய்ப்பு உண்டாகும்.கடந்த வருடங்களில் இப்படி வருகை தந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இசை விழாவிற்கு தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் வர ஆரம்பித்துவிட்டார்கள்.

முதியவர்களுக்கு முதல் மரியாதை:

இந்த இசை விழாவில் கடந்த ஆண்டு முதல், முதியவர்களுக்கு  மரியாதை செய்யப்படுவது சிறப்பம்சம். சென்னை மற்றும் புறநகர்களில் உள்ள முதியோர் இல்லங்களில் இருந்து தினந்தோறும் 500 பேர் தனி பேருந்துகளில் அழைத்து வரப்படுகிறார்கள். அவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டு, காலை 7.00 மணிக்கு நடைபெறும் நாம சங்கீர்த்தனம், உபன்யாசம், பக்தி பிரசங்கம் போன்ற நிகழ்ச்சிகளை இலவசமாகக் கண்டு களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதியவர்கள் நிகழ்ச்சிகளைப் பார்த்துவிட்டு திரும்புகின்ற பொழுது அவர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் காபி வழங்குவதுடன் அத்தியாவசியப் பொருட்கள், ஆன்மிக புத்தகங்களின் குறிப்பேடுகள், முதலுதவி உபகரணங்கள், சோப்பு, சீப்பு, கண்ணாடி, கைத்துண்டு, குளிருக்கான ஆடைகள், பேனா, தொலைபேசிக் குறிப்புப் புத்தகங்கள் ஆகியன அடங்கிய விசேஷ கைப்பை ஒன்றும் வழங்கப்படுகிறது.

நமது கர்நாடக இசையின்  பாரம்பரியம் பாதுகாக்கப்பட்டு, உலகின் எந்தவொரு இசைக்கும் நமதுமண்ணின்  சங்கீதம் குறைந்ததில்லை என்பதை பறைசாற்றும் வகையில் பத்திரிகையாளர்களாகிய உங்களின் பேராதவை இவ்விழாவிற்கு நல்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் இந்நிகழ்ச்சி பற்றிய விவரங்களுக்கு கீழ்க்கண்ட இணைய பக்கங்களுக்கு விஜயம் செய்யுங்கள்
www.chennaiyilthiruvaiyaru.comu <http://www.chennaiyilthiruvaiyaru.comu> <http://www.lakshmansruthi.com/Food-Festival/index.asp> and<https://www.facebook.com/LakshmanSruthi>
தொடர்புகள் மற்றும் ஆலோசனைகளுக்கு ct@lakshmansruthi.com <mailto:ct@lakshmansruthi.com>  
தொலைபேசியில் தொடர்பு கொள்ள: 044-44412345, 9941922322, 9841907711,  88070 44521

லஷ்மன் ஸ்ருதி நிறுவனம் – ஒரு சிறு குறிப்பு :
’லஷ்மன் ஸ்ருதி’ இசைக்குழு எனும் இந்த நிறுவனத்தை 1987 ம் ஆண்டு முதல் இருபத்தெட்டு வருடங்களாக நடத்தி வருகின்றோம்.
எங்கள் இசைக்குழு 8000 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை உலகெங்கும் நடத்தியிருக்கிறது.
1994 ம் ஆண்டு 36 மணி நேரம் தொடர்ந்து இசை நிகழ்ச்சி என்ற உலக சாதனை இசை நிகழ்ச்சியை நடத்தினோம். தமிழர்கள் அதிகமாய் வசிக்கும் 25 நாடுகளுக்கு மேல் சென்று இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளோம்.

லஷ்மன்ஸ்ருதி மியூசிகல்ஸ்:
எமது குழுவின் சார்பாக 2003 ம் ஆண்டு இசைக்கருவிகள் விற்பனை செய்வதற்காக லஷ்மன் ஸ்ருதி மியூசிகல்ஸ் என்ற பெயரில் புதிய பாதையில் தடம் பதித்தது.
இந்த இசை வளாகத்தில் இசைக்கருவிகள், ஒலி நாடாக்கள், ஆடியோ வீடியோ  கேசட்டுகள், சி.டி.க்கள், டி.வி.டி.க்கள், இசை  சம்பந்தமான புத்தகங்கள், நாட்டிய சம்பந்தமான புத்தகங்கள் மற்றும் இசைக்கலையுடன் உருவாக்கப்பட்டுள்ள  பரிசுப்பொருட்கள் ஆகியவை விற்பனை செய்யபட்டு வருகின்றன.

எங்கள் இசை வளாகத்தில்
·    இசை ஒத்திகை அரங்கம் (Rehearsal Hall)
·    இசைப்பள்ளி (Music School)
·    இசைக்கருவிகள் பழுது பார்க்கும் மையம் (Musical instruments service)
·    இசைக் குழுக்களின் தேவைக்காகவும்,
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காகவும்,
இசை நடனம் மற்றும் பல்வேறு துறை ஆராய்ச்சியாளர்களுக்காகவும், திரைப்படத் துறையினரின் ஒலிப்பதிவு மற்றும் படப்பிடிப்புக்காகவும் இசைக்கருவிகளை வாடகைக்கு வழங்கும் பிரிவு (Rental Division)
·    லஷ்மன்ஸ்ருதி இணையதளம் (இசை ரசிகர்களுக்கான தகவல்களை வாரி வழங்கும்லஷ்மன் ஸ்ருதி இணையதளம்) (www.lakshmansruthi.com)
ஆகியவை இயங்கி வருகின்றன.