தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் கே.பாலசந்தர் திரையரங்கம் திறப்பு விழா

drsangam0opnதமிழ் நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் சொந்த கட்டிடத்தில் பாலசந்தர் அரங்கம் திறக்கப் பட்டது   உதவி இயக்குநர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த, அவர்கள் இயக்கிய  குறும்படங்களை திரையிடுவதற்காகவும், கிரீன் மேட் மற்றும் போட்டோ சூட்  செய்வதற்கும் இயக்குநர்கள் சங்கக் கட்டிடத்தில் மினி  திரையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த  திரையரங்கிற்கு  இயக்குநர் சிகரம் பாலச்சந்தரின் நினைவாக ‘இயக்குநர் சிகரம் கே.பாலச் சந்தர் அரங்கம்’ என்று பெயர் சூட்டப் பட்டு. இயக்குநர் இமயம் பாரதிராஜாவால் இன்று திறக்கப்பட்டது.

நாற்பது உதவி இயக்குநர்கள் குறும்படங்களை இயக்கி உள்ளார்கள். அதில் இரண்டு குறும்படங்கள் இன்று திரையிடப் பட்டன. இரண்டு படங்களும் சிறந்த படங்கள் என்று இயக்கிய உதவி இயக்குநர்களை இயக்குநர் இமயம் பாரதிராஜா பாராட்டினார். பாலசந்தர்  தமிழ் திரையுலகில் பல வெற்றிகளை கண்டவர். பல சாதனைகளை பதிவு செய்தவர்.  அவரைப் போலவே இளம் இயக்குநர்களும், நாளைய இயக்குநர்களும் தங்களது சாதனைகளை பதிவு செய்ய வேண்டும் என்பது எனது ஆசை என்று பாரதிராஜா பேசினார்.dr-sangam

விழாவில் இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், பி .வாசு,கே. பாக்யராஜ் ஆகியோர் கலந்துகொண்டு குறும்படங்களை இயக்கிய உதவி இயக்குநர்களை பாராட்டி பேசினார்கள். கே.பாக்யராஜ் அவர்கள் சங்கத்தின்  தமிழ் வெள்ளித் திரை  என்ற  இணையதளத்தை துவைக்கி வைத்தார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் கலைபுலி. எஸ்.தாணு அவர்கள் கலந்து கொண்டு பாலச்சந்தர், பாரதிராஜா இருவரை பற்றிய குறும்படங்களை   துவக்கி வைத்தார்.

தலைவர்  விக்ரமன்  எல்லோரையும் வரவேற்று பேசினார். செயலாளர்  ஆர்கே.செல்வமணி, பொருளாளர்  வி.சேகர் இருவரும் சிறப்புரையாற்றினார்கள்.