ஞானவேல் ராஜாவின்இருட்டு அறையில் முரட்டு குத்து !

கௌதம் கார்த்திக் , நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் “ ஹர ஹர மகாதேவகி “  
இத்திரைப்படத்தை சந்தோஷ்  ஜெயகுமார் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்துக்கு இசை பாலமுரளி பாலு , ஒளிப்பதிவு செல்வ குமார்.
 
இதன்ப ட விழாவில் கௌதம் கார்த்திக் பேசியது :-
 
எல்லோரும் படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்களை பார்த்து ரசித்திருப்பீர்கள். இந்த கதை பலருக்கு சென்று மீண்டும் என்னை தேடி வந்துள்ளது. இயக்குநர் சந்தோஷ் என்னிடம் கதை சொல்ல வந்தபோது முதலில் எனக்கு இப்படத்தின் பாடல்களை தான் போட்டு காண்பித்தார். பாடல்களை நான் நான் மிகவும் ரசித்து , சிரித்து கேட்டேன். பாடல்களை கேட்டதும் இந்த கதையில் நிச்சயம் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன். அதன் பிறகு இயக்குநர் என்னிடம் ஹரஹர மகாதேவகியின் கதையை கூறினார்.
 
எனக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. இந்த படத்தில் ஒவ்வொரு நாளும் நான் சந்தோஷமாக என்ஜாய் செய்து நடித்தேன். அனைவரும் கடினமாக உழைத்தோம். ஆனால் செட்டில் எல்லோரும் சிரித்துக்கொண்டே வேலைசெய்தது அருமையாக இருந்தது. என்னுடைய கடினமான காலகட்டத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அவர்கள் என்னை அழைத்து இந்த படத்தை கொடுத்து உற்சாகத்தை , நம்பிக்கையும் தந்தார். இப்படம் தமிழ் சினிமாவுக்கு புதுமையான படமாக இருக்கும். நான் ஹரஹர மகாதேவகி டீமோடு மீண்டும் ஒரு படத்துக்காக இணைகிறேன். படத்தின் டைட்டிலை இயக்குநரே அறிவிப்பார். நான் இன்று காலை என்னுடைய ரசிகர்களை சந்தித்தேன் என்னை மகிழ்விக்கும் வகையில் 25கிலோ கேக்கோடு வந்து என்னுடைய பிறந்த நாளை இரண்டு நாட்களுக்கு முன்பாக இன்றே கொண்டாடினார்கள். என்னுடைய ரசிகர்கள் எல்லோரும் தான் என் குடும்பம் ”என்றார் கௌதம் கார்த்திக்.
 
விழாவில் நிக்கிகல்ராணி பேசியது :- டார்லிங் படத்தின் மூலம் என்னை  அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அவர்கள் இந்த படத்தின் கதையை கேட்கும்படி கூறினார்.இயக்குநர் சந்தோஷ் என்னுடைய வீட்டுக்கு வந்து கதை சொன்னார். கதையை கேட்டு சிரித்து வயிறு வலியே வந்துவிட்டது. சந்தோஷ் என்னிடம் கதை சொன்ன போது என்னுடைய போர்ஷனில் வரும் விஷயங்களை மட்டும் தான் கூறினார். இப்போது இங்கே வந்த பிறகு தான் கதை , திரைக்கதை , வசனம் என்று அனைத்தும் எனக்கு கொஞ்ச கொஞ்சமாக தெரிகிறது. அனைத்து நன்றாக உள்ளது. கௌதம் கார்த்திக் எனக்கு நல்ல நண்பன். அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் எனக்கு தமிழ் சரியாக தெரியாததால் , தமிழ் கற்று கொடுத்தார். இசையமைப்பாளர் பாலமுரளி பாலுவின் பாடல்கள் அனைத்து கேட்க அருமையாக உள்ளது ”என்றார் நிக்கி கல்ராணி.
 
தயாரிப்பாளர் சங்க கௌரவ செயலாளர் ஞானவேல் ராஜா பேசியது :- கௌதம் கார்த்திக்கை வைத்து எங்கள் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளது. அந்த படத்தை “ ஹரஹர மகாதேவகி “ இயக்குநர் சந்தோஷ் தான் இயக்குகிறார் என்றார் ஞானவேல் ராஜா. இதை தொடர்ந்து ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கவுள்ள அப்படத்தின் டைட்டில் “ இருட்டு அறையில் முரட்டு குத்து “ என அறிவித்தார் இயக்குநர் சந்தோஷ்.