சைக்கோ த்ரில்லராக உருவாகியுள்ள ‘பிரகாமியம்’

pirakamiyam1மாறுபட்ட கதைக் களத்தை கொண்டு சைகோ த்ரில்லராக உருவாகி உள்ள பிரகாமியம் !!
 
இது ஒரு சைகோலாஜிகல் காதல் , ஆக்ஷன் கலந்த செண்டிமெண்டல் த்ரில்லர் .இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் உள்ளனர் .ஆனால் பாடல்களும் காதல் காட்சிகளும் இல்லாத ஒரு ஆழ்மன உலகத்தில் நிகழும் காதல் கதையை ச்சொல்வது. இது அம்மா செண்டிமெண்ட்  உள்ள படம் ஆனால் எந்த வித தாயை ஆதரிக்கும் கவிதையோ பாடல்களோ இல்லாமல் உளவியல் ரீதியில் தாய்ப் பாசத்தை வெளிபடுத்தும் ஒரு படம். தந்தை மகனிடையே நிகழும் சம்பவங்கள் உலக அரசாங்கங்களுக்கும் மக்களுக்கும் நிகழும் சம்பவங்களாக சம்பந்தப்படுத்தி கருத்து  சொல்லும் படம். மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு நபரின் ஆழ்மன உலகத்தை படம் எடுத்து காட்டும் படம் பிரகாமியம்.
இது ஒரு கலை  படம்  + ஆவணப் படம்  + கமர்ஷியல் படம் , அப்படியாக மூன்று வகையான கதை சொல்லும் யுக்திகளின் கலவையாக உருவாகியுள்ள இப்படம்  Art – doccial  படமாக உருவாகி உள்ளது .  இதில் ரோப் காட்சிகள் , கார் சேஸ்  போன்ற ஆக்சன்  காட்சிகள்  இல்லை.எந்தவித கவர்ச்சியோ, இரட்டை அர்த்தம் வசனங்களோ இல்லாத படம் இது. ஆனால் படத்திற்கு சென்சாரில் “A” சான்றிதழ் கொடுத்ததற்கான காரணமாக இயக்குநருக்கு சொல்லப்பட்டது என்னவென்றால் “இப்படம் அதிக தாக்கத்தை உளவியல் ரீதியாக திரைக்கதை மூலம் மக்கள் மனதில் ஏற்படுத்தும் ” என்பது தான். வருகிற ஜனவரி 20ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தை பிரதாப் இயக்கி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.