‘திட்டம் போட்டு திருடற கூட்ட’த்தில் சேர்ந்த நடிகர் பார்த்திபன்!

tptkஹீரோ, வில்லன், இயக்குநர், தயாரிப்பாளர், வசனகர்த்தா, புதுமை விரும்பி என  பல முகங்கள்  நடிகர் பார்த்திபன் ராதாகிருஷ்ணனுக்கு உண்டு. பலதரப்பட்ட மக்களையும்  தன்னுடைய தனித்துவமான நடிப்பால் மயக்கி, தன் கட்டுக்குள் வைத்திருப்பவர் நடிகர் பார்த்திபன் .இயக்குநர் விக்னேஷ் சிவனின்  ‘நானும் ரௌடி தான்’ திரைப்படத்தின் மூலம்  வில்லன் கதாப்பாத்திரத்திற்கே புதியதொரு உருவத்தை கொடுத்த பார்த்திபன் ராதாகிருஷ்ணன், தற்போது அறிமுக இயக்குநர் சுதர் இயக்கி வரும் ‘திட்டம் போட்டு திருடற கூட்டம்’  திரைப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு துவங்கிய இதன் படப்பிடிப்பில் இன்று இணைந்தார் நடிகர் பார்த்திபன். ‘டூ மூவி பஃஃப்ஸ்’ மற்றும் ‘அக்ராஸ் பிலிம்ஸ்’  தயாரிபில் உருவாகி வரும் இந்த ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ திரைப்படத்தில், கயல் சந்திரன் மற்றும் சாட்னா  டைட்டஸ் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து  வருகின்றனர்.

“எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் சரி. அதை அப்படியே உள்வாங்கி திரையில் பிரதிபலிக்கும் திறமை பார்த்திபன் சாருக்கு தான் உண்டு. இந்த கதாப்பாத்திரத்தை பற்றி இயக்குநர் சுதர் என்னிடம் விவரிக்கும் போதே, பார்த்திபன் சார் தான் இதற்கு சரியான நபர் என்பதை நாங்கள் முடிவு செய்துவிட்டோம். அதேபோல் அவருக்கும்  இந்த கதாப்பாத்திரம் ரொம்பவே பிடித்து போய்விட்டது. அவ்வளவு ஏன்..இந்த கதாப்பாத்திரத்திக்கான  கெட்டப்பை உருவாக்கியதே பார்த்திபன் சார்  தான். அதுமட்டுமின்றி தமிழ் திரையுலகின் மூத்த இயக்குநர் என்ற வரிசையில்,பல யோசனைகளையும், கருத்துகளையும்  பார்த்திபன் சார் எங்களுக்கு வழங்கியது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முற்றிலும் வித்தியாசமான மனிதருக்கு ஏற்ற ஒரு வித்தியாசமான கதாப்பாத்திரத்தை எங்கள் ‘திட்டம் போட்டு திருடற கூட்டம்’ படத்தின் வாயிலாக ரசிகர்கள் உணர்வர்…”என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்  ‘டூ மூவி பஃஃப்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளர் பி. எஸ். ரகுநாதன்.

ஒளிப்பதிவாளர் ஜோ மார்ட்டின் (வில் அம்பு), இசையமைப்பாளர் அஷ்வத் (நளனும் நந்தினியும்), படத்தொகுப்பாளர் வெங்கட் (மிருதன்), கலை இயக்குநர் ரெமியன் மற்றும்   ஸ்டண்ட் கோரியோகிராபர் பில்லா ஜெகன்  என பல திறமை படைத்த தொழில் நுட்ப கலைஞர்கள் இந்த படத்தில் பணிபுரிவது,  ‘திட்டம் போட்டு திருடற கூட்டம்’  படத்திற்கு மேலும் சிறப்பு.