தங்கச் சங்கிலி அணிவித்து இயக்குநரை பாராட்டிய நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்

msb-dtrசமீபத்தில் வெளியான ‘8 தோட்டாக்கள்’ படத்தை இயக்கியவர் இயக்குநர் ஸ்ரீகணேஷ். இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

இந்தப் படத்தில் நடித்திருந்த நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் கதாபாத்திரம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது. திரைப்பட நடிகர்கள், இயக்குனர்கள், பத்திரிகையாளர்கள், ரசிகர்கள் என பலர் எம்.எஸ்.பாஸ்கரை நேரிலும், தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டும் பாராட்டி வருகின்றனர்.

 

இதனால், உற்சாகம் அடைந்த நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், தன்னுடைய கதாபாத்திரத்தின் நடிப்பை வெளிக் கொண்டுவரக் காரணமாக இருந்த இயக்குநர் ஸ்ரீகணேஷைப் பாராட்ட முடிவு செய்து, தனது வீட்டுக்கு அழைத்தார்.

 

msb11goldபட விமர்சனங்களைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளவே எம்.எஸ்.பாஸ்கர் அழைத்திருக்கிறார் என்று நினைத்து வந்த இயக்குநர் ஸ்ரீகணேஷ், திடீர் என அவர் தங்க சங்கிலி பரிசளித்து பாராட்டியதில் மிகவும்   நெகிழ்ந்து போனார்.