‘தெரியாம உன்ன காதலிச்சிட்டேன்’ விமர்சனம்

Theriyama-Unna-vrtவெறும் இனக்கவர்ச்சி எல்லாம் காதல் அல்ல. மனம் பக்குவப்பட்டபின் வருவதே உண்மையான காதல் என்று சொல்லும் படம்.

வேலையில்லாத இளைஞன் விஜய் வசந்த், ரஸ்னாவைக் காதலிக்கிறார். ரஸ்னாவின் மாமாவோ உங்களுக்கு 15 நாட்கள் அவகாசம் தருகிறேன். வாழ்க்கையைப் புரிந்து கொண்டு வாருங்கள் நானே திருமணம் செய்து வைக்கிறேன் என்கிறார். டூர் போவதாக சொல்லி கொடைக்கானல் போகிறார்கள் காதலர்கள்.அங்கு வேலை கிடைக்காமலும்  கிடைத்த வேலையில் சரியான வருமானம் வராமாலும் கஷ்டம். ரஸ்னாவுக்கு சமையல் தெரியாமலும், வீட்டு வேலை தெரியாமலும்  டபுள் டார்ச்சரை அனுபவிக்கிற விஜய் வசந்த் என்னை ஆளை விட்டுவிடு என்ற முடிவுடன் ஒரே வாரத்தில் திரும்பிவிட.. முடிவு என்ன என்பதே படம்.

படத்தின் முதல் பாதியில் வழக்கமான வழிதல் ,துரத்தல் என்று காதல் காட்சிகளில் பல்லைக் காட்டுகிற படம், பிற்பாதியில் கலகலப்பு காட்சிகள் சுவையான காட்சிகள் என்று நிமிர்ந்து அமர்ந்து சிரிக்க வைக்கிறது.

விஜய் வசந்த் தனக்கு கொடுத்த பொறுப்பை சரிவர செய்திருக்கிறார். தேவதை என்று உருகுவதும் வெளியூரில் சிரமப்படுவதும் என சரியாகச் செய்துள்ளார்.

நாயகி  ரஸ்னா அப்பாவித்தனத்தில் ஜூனியர் ஜெனிலியாவாக தெரிகிறார்  சிலகாட்சிகளில் ஓவர் ஆக்டிங்கும் காட்டுகிறார்.

முற்பாதி சவ சவ பிற்பாதி கல கல என்று பொழுது போக்குப் படமாக வந்துள்ளது.

நல்லதொரு கருத்தைப் படமாக எடுத்துள்ள இயக்குநர் ராமு, நயம்படக் கூறியிருந்தால்  நன்றாக இருந்திருக்கும்.