‘தங்க மகன்’ விமர்சனம்

thangamagan22அம்மா பாசத்தைத் தனுஷை வைத்து ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் காண்பித்த வேல்ராஜ், அப்பா பாசத்தை ‘தங்கமகனி’ல் காட்டியுள்ளார் .

தனுஷ் முதலில் எமி ஜாக்சன் மீது காதல் கொள்கிறார். அது திருமணத்தில் முடியும் என நினைத்தால் அப்பா அம்மா கூடவே இருப்பார்கள் என்று தனுஷ் வற்புறுத்தவே, எமி மறுக்க ,உறவு முறிகிறது. பிறகு சமந்தாவுடன் திருமணமாகிறது. கூட்டுக் குடும்பமாக வாழ்கிறார்கள்.

தனுஷின் தந்தை கே.எஸ். ரவிகுமார் அரசு அலுவலகத்தில் வேலை பார்க்கிறார். மேலதிகாரியின் முறைகேடான பணத்தை வீட்டில் வைத்து அவரைக் காப்பாற்ற உதவி செய்யப் போகிறார். ஆனால் அந்தப் பணம் காணாமல் போகிறது. மேலதிகாரி அவரை சந்தேகப்படவே வேலைக்கே ஆபத்தாகி விடுகிறது. அவமானம், விரக்தியில் ரவிகுமார் தற்கொலை செய்து கொள்கிறார்.காரணம் யாருக்கும் தெரியவில்லை.

தன் தந்தையின் மரணத்துக்கு என்ன காரணம் என்று கண்டுபிடிக்க தனுஷ் அலையாய் அலைகிறார்.

காரணம் கண்டறிந்தாரா? த்தை துடைத்தாரா? அவர் வாழ்வில் முன்னேறினாரா என்பதே முடிவு.

முதல் பாதியில் தனுஷ் எமி, தனுஷ் சமந்தா என சிருங்கார- ரொமான்ஸ் காட்சிகளிலேயே கழிகிறது. அப்பா கே.எஸ்.ரவிகுமார் மரணத்துக்குப்பின் தனுஷ் ஆளே மாறிப் போய்விடுகிறார். மகனாக தன் தந்தையைப் பழிச் சொல்லிலிருந்து காப்பாற்ற அவர் படும்பாடு தங்கமகனாக நினைக்க வைக்கிறது.

ரொமான்ஸ் காட்சிகளிலும் தந்தை மரணத்துக்குப்பின் போராடுவதிலும் தனுஷ் நடிப்பில் குறை வைக்க வில்லை. ஜோடிகளில் எமியை விட சமந்தா செம க்யூட்.இருவருக்கள் செம ஹெமிஸ்ட்ரி. சமந்தா  வெட்கப் படுவதே அழகு வெளியூர் சரக்கு எமி ஒரு உமி. அதனால் இனிக்க வில்லை.

அனிருத்  அளவான பாடல்களில் பதிகிறார். கதையின் பெரும்பகுதி வீட்டுக்குள்ளேயே நடக்கிறது அது பலவீனம்.  கே.எஸ்.ரவிகுமார் குணச்சித்திர திசையில் பயணிக்க ஆரம்பித்துள்ளார்.நல்ல பயணம். அம்மா ராதிகாவும் சோடை போகவில்லை. இவ்வளவு இருந்தும் கதையில் பார்முலா வாசனை அடிப்பதால் புதிதாக தெரியவில்லை.

‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில்காட்டிய சரிவிகித வணிக நறுமணத்தை இதில் வேல்ராஜ்   கோட்டை விட்டது எப்படி?  அதனாலேயே ‘தங்கமகன் ‘ பார்த்தவர் மனதில் நெடுநாள் ‘தங்கா’ மகனாகிவிட்டான்.