‘தியா’ விமர்சனம்

 

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி நடிப்பில் உருவான ‘கரு’  படம்தான்  பிறகு லைகாவின் ‘கரு’  என மாறறப் பட்டது. அதுதான் இப்போது  ‘தியா’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.

கருவில் கலைக்கப்பட்ட கரு எப்படி, தன்னைக் கருவிலேயே கலைக்க காரணமானவர்களைப் பேயாக வந்து பழிவாங்குவதே ‘தியா’ படத்தின் கதை.

நாயகி சாய் பல்லவி  மருத்துவக் கல்லூரி மாணவி,  படிக்கும் போது நாயகன் நாக சவுரியாவை காதலிக்கிறார். காதல் எல்லை தாண்டி காமத்தில் விழுந்ததால் படிப்பை முடிப்பதற்கு முன்பாகவே கர்ப்பமடைந்துவிடுகிறார். இது இருவரது பெற்றோருக்கும் தெரியவரவே, காதலுக்கு சம்மதிக்கிறார்கள். அதே சமயம் ஒரு நிபந்தனை போடுகிறார்கள். படிப்பை முடித்து வாழ்க்கையில் செட்டிலான பிறகு தான் திருமணம், என்று முடிவுக்குசெய்கிறார்கள். சாய் பல்லவியின் வயிற்றில் வளரும் கருவைக் கலைத்துவிட வேண்டும் என்று முடிவு எடுக்கிறார்கள்.

 திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததால் பெற்றோர்களின் இந்த முடிவுக்கு நாக சவுரியா சம்மதம்  சொல்கிறார்.  ஆனால் இதில் சாய் பல்லவிக்கு விருப்பம் இல்லை .ஆனாலும்,சாய் பல்லவியின் கரு கலைக்கப்படுகிறது. 5 வருடங்களுக்குப் பிறகு காதலர்கள் தம்பதிகளாகிறார்கள். தங்களது மண வாழ்க்கையை த் தொடங்குகிறார்கள்.ஆனாலும், கலைக்கப்பட்ட தனது கருவை  எண்ணி சாய் பல்லவி தவிக்கிறார். கருவிலேயே அழிக்கப்பட்ட அந்தக் குழந்தைக்கு தியா என்று பெயர் வைத்து மனசுக்குள் வாழ்கிறார். அது மட்டுமல்ல, அக்குழந்தையின் ஒவ்வொரு  வளர்ச்சி நிலையையும் ஓவியமாக வரைந்து அந்த நினைவோடு வாழ்கிறார்.

ஐந்து வயதுக் குழந்தையாக திடீரென்று தோன்றும் தியா , தனது தாத்தா, பாட்டி, மருத்துவர் என தான் கருவாக இருக்கும் போது, தான் அழிவதற்கு காரணமானவர்களைப் பேயாக வந்து பழிவாங்குகிறார்.

இதனை அறிந்த சாய் பல்லவி, தியாவிடம் இருந்து தனது கணவரைக் காப்பாற்றப்  போராடுகிறார். அவரது கணவரோ  மனைவி சாய் பல்லவி சொல்வதை நம்பவில்லை. உதாசீனப்படுத்துகிறார். இறுதியில் பேய் தியா ஜெயித்தாளா? தாய் சாய் பல்லவி ஜெயித்தாரா என்பது தான் படத்தின் மீதிக்கதை.அதாவது பேயா தாயா? யார் வெற்றி பெற்றார்கள் என்பதே கதை.

 தமிழ் சினிமாவில் வெளியாகும் பேய்ப் படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு படமாக இந்த ‘தியா’-வின் திரைக்கதையை கையாண்டிருக்கிறார்.பேபியை பேயாக  காட்டியள்ள இயக்குநர் விஜய்,

 சாய் பல்லவி, தனது முதல் படத்திலேயே  கதாபாத்திரத்தை உணர்ந்து அளவாக நடித்திருக்கிறார். திறமையை முழுவதுமாக காட்ட இதில் வாய்ப்பு குறைவு தான் என்றாலும், கிடைத்த இடங்களில் தனது திறமையை நிரூபித்திருக்கிறார்.

நாக சவுரியாவும் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிரார்.

 வசனமே இல்லாமல் தனது கண்களாலேயே தனது அம்மாவுடன் வாழ முடியாத தனது ஏக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் தியா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுமி வெரோனிகா அரோரா.

சப்-இன்ஸ்பெக்டராக வரும் ஆர்.ஜே.பாலாஜியின்  பாத்திரம் எரிச்சலின் உச்சம்.

ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவின் கேமரா,  நம்மை திகிலடைய வைக்கும் அளவுக்கு செயல்பட்டிருக்கிறது.  அவ்வப்பொழுது  சிலிர்க்கச் செய்துவிடுகிறது இசையமைப்பாளர் சாம் சி.எஸ்-ன் பின்னணி இசை.

தொழில்நுட்பங்களைக் கையாண்ட முறை, காட்சிகளை நகர்த்திய விதம் என்று அசத்தியிருக்கும் விஜய் பாராட்டு பெறுகிறார்.

 

கருவிலே கலைக்கப்படும் குழந்தைகளில், இந்திரா காந்தியோ, சச்சின் டெண்டுல்கரோ போன்று பல சாதனையாளர்கள் உருவாகலாம், என்று படத்தின் இறுதியில் கார்டு  போடுகிற இயக்குநர் விஜய், கருக்கலைப்பு தவறு என்று ஒரு குழந்தையின் கோணத்தில் சொல்லியிருக்கிறார்.