’திரெளபதி’ விமர்சனம்

விழுப்புரம் மாவட்டத்தில் அந்த அழகான கிராமத்தில் சிலம்பம் ஆசிரியராக இருக்கிறார் ருத்ர பிரபாகரன்(ரிச்சர்ட்). அவரின் மனைவி திரௌபதி(ஷீலா ராஜ்குமார்). 
வெளியூரில் இருந்து வரும் அரசியல்வாதி உள்ளிட்ட கும்பல்  
கிராம நலனை பாதிக்கும் வகையில்,போர் போட்டு தண்ணீர் எடுத்து விற்பனை செய்வதை ஊரும், திரௌபதி குடும்பமும் எதிர்த்து நிற்கிறது. இதனால பாதிக்கப்பட்ட அந்தக் கும்பல் குறுக்கு வழியில் சூழ்ச்சி செய்கிறது . திரௌபதியின் தங்கைக்கும், வேறு சாதியை சேர்ந்த இளைஞருக்கும் பதிவுத் திருமணம் நடந்ததாக போலிச் சான்று தயாரித்து அந்த பெண்ணின் தந்தைக்கு அனுப்பி வைக்கிறார் அந்த அரசியல்வாதி . அவமானம் தாங்க முடியாமல் தந்தை தற்கொலை செய்து கொள்கிறார்.

அரசியல்வாதி மற்றும் வக்கீல் கோஷ்டியினர்  திரௌபதி மற்றும் அவரின் தங்கையை கொலை செய்து அந்த பழியை பிரபாகரன் மீது போடுகிறார்கள்.
 பிரபாகரன் தான் அந்தக் கொலையை செய்துவிட்டார் என திசை திருப்புகின்றனர்.போலீஸ் ருத்ர பிரபாகரை  கைது செய்து சிறையில் அடைக்கிறது.இதனால் சிறைக்கு செல்லும் ரிச்சர்ட், ஜாமீனில் வெளியே வந்து போலி பதிவு திருமண கும்பலை பழிவாங்குவதோடு, தனது மனைவி திரெளபதியின் சபதத்தை நிறைவேற்றும் பணியிலும் ஈடுபட, அதற்குள் அவரைப் போலீஸ் சிறை பிடித்துவிடுகிறது. அவரது மனைவி திரெளபதியின் சபதம் நிறைவேறியதா இல்லையா, அது என்ன சபதம், என்பதே மீதிக்கதை.

ரிச்சர்ட் இந்த படத்தில் ஒரு சிலம்ப  வாத்தியாராக நடித்திருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பின்பு இப்படம் அவருக்கான முகவரியைத் தேடிக் கொடுத்திருக்கிறது. ‘டு லெ ட்’ படத்தின் மூலம் பலரையும் ஆச்சரியப் படுத்திய நாயகி  ஷீலா, திரௌபதி கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம்.வழக்கறிஞராக வரும் கருணாஸ் மனதில் நிற்கிறார். கருணாஸ் ஒரு பொது நல வழக்கறிஞராக சமூக அவலங்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பவராக நடித்திருக்கிறார். நீண்ட வசனங்களும் பேசுகிறார்.  .சமூகத்தில் நடக்கும் ஆணவ  கொலைகள்  குறித்தும், பெண்களை குறிவைத்து வேட்டையாடும் சில ஓநாய்களின் முகத்திரையை  கிழித்து எறிந்துள்ள இயக்குநர்  மோகன்.ஜி.அதன் பின்னால் ஒளிந்துள்ள சாதி பின்னணி குறித்தும் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை தைரியமாகக் கூறி உள்ளார்.

வட சென்னையை மையமாக வைத்து ‘பழைய வண்ணாரப்பேட்டை’ என்ற படத்தை இயக்கிய மோகன்.ஜி, தனது இரண்டாவது படமான இப்படத்தில், வட மாவட்ட மக்களை பற்றியும், அவர்களது வீரம், கோபம் பற்றியும் பேசியிருக்கிறார்.

சில சமூகத்திற்கு எதிரான ஒடுக்குதல் நடைபெற்று வருகிறது என்பது உண்மைதான். அதே நேரம் அவர்களுக்கான சட்ட பாதுகாப்பைத் தவறாகப் பயன்படுத்தி மற்றவர்களைத் துன்புறுத்துவதும் நடக்கிறது என்பதும் இன்னொரு பக்கம் உண்மைதான்.நாணயத்தின் இரு பக்கங்கள் போல இவை நடந்து கொண்டு இருக்கின்றன. இதுவரை  ஒரு பக்கத்தை மட்டும் பார்த்த மக்களுக்கு இன்னொரு பக்கத்தையும் காட்டியிருக்கிறார் இயக்குநர்.அதுதான் ‘திரெளபதி’ படம்.
இது காதலுக்கு எதிரான படம் அல்ல பருவக் கிளர்ச்சியைக் காதல் என்று தவறாகப் புரிந்து கொள்ளுதலுக்கு எதிரான படம்.

படத்தில் போலி பதிவு திருமணங்கள் குறித்து அக்குவேறு ஆணிவேராக பிரித்து மேய்ந்து அதிர வைத்துள்ளார். பெண்கள் அதிலும் குறிப்பாக கல்லூரிப்பெண்கள் பார்க்கவேண்டிய படம் இது.காதல் விஷயத்தில் நடக்கும் ஆணவக்கொலை எனும் சாதி வெறி பிடித்தவர்களின் முகத்திரையை கிழித்து எறிந்துள்ளார்  இயக்குநர் மோகன்.
மொத்தத்தில் சமூக விழிப்புணர்வு தரும் பெண்களுக்கான படம் என்றே சொல்லலாம்.