டிசம்பர் 23 -ல் இயக்குநர் ராமின் ‘தரமணி ‘!

andrea_jerem_cute_wallpaperஇயக்குநர் ராமின் ‘தரமணி’ திரைப்படத்தின் பாடல்கள் நவம்பர் 20 ஆம் தேதியும், திரைப்படம் டிசம்பர் 23 ஆம் தேதியும் வெளியாக உள்ளது….

taramani4ஐ டி தொழிற்சாலைகளின் சொர்க்க வாசலாக திகழ்ந்து கொண்டிருப்பது   ‘தரமணி’ என்பதை அனைவரும் அறிவர்.  ஆனால் இதுவரை யாரும் அறியாத மற்றொரு பக்கமும், தரமணிக்கு இருக்கின்றது. அந்த மற்றொரு பக்கத்தை மையமாகக் கொண்டு உருவாகி இருப்பது தான், ‘தங்க மீன்கள்’ ராம் இயக்கி, ‘ஜே எஸ் கே பிலிம்  கார்பொரேஷன்’ சார்பில் ஜே சதீஷ் குமார் தயாரித்து வரும் ‘தரமணி’ திரைப்படம்.

அறிமுக நடிகர் வசந்த் ரவி மற்றும் ஆண்ட்ரியா ஜெர்மியா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘தரமணி’ படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியானது.  இந்த டீசர் இளம்  ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. .யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகி இருக்கும்  பாடல் வெளியீட்டு விழா  வருகின்ற நவம்பர் மாதம் 20 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.  அதனைத் தொடர்ந்து வருகின்ற டிசம்பர் மாதம் 23 -ல், படம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், காலம் சென்ற பாடலாசிரியர் நா முத்துக்குமார், படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத், கலை இயக்குநர் குமார் கங்கப்பன் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் வீணா சங்கரநாராயணன் என வலுவான தொழில் நுட்ப கலைஞர்கள் தரமணி திரைப்படத்தில் பணியாற்றி வருகிறார்கள.