தயாரிப்பாளருக்கு ஜோடியாகும் சாந்தினி..!

‘கறிச்சோறு’ படத்துக்காக தயாரிப்பாளருக்கு ஜோடியாகும் சாந்தினி..!
Tag Entertainment சார்பில் தயாரிக்கப்படும் புதிய திரைப்படம் ‘கறிச்சோறு’.

இந்தப் படத்தில் இந்த நிறுவனத்தின் உரிமையாளரான தயாரிப்பாளர் வெண் கோவிந்தாவே முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சாந்தினி நடிக்கவுள்ளார்.

மேலும், ‘மைம்’ கோபி, ராதாரவி, போஸ் வெங்கட், டேனியல், வையாபுரி, அஷ்வின், சசிகுமார், வெங்கட் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

உடைகள் – ராஜேஷ், உடை வடிவமைப்பு – கவிதா சாச்சி, தயாரிப்பு நிர்வாகம் – கிருஷ்ண பாண்டியன், இணை இயக்குநர் – ஜெய் பரமசிவம், தினேஷ் குமரன், சண்டை பயிற்சி – ராம்போ விமல், கலை இயக்கம் – சரவணன் அபிராமன், படத் தொகுப்பு – சான் லோகேஷ், இசை – சிவா பத்மாயன், ஒளிப்பதிவு – கெளதம் ஜார்ஜ், எழுத்து, இயக்கம் – விஜி வெங், தயாரிப்பு – டாக்டர் கோவிந்தா பிரதர்ஸ்.

இந்தப் படத்தின் துவக்க விழா  நடைபெற்றது. இந்த விழாவில் பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா, வெங்கட், டேனியல், சாந்தினி, வெண்   கோவிந்தா மற்றும் படத்தில் பங்கு பெறும் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.