தணிக்கைக் கத்தரியே படாத ‘கயல்’ படம் டிச -25 -ல் வெளியாகிறது

kayal2எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ்   –  காட் பிக்சர்ஸ் பட நிறுவங்கள் இணைந்து அதிக பொருட்செலவில் பிரபுசாலமன் இயக்கத்தில் ‘ கயல் ‘படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறது.

சந்திரன் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஆனந்தி நடிக்கிறார்.  மற்றும் வின்சன்ட், ஆர்த்தி, ஜெமினி ராஜேஸ்வரி, யார்கண்ணன், பாரதிகண்ணன், ஜேக்கப்,    யோகிதேவராஜ், ஜானகி சொந்தர்,பிளாரன்ட் சி.பெரேரா,வெற்றிவேல்ராஜா, பாலசுப்பிரமணியம், மைம்கோபி, தரணி, அன்புமதி,ஜிந்தா, ஜென்னிஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

prabusolomonகலை   –  வைரபாலன்,பாடல்கள்  –  யுகபாரதி,இசை  –  டி. இமான், ஒளிப்பதிவு   –   வி.மகேந்திரன்

தயாரிப்பு     –   பி.மதன். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – பிரபுசாலமன்.

மைனா, கும்கி போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய பிரபுசாலமன் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள ‘கயல்’ திரைப்படம்  இம்மாதம் (டிசம்பர் ) 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் அன்று உலக முழுவதும் வெளியாகிறது.

படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ஆடியோ மற்றும் காட்சிகளில் ஒரு கட் கூட இல்லாமல் “ U  ” சர்டிபிகேட் வழங்கி பாராட்டி உள்ளனர்.

வழக்கமாக பிரபுசாலமன் படங்களின் அணைத்து  பாடல்களும்  ஹிட்டாகும். அதேமாதிரி கயல் படத்தின் பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டாகி உள்ளது.