செய்தித்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 12ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவை துவக்கி வைக்கிறார்

CIFF2014எதிர்பார்ப்புக்குரிய  12ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா நாளை (18 டிசம்பர், 2014) மாலை 6 மணிக்கு உட்லாண்ட்ஸ் திரையரங்கில் கோலாகலமாக துவங்கவுள்ளது.

இவ்விழாவை மாண்புமிகு செய்திப்துறை அமைச்சர்   திரு.ராஜேந்திர பாலாஜி துவக்கி வைக்கிறார்.

திரு. இராஜா ராம் IAS, இயக்குநர் திரு. மகேந்திரன், திரு. சரத்குமார், திரு. ராஜ்குமார், திரு. வருண் மணியன், திரு. கண்ணன் (ICAF), திரு. ஹெல்மேட் சிப்பர்ட் (Director, Max Mueller Bhavan), திரு. B. சசிகுமார் (President, Film Chamber) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள, திரைத்துறையை சேர்ந்த தயாரிப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்கவுள்ளனர்.

டிசம்பர் 18 முதல் டிசம்பர் 25 வரை நடக்கும் 12ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில், உலகமெங்கும் வெகுவாக விமர்சிக்கப்பட்ட பல மொழி திரைப்படங்கள் உட்லாண்ட்ஸ், உட்லாண்ட்ஸ் சிம்போனி, கேசினோ, ஐனாக்ஸ், ரஷ்யன் சென்டர் ஆப் சயின்ஸ் அண்ட் கல்ட்சர் ஆகிய இடங்களில் திரையிடப்படவுள்ளன.